Skip to main content

இறை..

 நான்  யார்?


அதைக் கற்றேன்-

இதைக் கற்றேன்-

அறிவாளி நான் என இறுமாந்தேன்.


அதைச் செய்தேன்- இதைச்செய்தேன-

சாதனையாளன் 

நான் என, சவடால் 

விட்டேன்.


அன்றொரு நாள் அதிகாலை,

யாரே தீண்ட திடுக்கிட்டு 

விழித்தேன்.


ஏதோ ஒன்று, ஏளனமாய்

எனைப் பார்த்து சிரித்தது.


யார் நீ என்றேன்?


நீ தான் என்றது அது.


நீதான நான் என்றால்

பிறகு நான் யார் என்றேன்.


நான்தான் நீ என்றது.


குழப்ப வந்த குட்டிச்சாத்தானா- என கோபமாய் கேட்டேன்.


நான் எத்தகைய

 ஆற்றல் மிக்கவன் -அறிவாளி - என்னையே குழப்புகிறாயா என்று ஏளனமாய் கேட்டேன்.


அப்படியா சரி என்று அது ஒரு கேள்வி கேட்டது.


நீ பெறும் அறிவாளிதானே-

உன் அறிவைக்கொண்டு

நீ உண்ணும் உணவின் உட்கூறுகளை தனித்தனியே பிரித்து- வைட்டமின்கள் ,தாது உப்புக்கள்,புரதம்  என

அந்தந்த உறுப்புகளுக்கு தேவையானதை 

தனித்தனியேஅனுப்பி 

வைத்திடு என்றது.


திடுக்கிட்டேன்.


உணவின் உள்நுழைந்து உட்கூறு பிரிக்கும் அறிவெனக்கேது.

பிரித்தாலும் அந்தந்த உறுப்புகளுக்கு எங்ஙனம்

அனுப்புவேன்.


சற்றே தடுமாறி நின்றேன்.


மீண்டும் கேட்டது

நீ பெறும் ஆற்றல் உள்ளவன் தானே.

உன் ஆற்றலைக்கொண்டு,


ஒரு ஐந்து நிமிடம் உன்

இதயத்தை இயக்கிக்கொள்


சில நிமிடம் உன் சீரணத்தை பார்த்துக்கொள்.


சொற்ப நேரத்திற்கு

உன் சுவாசத்தை

நடத்திக்காட்டு.

  

உடலில் லட்ச லட்சமாய்

மடிந்துவிடும் உயிரணுக்களை ஒரு நாளைக்கு மட்டும்  நீ உருவாக்கிக்கொள் .

என்றது-


கிறுகிறுத்துப்போனேன்.


நீ அறிவாளியா

உன்னுள் இருக்கும்

நான் அறிவாளியா  

என்றது?


நீ திறனாளியா-

உன்னுள் இருக்கும் 

நான் திறனாளியா 

என்றது.


மயங்கிய நிலையில் நான் கேட்டேன்.

 

நீ என்னுள்ளேதான் இருக்கிறாயா?


 ஆம் என்றது அது.


அப்படியானால் நீயும் நானும் ஒன்றா? என்றேன்


இல்லை ஆனால் ஆமாம்

என்றது.


விழிபிதுங்கினேன்.

சிரித்துக்கொண்டே சொன்னது.


உன்னுள் நான் இருப்பதை 

நீ உணரும் வரை -நானும் நீயும் வேறு வேறு.


உணர்ந்தபின்னே நானும் நீயும் ஒன்று. என்றது.


அப்படியானால் உன்னுடைய அறிவு ,ஆற்றல் அனைத்தும் எனக்கும் உண்டா என்றேன்

.

ஆம் என்றது.


நீ சொல்வதை நான் அறிந்து கொண்டாலும்-


நடைமுறையில் பார்க்கையில்

உன்னளவு ஆற்றலும்

அறிவும் எனக்கு இருப்பதாய் தெரியவில்லையே 

என்றேன்.


சிரித்துக்கொண்டே சொன்னது-


நீ அறிந்து கொண்டால் போதாது- 

உணர்ந்து கொண்டால் மட்டுமே

#உண்மை #உதிக்கும்,

என்று சிரித்து மறைந்தது.


அறிவால் அறிவது முதல்படி

உணர்வால் -உணர்வதே உருப்படி.. என்பதை உணர்ந்தேன்


கர்வம்  கலைந்தேன்.

ஆணவம் அழித்தேன்.

அகங்காரம் அகற்றினேன்.


இறையே நாம்.

நாமே இறை என்றுணர தலைப்பட்டேன்.


ஆனந்தம் கொண்டேன்.


உணர்ந்து கொள்ள

உய்வு உண்டாம்.


தெரிந்து கொள்ள

தேர்ச்சி உண்டாம்.


நீயும் இறை.

நானும் இறை.


அனைவரும் அறிவோம்!

அனைவரும்இறையே.!

ஏன்-அனைத்தும் இறையே.


ஆனந்தமாய் வாழ்வோம்!

ஆக்கியோன் நாமே(இறையே)!


நம்முள் உறையும்

இறையை உணர்ந்து-

இனி என்னாளும்

இன்பமாய் வாழ்வோம்!

Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
 2. Super thought admin madam

  ReplyDelete
 3. Gud evg admin mam.pg trb Ku current affairs entha mnth la entha year padikanum.oru idea Venu

  ReplyDelete
  Replies
  1. Gudevng mam/sir..

   Its best to start from one months before date of notification. You need to go through everything..

   But my opinion is even if you spend time for current affairs, its very hard to score the marks or expect questions frm what u went through.. Bcz there wil be current affairs, gk and sports also. Better to concentrate much on ur major..

   Delete
  2. Ok admin mam.thank you

   Delete
 4. ஆமா சிஸ் நீங்க சொல்றது சரி தான்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிந்தனைச் சிதறல்..

மனம் ஒருமுகப்பட.. *காற்று ஒருமுகப்பட புயலாகிறது! மேகம் ஒருமுகப்பட மழையாகிறது.!  நீர் ஒருமுகப்பட நதியாகிறது!  நதி ஒருமுகப்பட கடலாகிறது!  மனம் ஒருமுகப்பட வெற்றி உருவாகிறது!  உங்களைக் கையாள மூளையைப் பயன்படுத்துங்கள்! மற்றவரைக் கையாள இதயத்தைப் பயன்படுத்துங்கள்!  இதயத்தைக் கவர்ந்துவிட்டு, எதைச் செய்தாலும், அது இணக்கமாகவே இருக்கும்.  வாயில் உதிரும் வார்த்தைகளை விட இதயத்திலிருந்து உதிரும் வார்த்தைகளால் அன்பு மலரும்! அன்பே ஆனந்தம் தரும்.*_ கோபம் ஒரு சுயதண்டனை, அடுத்தவர் செய்த தவறுக்கோ அல்லது அடுத்தவர் தவறு செய்திருக்கலாம் என்ற நிலையிலோ நமக்கு நாமே கொடுத்துக் கொள்கிற தண்டனைதான் கோபம்!  கோபத்தில் நடிப்பிருக்கலாம்! துடிப்பிருக்கக்கூடாது!*_  *உறவுகள் கூட நிலவைப் போன்று தான்..!* *"தூரத்தில்" இருக்கும் வரை* *ரசித்துக் கொண்டாடப்படும்..!!* *எதிர்பார்ப்பை* *குறைத்துக் கொள்ளுங்கள்..!* *ஏமாற்றத்தால் சோர்வடையத்* *தேவையில்லை..!!* *அன்று "வயதைப்"* *பார்த்து வந்தது..* *இன்று "வசதியைப்"* *பார்த்து தான் வருகிறது..!!* *"மரியாதை"* *செல்லும் பாதை*  *சரியானதாக இல்லாத போது..*

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல.

படித்ததில் பிடித்தது..

 கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான். ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ  நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!” என்றான். கடவுள் உடனே,  “ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார். விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது. ”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது,  மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான். மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது. அறுவடைக் காலமும் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான். அதிர்ந்தான்.. உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி