பலரின் ஆறாத காயங்களுக்கு
காரணம் மனங்கள் மட்டுமல்ல
பணமும் தான்.!
உயிர் இருக்கும் உறவுகளும்
நட்புகளும் கூட உயிரற்று
போகிறது உயிரில்லாத
இந்த பணத்தால்.
இந்த உலகில் உறவுகளை
பார்க்க மட்டுமல்ல..
கடவுளை பார்க்க கூட
பணம் தேவைப்படுகின்றது.
பயணம் இல்லாமல் கூட
வாழ்க்கை இருக்கலாம்
ஆனால்
பணம் இல்லாமல்
வாழ்க்கை இல்லை.
பணத்தால் கடிகாரத்தை
வாங்கி விட முடியும் ஆனால்
நேரத்தை வாங்க முடியாது
என்பதை என்றும் நினைவில்
வைத்திருங்கள்.
பணத்தால் மெத்தை கட்டில்களை
வாங்கி விட முடியும் ஆனால்
நிம்மதியான தூக்கத்தை வாங்கிவிட
முடியாது என்பதை நினைவில்
கொள்ளுங்கள்.
தாயின் கருவறையில் இருந்து
வெளிவரவும் பணம் இறுதியில்
கல்லறைக்கு போகவும் பணம்.
இந்த பணத்தால் அழிந்தது
மனிதர்களின் நல்ல குணம்.
வாழ்க்கையில் ஒருவித
மகிழ்ச்சிக்கு பணம்
ஒரு தேவை வாழ்க்கையின்
மகிழ்ச்சிக்கு பணம் மட்டுமே
தேவையில்லை.
பணம் சில சமயம் நண்பனை
எதிரியாகும்.. எதிரியை
நண்பனாக்கும்.
பெற்றுக்கொள்ள இரு கைகள்
நீண்டிருக்க
கொடுத்துச்செல்ல ஒரு கையும்
நீள்வதில்லை.
குணம் இல்லாதவருக்கு
இவ்வுலகில் இடமில்லை
என்பது சென்று..
பணமில்லாதவருக்கு இவ்வுலகில்
இடமில்லை என்றாகிவிட்டது.
பிறரை கெடுத்து வாழ்வதை விடுத்து..
பிறருக்கு கொடுத்து வாழ்வோம்
உயிருள்ள வரை.!
Wishing all friends, brothers and sisters a blessed morning..
ReplyDeleteGood Morning Mam...
ReplyDeleteGudevng Murali sir..
DeleteGOOD MORNING MAM. ...
ReplyDeleteGudevng mam🙂🙂
Delete