Skip to main content

பொதுத்தேர்வுக்கு முன் மாடல் தேர்வு : பெற்றோரிடம் வலுக்கிறது எதிர்பார்ப்பு

 


பொதுத்தேர்வு நடத்தும் முன்பு, மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரித்து, மாடல் தேர்வு நடத்தினால், மாணவர்கள் கற்றல் நிலை தெரியவரும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வழக்கமாக அரையாண்டு தேர்வுக்கு முழு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.இதற்கு பிறகு, மூன்று திருப்புதல் தேர்வுகளை மாணவர்கள் சந்தித்த பிறகு, பொதுத்தேர்வு எழுதுவர். 

ஆனால், கொரோனா தொற்று பரவுவதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த ஜன.,ல் தான் பள்ளிகள் திறக்கப்பட்டன.ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் முழுமையாக பங்கேற்காததால், பள்ளி திறந்த பிறகு தான், பாடங்கள் கையாளப்பட்டன. தற்போது சிலபஸ் முடிக்கப்பட்ட நிலையில், செய்முறை பொதுத்தேர்வுக்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டது.தேர்தலுக்காக பள்ளிகள் ஒருவாரம் மூடப்பட்டிருக்கும். 

அதன் பின், மாவட்ட அளவில் ஆசிரியர் குழுக்களை கொண்டு வினாத்தாள் தயாரித்து, மாடல் பொதுத்தேர்வு நடத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.பெற்றோர் சிலர் கூறுகையில், ' பிளஸ் 2 மதிப்பெண்கள் கொண்டு தான், உயர்கல்வியில் பாடப்பிரிவுகள் தேர்வு செய்ய முடியும். மே மாதம் தேர்வு நடத்த, அட்டவணை வெளியிடப்பட்டது. 

ஏப்.,க்குள் அந்தந்த பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தினால், மாணவர்களின் கற்றல் நிலை அறிவது கடினம்.மாவட்ட அளவில் பொது வினாத்தாள் தயாரித்து, மாடல் தேர்வு நடத்தலாம். திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், இந்நடைமுறை பின்பற்றப்படுகிறது. தேர்தலுக்கு பிறகு, கோவையிலும் மாடல் தேர்வு நடத்தினால் தான், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன், தேர்வுக்கு தயாராவர்' என்றனர்.

Comments

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...