தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து வகுப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதற்கு மத்தியில் தமிழகத்தில் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் என கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. தஞ்சையில் இதுவரை ஆறு பள்ளிகளில் உள்ள மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மார்ச் 22 முதல் 9 முதல் 11 ஆம் வகுப்புகளுக்கு மறு உத்தரவு வரும் வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன், டிஜிட்டல் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். மற்ற வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு அறிவிக்கப்பட்டுள்ள படி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. இப்பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அவர்களுக்கான விடுதிகள் இயங்கவும் அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, 12 ஆம் வகுப்பைத் தொடர்ந்து நடத்த அனுமதிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வேண்டியுள்ளதால் வகுப்புகளை நடத்த அனுமதிக்கப்படுகிறது. மேலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தவும், விடுதிகள் இயங்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment