Skip to main content

காலம்..

*நிரந்தரம் என்று*

*சொல்லிக் கொள்வதெல்லாம்*

*நிரந்தரமின்றி போக*


*மாற்றங்கள் மட்டுமே*

*நிரந்தரமாக்கிப் போகும்*

*காலத்தின் சுழற்சியால்..!*


*காலம்*  

*கண்ணீரை மட்டுமல்ல* 

*காயங்களையும் மாற்றும்*


*கேள்விகளை மட்டுமல்ல* 

*பதில்களையும் மாற்றும்..!*


*கடந்து வந்த* 

*பாதைகள் கடத்தி*

*போக மறுப்பதில்லை..*


*காலம் கடந்த* 

*நினைவுகளை*

*பரிசளிக்க* 

*தவறுவதில்லை..!*


*சண்டை போட்டு*

*பேசாமல் இருக்கும்* 

*காலம் போய்* 


*பேசினால் சண்டை*

*வரும் என்று* 

*பயந்து பேசாமல்*

*இருக்கும் காலத்தில்*

*வாழ்கிறோம்..!*


*இதெல்லாம் ஒரு நாள்*

*கடந்து போகும் என்று*

*காத்திருந்தேன்*


*ஆனால்..!!*


*எதுவுமே கடந்து போகாது*

*எல்லாம் பழகிப்போகும்*

*என்று உணர்த்தி விட்டது*

*காலம்..!*


*நீ எவ்வளவு நன்மைகள்*

*செய்து இருந்தாலும் அதை*

*ஒரு நொடியில் மறந்து*

*விடும் இவ்வுலகம்..*


*நீ தெரியாமல் செய்த*

*ஒரு தவறை காலம்*

*முழுவதும் சொல்லிக்*

*கொண்டே இருக்கும்.*


*கடந்து வந்த பின்பே*

*கண்டு உணர்கிறேன்..*


*என்னை கலங்கடித்த*

*காலமெல்லாம் கடுமையான*

*காலம் அல்ல..*


*என் வாழ்வை*

*வடிவமைத்த காலம்*

*என்று..!*


*கடைசி காலத்திற்கு*

*தேவை என்று ஓடி ஓடி*

*உழைக்கின்றோம்*


*எது*

*கடைசி காலம் என்று*

*தெரியாமலே..!*


*காலம் கற்றுக் கொடுக்கும்*

*பாடம் போல*


*எந்த ஒரு*

*ஆசானாலும் கற்றுக்*

*கொடுக்க முடியாது..!*


*காலம் கடந்து செல்கின்றேன்*

*யாவும் மாறும்*

*என்ற நம்பிக்கையில்..!*


*ஓடி வந்து மூச்சு வாங்கும்*

*போது தான் தெரியும்*


*தண்ணீரின் அருமை..*


*அது போல தான்* 

*கடந்து வந்த பிறகு* 

*தான் தெரியும்*


*காலத்தின் அருமை..!*


*வாழ்த்தினாலும்*

*தாழ்த்தினாலும்*

*சிரித்துக் கொண்டே*

*இரு* 


*காலம் அவர்களுக்கு*

*பதில் சொல்லும்..!*


*கசப்பான நினைவுகள்*

*காலம் முழுவதும்*

*கசப்பதில்லை..*


*நிகழ்வுகள் மாறும் போது*

*நினைவுகளும் இனிக்கும்..!*


*தானாக உயரும் வயது..*


*விடாமல் துரத்தும் காலம்..*


*தடுக்க முடியாத நேரம்..*


*கடக்கத் துடிக்கும் இளமை..*


*காலைத் தடுக்கும் சமூகம்..*


*தொட வேண்டிய இலக்கு..*


*இத்தனை* *போராட்டங்கள்*

*தான் வாழ்க்கை..!*


*காலம் கடந்தது*

*நினைவுகள் வலித்தது* 


*ஆயினும் அசட்டு*

*நம்பிக்கையில் காத்திருந்தேன்*

*அதே காலத்துடன்..!*


*பாசம் வையுங்கள்* 

*தவறில்லை*

*ஆனால் பைத்தியம்* 

*ஆகிவிடாதீர்கள்*


*ஏனெனில்*

*இங்கு முடிவே இல்லாத*

*வாழ்வும் இல்லை..*


*பிரிவே இல்லாத* 

*உறவும் இல்லை..*


*எல்லாம் சில காலம் தான்..*!


*பொறுத்தார் பூமி ஆழ்வார்*

*என்பது அந்த காலம்*


*பொங்கி எழுந்தால் தான்*

*இருப்பதையாவது*

*காப்பாற்றிக் கொள்ள*

*முடியும் என்பது* 

*இந்த காலம்..*


*இது தான்*

*இன்றைய வாழ்க்கை..!*


*தொலைந்து போன*

*காலத்தை தேடித் தேடியே*


*இருந்த காலமும்*

*தொலைந்து போனது..!*


⏰  ⏰  ⏰  ⏰  ⏰  ⏰


    

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. காலத்தின் கோலம் பற்றிய அர்த்தமுள்ள பதிவு

    ReplyDelete
  3. Gud morning admin mam.na 2013 la both paper passed.2015 la paper 2 matum employment officela register paniten.but now online la vanthirukku.again paper 2 register pananuma mam?

    ReplyDelete
    Replies
    1. Gudnoon frnd..

      Oru time register panna podhum.. Register pana copy safe ah vachukonga..

      Delete
    2. Mmm.thank you admin mam.😀😀😀

      Delete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..