Skip to main content

யாரிடமும் கோபமே படாத ரகசியம்..!!

யார் எப்படி நடந்து கொண்டாலும் கோபமே படாதவர் அந்த துறவி. அவரை அவமானப்படுத்தினாலும் கூட கண்டுகொள்ள மாட்டார்.


பலர் எப்படி எப்படியோ முயற்சி செய்தும் அவரைக் கோபப்படுத்தவே முடியவில்லை!

எப்படி இவரால் இருக்க முடிகிறது?என்று அந்த ரகசியத்தை அறிந்து கொள்வதில் அவரின் ஒரு சிஷ்யருக்கு ஆர்வம்.

தன் கேள்வியை துறவியிடமே கேட்டு விட்டார்.

துறவி அவரிடம் பொறுமையாக தான் யாரிடமும் கோபமே படாத ரகசியத்தை விளக்கினார்.

“ஒரு ஏரியில் காலியான படகில் அமர்ந்து தியானம் செய்வது என் நெடுநாள் வழக்கம். அப்படி ஒருமுறை தியானத்தில் இருந்தபோது நான் அமர்ந்திருந்த படகை வந்து முட்டியது ஒரு படகு."

என் தியானம் கலைந்தது.

‘இப்படி அஜாக்கிரதையாக படகை முட்டவிட்டது யார்?’ என்று கோபமாகக் கண்களைத் திறந்து பார்த்தால்,அது ஒரு வெற்றுப்படகு!

காற்றுக்கு அசைந்து அசைந்து வந்து நான் தியானம் செய்த படகு மீதி மோதியிருக்கிறது.

என் கோபத்தினை அந்தப் படகிடம் காட்டி எதுவும் பிரயோஜனம் உண்டோ சீடனே?

யாராவது என்னைக் கோபப்படுத்தும்போது எனக்கு அந்த சம்பவம் நினைவுக்கு வரும். இதுவும் "வெற்றுப் படகுதான்" என்று அமைதியாகி விடுவேன்” என்றார்.

கோபத்தின் பாதிப்பை நாம் 3வகைகளாக பிரிக்கலாம்:

1)கோபம் அறிவை பாதிக்கக் கூடியது

2)கோபம் உடலை பாதிக்கக் கூடியது

3)கோபம் நடத்தையை பாதிக்கக் கூடியது

புரிந்ததா ரகசியம் என்றார் குரு!

குரு கோபப் படாததின் ரகசியம் கேட்ட சிஷ்யர் தெளிவு பெற்றார்.

நீதி:

உண்மையான பலசாலி யார் என்றால், தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல.

மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும்

Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
 2. Sir iam tet pepar1la2013 ,2017la pass 2017la tet register number illa tet certificate yappati vangurathu pls sollunga

  ReplyDelete
  Replies
  1. Pls sir neenga dpi ponga Anga idea kodupanga inga yarum yethum solla mattanga

   Delete
  2. Sir intha website ethachum posting pathi news vantha than busy ah irukum illa na inga yarum ethum solla mattanga so pls contact dpi

   Delete

Post a Comment

Popular posts from this blog

சிந்தனைச் சிதறல்..

மனம் ஒருமுகப்பட.. *காற்று ஒருமுகப்பட புயலாகிறது! மேகம் ஒருமுகப்பட மழையாகிறது.!  நீர் ஒருமுகப்பட நதியாகிறது!  நதி ஒருமுகப்பட கடலாகிறது!  மனம் ஒருமுகப்பட வெற்றி உருவாகிறது!  உங்களைக் கையாள மூளையைப் பயன்படுத்துங்கள்! மற்றவரைக் கையாள இதயத்தைப் பயன்படுத்துங்கள்!  இதயத்தைக் கவர்ந்துவிட்டு, எதைச் செய்தாலும், அது இணக்கமாகவே இருக்கும்.  வாயில் உதிரும் வார்த்தைகளை விட இதயத்திலிருந்து உதிரும் வார்த்தைகளால் அன்பு மலரும்! அன்பே ஆனந்தம் தரும்.*_ கோபம் ஒரு சுயதண்டனை, அடுத்தவர் செய்த தவறுக்கோ அல்லது அடுத்தவர் தவறு செய்திருக்கலாம் என்ற நிலையிலோ நமக்கு நாமே கொடுத்துக் கொள்கிற தண்டனைதான் கோபம்!  கோபத்தில் நடிப்பிருக்கலாம்! துடிப்பிருக்கக்கூடாது!*_  *உறவுகள் கூட நிலவைப் போன்று தான்..!* *"தூரத்தில்" இருக்கும் வரை* *ரசித்துக் கொண்டாடப்படும்..!!* *எதிர்பார்ப்பை* *குறைத்துக் கொள்ளுங்கள்..!* *ஏமாற்றத்தால் சோர்வடையத்* *தேவையில்லை..!!* *அன்று "வயதைப்"* *பார்த்து வந்தது..* *இன்று "வசதியைப்"* *பார்த்து தான் வருகிறது..!!* *"மரியாதை"* *செல்லும் பாதை*  *சரியானதாக இல்லாத போது..*

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல.

படித்ததில் பிடித்தது..

 கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான். ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ  நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!” என்றான். கடவுள் உடனே,  “ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார். விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது. ”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது,  மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான். மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது. அறுவடைக் காலமும் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான். அதிர்ந்தான்.. உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி