Skip to main content

Posts

Showing posts from March, 2021

நிம்மதியை தேடி..

*தொலைத்த* அத்தனையிலும் துரோகத்தின் சாயல்.... *கிடைத்த* அத்தனையிலும் நிம்மதியின் சாயல்....!!! உன் எண்ணம் விண்ணைத் தொட வேண்டுமென்றால்..... உன் வியர்வை மண்ணைத் தொட வேண்டும்....!!!!! அச்சம் இருக்கும் வரை முன்னேற்றத்திற்கு இடமில்லை..... முயற்சி இருக்கும் வரை பின்னடைவுக்கு இடமில்லை..... தன்னம்பிக்கை இருக்கும் வரை தோல்விக்கு இடமில்லை.....!!!! ஏமாற்றம் வலியாய் தெரிந்தாலும்..... நல்வழியைக் காட்டும் வாழ்க்கைக்கு...!!!! கெட்டவன் சாகும் போன்ற தான் கஷ்டப்படுவான்.... நல்லவன் சாகுற வரைக்கும் கஷ்டப்படுவான்....!!!! நிஜங்கள் எழுதும் கதையில்..... நினைவுகள் மட்டுமே இங்கு கதாபாத்திரங்கள்.....!!!! வலிகளைத் தாங்கும் பொறுமையும்..... அதைக் கடந்து செல்ல சிறு புன்னகை இருந்தாலே போதும்.... எதுவுமே பெரிதாகத் தெரியாது....!!!! நீங்கள் பெரிய வெற்றியை அடையப் போகிறீர்கள் எனில்.... இரண்டு விஷயங்கள் நடந்தே தீரும்....!!! ஆரம்பத்தில் தோல்வியை மட்டுமே காண்பீர்கள்..... உங்கள் முயற்சி அதிகம் கேலி செய்யப்படும்....!!;! தைரியத்தின் முதல் சோதனை.... தோல்வியில் மனம் தளராமல் இருப்பது தான்....!!!!! நம்மை மிகச் சரியாக அறிந்தவர்கள்.....

மாணவர்களுக்கு ரகசிய திட்டம் ஒன்று உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு

    12 -ஆம் மாணவர்களுக்கு ரகசிய திட்டம் ஒன்று உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு!- காணொளி காட்சி https://youtu.be/g9WbOiesaWU

பணம்..

பலரின் ஆறாத காயங்களுக்கு காரணம் மனங்கள் மட்டுமல்ல பணமும் தான்.! உயிர் இருக்கும் உறவுகளும் நட்புகளும் கூட உயிரற்று போகிறது உயிரில்லாத இந்த பணத்தால். இந்த உலகில் உறவுகளை பார்க்க மட்டுமல்ல.. கடவுளை பார்க்க கூட பணம் தேவைப்படுகின்றது. பயணம் இல்லாமல் கூட வாழ்க்கை இருக்கலாம் ஆனால் பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. பணத்தால் கடிகாரத்தை வாங்கி விட முடியும் ஆனால் நேரத்தை வாங்க முடியாது என்பதை என்றும் நினைவில் வைத்திருங்கள்.   பணத்தால் மெத்தை கட்டில்களை வாங்கி விட முடியும் ஆனால் நிம்மதியான தூக்கத்தை வாங்கிவிட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தாயின் கருவறையில் இருந்து வெளிவரவும் பணம் இறுதியில் கல்லறைக்கு போகவும் பணம். இந்த பணத்தால் அழிந்தது மனிதர்களின் நல்ல குணம். வாழ்க்கையில் ஒருவித மகிழ்ச்சிக்கு பணம் ஒரு தேவை வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு பணம் மட்டுமே தேவையில்லை. பணம் சில சமயம் நண்பனை எதிரியாகும்.. எதிரியை நண்பனாக்கும். பெற்றுக்கொள்ள இரு கைகள் நீண்டிருக்க கொடுத்துச்செல்ல ஒரு கையும் நீள்வதில்லை. குணம் இல்லாதவருக்கு இவ்வுலகில் இடமில்லை என்பது சென்று.. பணமில்லாதவருக்கு இவ்வுலகில் இடமில்லை என்றாகிவிட்ட

தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு ? தமிழக அரசு தொடர் ஆலோசனை

  தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக சுகாதாரத்துறையினர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக சுகாதாரத்துறையினர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 500-க்கும் கீழ் இருந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் அதிகமாகியுள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறப்பு , தேர்தல் பிரசாரத்தால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் ஏப்ரல் 2-வது வாரம் முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, தனியார் துறை ஊழியர்களை வீட்டில் இருந்து பணியமர்த்தல் ஆகியவை அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை, கோவை, செங்கல்ப்பட்டு உள்ளிட்ட கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள். வெளியான திடீர்அறிவிப்பு.!!!

    தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார் தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ம

இயற்கை..

 மனிதன் தனது அறிவுக்கூர்மையால் எவ்வளவோ சாதித்தாலும், இயற்கை ஒரு சிலுப்பு சிலுப்பினாலே நிலைகுலைந்து போகும் சூழல் இன்றுவரை நீடிக்கிறது. இதோ, தற்போது மணல் புயல் தனது விளையாட்டைக் காட்டியதில் உலக வர்த்தகமே ஸ்தம்பித்துள்ளது. நம் அறிவுக்கூர்மையின் அடையாளமாக அமைந்திருப்பது சூயஸ் கால்வாய். மத்திய தரைக்கடற்பரப்பையும், செங்கடலையும் இணைக்கக்கூடிய சுமார் 196 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சூயஸ் கால்வாய், முழுக்கமுழுக்க மனித உழைப்பால் உருவாக்கப்பட்டது. தினசரி உலக வர்த்தகத்தில் 12% இதன்வழியாகத்தான் நடந்துவருகிறது. இந்த கால்வாயில் நாளொன்றுக்கு 50 கப்பல்கள்வரை பயணிக்கின்றன. இந்த கால்வாய் இல்லையென்றால் ஆப்பிரிக்காவையே ஒரு சுற்று சுற்றித்தான் கப்பல்கள் பயணிக்க வேண்டியிருக்கும். அத்தகைய பயண நேரத்தை வெகுவாகக் குறைப்பதால் இக்கால்வாய், வர்த்தக உலகில் முக்கியத்துவம் பெறுகிறது.  கடந்த செவ்வாயன்று காலையில், தைவான் நாட்டைச்சேர்ந்த எவர்கிரீன் என்ற பிரமாண்டமான வர்த்தகக்கப்பல் (220,000 மெட்ரிக் டன் எடை, 1,312 அடி நீளம்) இந்த கால்வாயைக் கடந்துகொண்டிருந்தபோது பலமான மணல் புயல் வீசியிருக்கிறது. இந்த மணல் புயல் குறித்தெல்லா

பொதுத்தேர்வுக்கு முன் மாடல் தேர்வு : பெற்றோரிடம் வலுக்கிறது எதிர்பார்ப்பு

    பொதுத்தேர்வு நடத்தும் முன்பு, மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரித்து, மாடல் தேர்வு நடத்தினால், மாணவர்கள் கற்றல் நிலை தெரியவரும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வழக்கமாக அரையாண்டு தேர்வுக்கு முழு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.இதற்கு பிறகு, மூன்று திருப்புதல் தேர்வுகளை மாணவர்கள் சந்தித்த பிறகு, பொதுத்தேர்வு எழுதுவர்.  ஆனால், கொரோனா தொற்று பரவுவதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த ஜன.,ல் தான் பள்ளிகள் திறக்கப்பட்டன.ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் முழுமையாக பங்கேற்காததால், பள்ளி திறந்த பிறகு தான், பாடங்கள் கையாளப்பட்டன. தற்போது சிலபஸ் முடிக்கப்பட்ட நிலையில், செய்முறை பொதுத்தேர்வுக்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டது.தேர்தலுக்காக பள்ளிகள் ஒருவாரம் மூடப்பட்டிருக்கும்.  அதன் பின், மாவட்ட அளவில் ஆசிரியர் குழுக்களை கொண்டு வினாத்தாள் தயாரித்து, மாடல் பொதுத்தேர்வு நடத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.பெற்றோர் சிலர் கூறுகையில், ' பிளஸ் 2 மதிப்பெண்கள் கொண்டு தான், உயர்கல்வியில் பாடப்பிரிவுகள் தேர்வு செய்ய முடியும். மே மாதம் தேர்வு நடத்த, அட்டவணை வெளியிடப

உலகம் போலியானது..

 ஒரு மருத்துவர், நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால், வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்... விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்... அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தார். மருத்துவரைக் கண்டதும் #கோபமாக, "என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்... ஏன் நீங்கள் இங்கு வர இவ்வளவு தாமதம்? உங்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கிறதா?" என்று கதறினார். மருத்துவர் புன்னகையுடன், "மன்னியுங்கள், நான் மருத்துவமனையில் இல்லை... எனக்கு அழைப்பு வந்ததும் என்னால் இயன்ற அளவு விரைந்து வந்தேன்... சற்று #பொறுமையாக இருங்கள்" என்று கூறினார். "பொறுமையாக இருக்கவா?" அந்த தந்தை மேலும் ஆத்திரத்துடன், "உங்கள் மகன் இவ்வாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால் நீங்களும் பொறுமையாக இருப்பீர்களா? உங்கள் மகன் இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்" என்று கொந்தளித்தார். மருத்துவர் சிரித்த முகத்துடன், "எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம், நீங்களும் கடவுளிட

தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு: ஐகோர்ட் தடை

அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை ஏப்.,30 க்குள் நடத்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. ராமநாதபுரம் மாவட்டம் கிடாதிருக்கை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜேக்கப் ஏற்கனவே தாக்கல் செய்த மனு:தலைமையாசிரியர்களுக்கு முதலில் பொது இடமாறுதல் கலந்தாய்வு, பின் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவது வழக்கம். 2020 ல் கொரோனா ஊரடங்கால் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை. 2021ல் பொது இடமாறுதல் கலந்தாய்வு மூலம் சொந்த மாவட்டத்திற்கு செல்லும் எதிர்பார்ப்பில் இருந்தேன். பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பொது பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டது. பணியில் மூத்த தலைமையாசிரியர்கள் நடப்பு கல்வியாண்டில் பொது இடமாறுதல் கவுன்சிலிங்கை எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசின் நடவடிக்கை உள்ளது. இதில் விதிமீறல் உள்ளது. உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பொது பதவி உயர்வு கலந்தாய்விற்கு தடை விதிக்க வேண்டும். பொது இடமாறுதல் கலந்தாய்வு

இன்றைய சிந்தனை..

 ஒரு செயலை செய்வதற்கு முன் அதை ஏன்.? செய்ய வேண்டும் என்ற கேள்வியை உங்களிடம் கேளுங்கள்.! உங்களை நீங்கள் புரிந்து கொண்டால் தான்.. பிறரை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.! நீங்கள் எந்த அளவிற்கு மன உறுதியுடன் இருக்கிறீர்களோ.? அந்த அளவிற்கு வாழ்க்கையில் முன்னேறலாம். எண்ணங்கள் என்னும் மந்திர சாவியை சரியாக பயன்படுத்தினால்.. திறக்காத கதவுகளையும் திறக்க முடியும்.! அடுத்தவரை குறை சொல்வதை நிறுத்தும் போது தான் உண்மையான மகிழ்ச்சியை உணர தொடங்குவீர்கள். பகை எண்ணங்களுக்கு சக்தி கொடுப்பது வீட்டிற்குள் விஷ செடிகளை வளர்ப்பதற்கு சமம்.! பகையை வளர்த்து சக்தி பெறாமல்.. அன்பை வளர்த்து சக்தியை பெறுங்கள். உங்களை தாழ்த்திக்கொண்டு இன்னொருவரை உயர்வாக பேச வேண்டும் என்று அவசியம் இல்லை.! மிக பெரிய தோல்வியில் தான்.. மிக பெரிய வாய்ப்புக்கள் ஒளிந்திருக்கிறது. சந்தேகம் தரும் எண்ணங்களை நீக்கி.. நம்பிக்கை தரும் எண்ணங்களை சேர்த்தால்.. வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.!

கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் உணவு வகைகள் என்ன தெரியுமா?

  உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன. பார்லி: தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்து விடும். கத்திரிக்காய்: கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும். மீன்: மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள். நட்ஸ்: நட்ஸில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் ப

அயல்நாட்டுக்காரி..

ஒரு முறை #நேருவிடம் சில அமைப்பினர் மல்லுக்கு நின்றார்கள், அந்த #தெரசா மதமாற்றம் செய்கின்றார் அவரை நாட்டை விட்டு வெளியேற்று என குட்டிகரணம் அடித்தார்கள்.. #நேரு அமைதியாக சொன்னார், "வாருங்கள்  செல்வோம் அப்படி அவர் மதமாற்றம் செய்தால் இன்றே அனுப்பிவிடுவோம்" என சொல்லிவிட்டு #கல்கத்தா விரைந்தார்.. #அந்த_கோஷ்டிக்கு மகிழ்ச்சி தாளவில்லை, செல்வோம் அங்கே அந்தம்மா #ஞானஸ்நானம் கொடுத்துகொண்டிருக்கும், இன்றே தூக்கிவிடலாம் என மகிழ்வோடு சென்றார்கள்.. நேரு அவர்கள் உள்ளே நுழைய அக்கும்பலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அங்கே #தொழுநோயாளிகள் புண்களுக்கு சிலர் மருந்து இட்டுகொண்டிருந்தனர், சிலர் முதியவர்களுக்கு உணவு ஊட்டினர், சிலர் அவர்களை குளிப்பாட்டி கொண்டிருந்தனர்.. சீழ்பிடித்த அந்த நோயாளிகளை, மற்றவர்கள் அருகே செல்லும் அந்த வியாதிக்காரர்களை எந்த கூச்சமுமின்றி அவர்கள் பராமரித்து கொண்டிருந்தார்கள். ஜெபமாலையும், கர்த்தராகிய இயேசு வாழ்க, #அல்லேலூயா என்ற சத்தம் கேட்கும் என சென்றவர்களுக்கு கடும் அதிர்ச்சி.. நேரு கேட்டார் "இந்த நோயாளிகள் எந்த நாட்டுக்காரர்கள்".. #அந்த அமைப்பினர் சொன்னது "நம்

திட்டமிட்டபடி பிளஸ் 2 பொதுத்தேர்வு..

    தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி மே 3-ஆம் தேதி தொடங்கும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் பள்ளிகள் காலவரையற்று மூடப்பட்டன. இதையடுத்து மாணவா்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, இணையவழி, கல்வித் தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன. அதன்பின்னா் கரோனா தாக்கம் குறைந்ததால், பொதுத்தேர்வை எழுதும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இதற்கிடையே மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. தொடா்ந்து மே 3-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி மே 21-ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இதனால் அதற்கு மறுநாளான மே 3-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி தொடங்கப்படுமா? என கேள்விகள

யாரிடமும் கோபமே படாத ரகசியம்..!!

யார் எப்படி நடந்து கொண்டாலும் கோபமே படாதவர் அந்த துறவி. அவரை அவமானப்படுத்தினாலும் கூட கண்டுகொள்ள மாட்டார். பலர் எப்படி எப்படியோ முயற்சி செய்தும் அவரைக் கோபப்படுத்தவே முடியவில்லை! எப்படி இவரால் இருக்க முடிகிறது?என்று அந்த ரகசியத்தை அறிந்து கொள்வதில் அவரின் ஒரு சிஷ்யருக்கு ஆர்வம். தன் கேள்வியை துறவியிடமே கேட்டு விட்டார். துறவி அவரிடம் பொறுமையாக தான் யாரிடமும் கோபமே படாத ரகசியத்தை விளக்கினார். “ஒரு ஏரியில் காலியான படகில் அமர்ந்து தியானம் செய்வது என் நெடுநாள் வழக்கம். அப்படி ஒருமுறை தியானத்தில் இருந்தபோது நான் அமர்ந்திருந்த படகை வந்து முட்டியது ஒரு படகு." என் தியானம் கலைந்தது. ‘இப்படி அஜாக்கிரதையாக படகை முட்டவிட்டது யார்?’ என்று கோபமாகக் கண்களைத் திறந்து பார்த்தால்,அது ஒரு வெற்றுப்படகு! காற்றுக்கு அசைந்து அசைந்து வந்து நான் தியானம் செய்த படகு மீதி மோதியிருக்கிறது. என் கோபத்தினை அந்தப் படகிடம் காட்டி எதுவும் பிரயோஜனம் உண்டோ சீடனே? யாராவது என்னைக் கோபப்படுத்தும்போது எனக்கு அந்த சம்பவம் நினைவுக்கு வரும். இதுவும் "வெற்றுப் படகுதான்" என்று அமைதியாகி விடுவேன்” என்றார். கோபத்தின் ப

ஏப் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்.!

  ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக ஓரளவு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு தற்போது தான் திரும்பி வருகின்றனர். ஆனால், கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து ஆலோசிக்க டெல்லியில் பிரதமர்  நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.  மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தகுதியுள்ள அனைவரும் உடனடியாக பதிவு செய்து தடுப்பூசி போட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.  விஞ்ஞானிகள் மற்றும் உலக விஞ்ஞானிகள் அமைப்புகளின் ஆலோசனையின்படி, குறிப்பாக COVISHIELD கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸை 4-வது மற்றும் 8-வது வாரத்தில் வழங்க வலியுறுத்து

இன்றைய சிந்தனை..

 கணிப்புகளோ, திணிப்புகளோ, நீயே அறிந்தவர் ! ! இனியொருபோதும் வேண்டாம் இந்த பாசிச ஆட்சி . ஒற்றுமை தேசம் சிதைபடாமல் இருக்க ஆட்சிமாற்றம் ஒன்றே தீர்வு.  அதை உம் அருளைக்கொண்டு நடத்திக்காட்டுவீராக ! மாட்டை நேசித்து மனிதனை கொல்வது மாற, மனிதத்தை நேசிப்போர் அரியனை ஏற நீரே அருள் புரியும் ! உம் தீர்ப்பு எதுவாகினும் ஏற்பது எம் பணி. ஆனாலும் கேட்பதும் கெஞ்சுவதும் உமக்கு பிடிக்கும் தானே ! அதனால் கேட்கிறோம். நல்ல தீர்ப்பை வழங்கும் இறைவனே ! பொல்லாதோர் இல்லாத எம் தேசம் மீண்டும் வேண்டும். இந்துவோ, முஸ்லிமோ, கிருத்துவரோ, சீக்கியரோ, பௌவுத்தரோ, எவராகினும் உம் படைப்பே. அனைவரும் இந்தியர் என்ற குடையின் கீழ் இணைந்து வாழ இந்த ஆட்சி உகந்ததல்ல. ஒரு சார்பை தூக்கிப்பிடித்து, மறு சார்பை தாக்கி அழிக்கும் பாசிசம் வேண்டாமே. மக்கள் எப்படியோ அப்படியே ஆட்சியாளன் என்ற உம் வாக்கு நினைவில் வருகிறது. பிழை செய்யும் எங்களுக்கு பிழையான ஆட்சியாளனை தந்துவிடாதேயும் ! வாக்கு எந்திரங்கள் தவறு செய்யலாம். பெட்டிகளும் மாறலாம்.  சூழ்ச்சிகாரனுக்கெல்லாம் மேலான மாயவல்லவன் நீரல்லவா..! தீய சூழ்ச்சியை உம் தூய அற்புதத்தால்  மாற்றிக்காட்டும். ஏப்ர

G.O -327- கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

      ORDER : Whereas on considering the recommendations of the expert team of the Doctors and Public Health Specialists and based on the directives of Government of India , Ministry of Home Affairs , State - wide lockdown was extended from time to time and lastly extended till 24.00 hours of 31.03.2021 under the Disaster Management Act , 2005 in G.O. ( Ms ) . No.318 , Revenue and Disaster Management ( DM - IV ) Department , dated : 28.02.2021 .  2. In the G.O. 1 " read above , following the Standard Operating Procedures , Final year Classes for all Colleges / Universities including Arts , Science , Technical , Engineering , Agriculture , Fisheries , Veterinary Colleges were permitted to function from 07.12.2020 . Further , Hostels for the above college students were also permitted .  3.In the G.O. 2nd read above , following the Standard Operating Procedure , all Under Graduate and Post Graduate Classes ( including Diploma Classes ) in all Colleges / Universities including Arts ,

இறை..

 நான்  யார்? அதைக் கற்றேன்- இதைக் கற்றேன்- அறிவாளி நான் என இறுமாந்தேன். அதைச் செய்தேன்- இதைச்செய்தேன- சாதனையாளன்  நான் என, சவடால்  விட்டேன். அன்றொரு நாள் அதிகாலை, யாரே தீண்ட திடுக்கிட்டு  விழித்தேன். ஏதோ ஒன்று, ஏளனமாய் எனைப் பார்த்து சிரித்தது. யார் நீ என்றேன்? நீ தான் என்றது அது. நீதான நான் என்றால் பிறகு நான் யார் என்றேன். நான்தான் நீ என்றது. குழப்ப வந்த குட்டிச்சாத்தானா- என கோபமாய் கேட்டேன். நான் எத்தகைய  ஆற்றல் மிக்கவன் -அறிவாளி - என்னையே குழப்புகிறாயா என்று ஏளனமாய் கேட்டேன். அப்படியா சரி என்று அது ஒரு கேள்வி கேட்டது. நீ பெறும் அறிவாளிதானே- உன் அறிவைக்கொண்டு நீ உண்ணும் உணவின் உட்கூறுகளை தனித்தனியே பிரித்து- வைட்டமின்கள் ,தாது உப்புக்கள்,புரதம்  என அந்தந்த உறுப்புகளுக்கு தேவையானதை  தனித்தனியேஅனுப்பி  வைத்திடு என்றது. திடுக்கிட்டேன். உணவின் உள்நுழைந்து உட்கூறு பிரிக்கும் அறிவெனக்கேது. பிரித்தாலும் அந்தந்த உறுப்புகளுக்கு எங்ஙனம் அனுப்புவேன். சற்றே தடுமாறி நின்றேன். மீண்டும் கேட்டது நீ பெறும் ஆற்றல் உள்ளவன் தானே. உன் ஆற்றலைக்கொண்டு, ஒரு ஐந்து நிமிடம் உன் இதயத்தை இயக்கிக்கொள் சில நிமிடம்

நிரந்தர பணிக்கு ஆசிரியர் தேவை!

  அரசு உதவிபெறும் பள்ளிக்கு       ஆசிரியர் தேவை  பணியிடம் : தையல் ஆசிரியர் ( நிரந்தரம்) | பிரிவு : அருந்ததியர் ( SCA ) ஆண் / பெண் கல்வித்தகுதி : +2 with TTC . , Passed ( Needle Work and Dress Making ) தகுதியுடையவர்கள் உடன் விண்ணப்பிக்கவும் .  விண்ணப்பிக்கவேண்டிய முகவரி செயலர் திருமதி ரெ.வள்ளியம்மை ஆச்சி உயர்நிலைப்பள்ளி , பட்டமங்கலம் - 630 204. சிவகங்கை மாவட்டம் .

காலம்..

*நிரந்தரம் என்று* *சொல்லிக் கொள்வதெல்லாம்* *நிரந்தரமின்றி போக* *மாற்றங்கள் மட்டுமே* *நிரந்தரமாக்கிப் போகும்* *காலத்தின் சுழற்சியால்..!* *காலம்*   *கண்ணீரை மட்டுமல்ல*  *காயங்களையும் மாற்றும்* *கேள்விகளை மட்டுமல்ல*  *பதில்களையும் மாற்றும்..!* *கடந்து வந்த*  *பாதைகள் கடத்தி* *போக மறுப்பதில்லை..* *காலம் கடந்த*  *நினைவுகளை* *பரிசளிக்க*  *தவறுவதில்லை..!* *சண்டை போட்டு* *பேசாமல் இருக்கும்*  *காலம் போய்*  *பேசினால் சண்டை* *வரும் என்று*  *பயந்து பேசாமல்* *இருக்கும் காலத்தில்* *வாழ்கிறோம்..!* *இதெல்லாம் ஒரு நாள்* *கடந்து போகும் என்று* *காத்திருந்தேன்* *ஆனால்..!!* *எதுவுமே கடந்து போகாது* *எல்லாம் பழகிப்போகும்* *என்று உணர்த்தி விட்டது* *காலம்..!* *நீ எவ்வளவு நன்மைகள்* *செய்து இருந்தாலும் அதை* *ஒரு நொடியில் மறந்து* *விடும் இவ்வுலகம்..* *நீ தெரியாமல் செய்த* *ஒரு தவறை காலம்* *முழுவதும் சொல்லிக்* *கொண்டே இருக்கும்.* *கடந்து வந்த பின்பே* *கண்டு உணர்கிறேன்..* *என்னை கலங்கடித்த* *காலமெல்லாம் கடுமையான* *காலம் அல்ல..* *என் வாழ்வை* *வடிவமைத்த காலம்* *என்று..!* *கடைசி காலத்திற்கு* *தேவை என்று ஓடி ஓடி* *உழைக்

மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த அனுமதி. அரசு அதிரடி உத்தரவு.!!!

    தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து வகுப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதற்கு மத்தியில் தமிழகத்தில் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் என கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. தஞ்சையில் இதுவரை ஆறு பள்ளிகளில் உள்ள மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்

எறும்புகள்..

இது கதையுமல்ல, கவிதையுமல்ல.. ஒரு நிகழ்வு..!!* ஒருநாள் மாலை நேரத்திலே! இளையராஜாவின் இசையினிலே! இதயம் வருடும் பாடல்களை! சுவற்றில் சாய்ந்து கண்கள் மூடி! இதமாய் ரசித்து அமர்ந்திருந்தேன்! கழுத்தில் ஏதோ சுருக்கென்றது! திரும்பிப் பார்த்தால்! எறும்பின் வரிசை! நாளைய தேவைக்கு! இன்றே இரை தேடி! சீரான வரிசையில் சிறப்புடனே! சுறு சுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது! எறும்பிடம் பாடம் கற்கலாமென்று்! பள்ளிப் பாடத்திலும்! அறிஞர்கள் பலரின் கருத்திலும் கவிதையிலும் அறிந்திருக்கிறேன்! எத்தனை உயர்ந்த சுறு சுறுப்பு! எதிர்கால தேவைக்கு சேமிப்பு! இனிப்பில் மண் கலந்திருந்தாலும் , இனிப்பை மட்டும் பிரித்தெடுக்கும்! இஷ்டப்படி இயங்காமல்! சீராய் செல்லும் அதன் பாதையிலே! இப்படி நிறைய நன்மைகளை முன்பே அதனிடம் கற்றிருந்தாலும்! புதிதாய் கற்க்கும் ஆர்வத்தில்! தடையற்ற அதன் பாதையிலே! தடைகள் போல என் விரல் வைத்தேன்! பிரச்சனையற்ற அதன் பயணத்திலே! பிரச்சனையாக இப்போது என விரல்கள்! வரிசைப்பயணம் தடை பட்டதால்! வழி தெரியாத எறும்பெல்லாம் தாறு மாறாய்ச் சிதறியது! அவற்றில் சில எறும்புகளோ! என் விரலைக் கண்டு மிரண்டு பயந்து! தொடர்ந்து முன்னேறிச் செ

9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை??

    தமிழகத்தில் ஓராண்டுக்குப் பின், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க, கொரோனா ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டன. தற்போது முற்றிலும் ஊரடங்கு நீக்கப்பட்டதால், கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வு இன்றி, மக்கள் முக கவசம் கூட அணியாமல், பொது இடங்களுக்கு செல்வதை காண முடிகிறது. இந்த அலட்சியபோக்கால், மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தஞ்சாவூர், அரியலுாரில், ஆசிரியர்களுக்கு தொற்று உறுதியானது போல, கோவையிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சிலர், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புஜங்கனுார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு, தொற்று இருப்பது உறுதியானதால், சக ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர்.கல்வித்துறைக்கு முறையாக தகவல் அளிக்காத தலைமை ஆசிரியர்களால் பிற ஆசிரியர்கள், மாணவர்களுக்கு, மருத்துவ பரிசோதனை செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. தொற்று ஏற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால் மட்டுமே, பரவுவதை தடுக்க மமுடியாது. இதுபோன்ற இக்கட்டான சூழலில், ஏப்., மாதத்திற்கு பிறகும் பள்ளிகள் தொடரும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்திருப்பது, பெற்றோர் மத்தியில் அ

THOUGHT OF THE DAY..

 சமுதாயத்தில் பெரிய தலைவர்களையும், அறிஞர்களையும், நல்ல மனிதர்களையும் யாரால் உருவாக்க முடியும்.   பெற்றோரால் மட்டுமே உருவாக்க முடியும். கும்பகோணத்தில் ஒரு பள்ளியில் நடந்த அற்புதமான ஒரு நிகழ்வு இது. ஓர் ஆசிரியை பாடவேளையின் இறுதியில் மாணவிகளை ஊக்குவிக்க சிறிய போட்டி ஒன்றை நடத்தினார். அதில் வெற்றி பெறும் மாணவிக்கு புதியதொரு ஜோடி காலணி வழங்கப்படும் என்றும் கூறினார். அனைத்து மாணவிகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினர்.  இறுதியில் அவர்களது விடைகளைப் பரிசீலித்துப் பார்த்த பொழுது அவர்கள் அனைவரும் சரியான விடைகளை எழுதி இருந்தனர். ஆசிரியை யாருக்குப் பரிசினை வழங்குவது என்று சிந்தித்து விட்டு ஒரு பெட்டியில் அனைவரும் அவரவர் பெயர்களை ஒரு தாளில் எழுதி சுருட்டிப்போடுமாறு சொன்னார். அனைவரும் எழுதிப் போடவே ஆசிரியை அப்பெட்டியைக் குலுக்கி அதில் ஒரு தாளை எடுத்தார். அதில் "அகிலா" என்ற மாணவியின் பெயர் காணப்படவே அம்மாணவிக்குப் பரிசு வழங்கப்பட்டது. அம்மாணவிதான் அவ்வகுப்பில் மிகவும் ஏழ்மையான மாணவி. பல காலமாகவே தேய்ந்து போயிருந்த காலணிகளை அணிந்து வந்த அம்மாணவிக்கோ புது காலணி கிடைத்ததில் எல்லையில்லா

புதுச்சேரியில் பள்ளிகளை மூட பரிந்துரை

  புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தற்காலிகமாக பள்ளிகளை மூட துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. கொரோனா அதிகரித்து வருவதால் பள்ளிகளை தற்காலிகமாக மூடிவிடலாம் என கவர்னருக்கு மாநில சுகாதாரத் துறை பரிந்துரை செய்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. அத்துடன் புதுச்சேரியில் உள்ள பள்ளிகள் இனி வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கும். சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. இம்மாதம் 31ம் தேதி வரை 1 முதல் 9 வரை வகுப்புகள் செயல்படும். கோடைவிடுமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் விடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி பள்ளிகள் திறந்து 5 நாட்கள் நடத்தப்படுகிறது.இந்நிலையில் கவர்னர் மாளிகையில் நேற்று கொரோனா தடுப்பூசி கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், கொரோனா தடுப்பு குறித்து மாநிலத்தில் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.தொடர்ந்து, புதுச்சேரியில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளை தற்க

இன்றைய சிந்தனை..

 தவளை கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஒருவன் "தாவு"என்று சொன்னால் தாவும்படி பழக்கியிருந்தான். ஓர் காலை வெட்டி விட்டு "தாவு"என்றான்.தாவியது. இரண்டாம் காலை வெட்டி விட்டு"தாவு"என்றான்.வலியோடு தாவியது. மூன்றாம் காலை எடுத்தும் மிகுந்த வலியோடு ஒற்றைக் காலால் தாவியது. நான்காம் காலையும் வெட்டி விட்டு "தாவு"என்றான்.நகர முடியாமல் பரிதாபமாய் படுத்தது. மறுபடி தாவச் சொல்லி கத்திக் கொண்டேயிருந்தான். அதனிடமிருந்து அசைவேயில்லை! ஆராய்ச்சி முடிவை இப்படி எழுதினான்- *"நான்கு கால்களையும்  எடுத்து விட்டால் தவளைக்கு காது கேட்காது"* *இப்படி தான் இன்றய கல்விமுறையும் பலரின் புரிதல்களும் உள்ளது.* *நாட்டுப் பற்று, சொந்தம் பந்தம்* பற்றி வாய் கிழிய பேசுவிங்க,  உங்களுக்காக உங்க *ஊருக்காரன்* வச்சிருக்கும் கடையில் போய் ஒரு பெண்ட்ரைவ் கூட வாங்க மாட்டிங்க, உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் *அமேசான், பிளிப்கார்ட்… அதில வாங்குறத கௌரவமா வேற நினைக்கிற… அரிசி போட்டவுடன் வேகனும்! சோறு பளபளன்னு வெள்ளையா இருக்கணும் ! பொடிசா இருக்கணும் ! ஆனா நோய் வரக்கூடாது. பழுப்பு நிறத்துல இருக்ற

9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது"- பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

  கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்த நிலையில், சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டன. இதனைதொடர்ந்து அண்மையில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்த காலத்தில் பாடங்களை நடத்தி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த சுழலில் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின் அடிப்படையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அந்த சுற்றறிக்கையில், அனைத்து பள்ளிகளிலும் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில், இந்த மாத இறுதிக்குள் பள்ளி அளவில் பொதுத்தேர்வு நடத்தி முடிக்க வேண்டும், அதற்கான மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் 9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது எ