Skip to main content

THOUGHT OF THE DAY..

 சமுதாயத்தில் பெரிய தலைவர்களையும், அறிஞர்களையும், நல்ல மனிதர்களையும் யாரால் உருவாக்க முடியும்.

 

பெற்றோரால் மட்டுமே உருவாக்க முடியும்.


கும்பகோணத்தில் ஒரு பள்ளியில் நடந்த

அற்புதமான ஒரு நிகழ்வு இது.


ஓர் ஆசிரியை பாடவேளையின் இறுதியில்

மாணவிகளை ஊக்குவிக்க சிறிய போட்டி ஒன்றை நடத்தினார்.

அதில் வெற்றி பெறும் மாணவிக்கு

புதியதொரு ஜோடி காலணி வழங்கப்படும்

என்றும் கூறினார்.

அனைத்து மாணவிகளும் மிகுந்த

மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினர். 

இறுதியில் அவர்களது விடைகளைப்

பரிசீலித்துப் பார்த்த பொழுது அவர்கள்

அனைவரும் சரியான விடைகளை எழுதி

இருந்தனர்.


ஆசிரியை யாருக்குப் பரிசினை வழங்குவது

என்று சிந்தித்து விட்டு ஒரு பெட்டியில்

அனைவரும் அவரவர் பெயர்களை ஒரு தாளில் எழுதி சுருட்டிப்போடுமாறு சொன்னார்.


அனைவரும் எழுதிப் போடவே ஆசிரியை

அப்பெட்டியைக் குலுக்கி அதில் ஒரு தாளை எடுத்தார்.

அதில் "அகிலா" என்ற மாணவியின் பெயர்

காணப்படவே அம்மாணவிக்குப் பரிசு

வழங்கப்பட்டது.


அம்மாணவிதான் அவ்வகுப்பில் மிகவும்

ஏழ்மையான மாணவி. பல காலமாகவே

தேய்ந்து போயிருந்த காலணிகளை அணிந்து வந்த

அம்மாணவிக்கோ புது காலணி கிடைத்ததில் எல்லையில்லா மகிழ்ச்சி.


பின்னர் அவ்வாசிரியை மகிழ்ச்சியுடன்

வீட்டுக்கு வந்து நடந்த நிகழ்வைப்பற்றி

கணவரிடம் கண்ணீருடன்

கூறினார். கணவனும் மகிழ்ச்சி அடைந்தார். 

எனினும் அந்த ஆசிரியை வழக்கத்துக்கு

மாறாக தொடர்ந்து கண்ணீர் வடித்துக்

கொண்டிருந்தார்.


கணவர் மீண்டும் காரணம் கேட்க "நான்

வீட்டுக்கு வந்து பெயர்கள் இடப்பட்ட

அப்பெட்டியில் இருந்த தாள்களை பிரித்துப்

பார்த்தேன். அதில் அனைத்து மாணவிகளும்

தங்களது பெயர்களை எழுதாமல் வகுப்பில்

ஏழை மாணவியாக இருந்த "அகிலா" வின்

பெயரையே எழுதியிருந்தனர் என்று

கண்ணீருடன் பதிலளித்தார்.


தன்னை விட அதிகம் தேவையில் உள்ள பிறர் மீது அக்கறை கொண்டு அவர்களை முன்னிலைப் படுத்தும் பிள்ளைகளாக நமது பிள்ளைகளை வளர்ப்பது நமது கடமையாகும்.


Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
 2. If register tet certificate in employment office which year register
  Am 2013 and 2017(which best)

  ReplyDelete
 3. Mam good evening.I have lost my tet certificate .how to get a new one mam.

  ReplyDelete
  Replies
  1. Gudevng Sushila mam..

   You can approach TRB, sure they might be having soft copy. So you can apply for duplicate. But approach trb and get the clear procedures..

   Delete

Post a Comment

Popular posts from this blog

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.

  தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.   தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு   தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . 06.07.2022 பத்திரிகை செய்தியின்படி ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- I ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினிவழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது நிர்வாக காரணங்களினால் , தாள்- I ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்படவுள்ளது . மேற்படி கணினிவழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சித் தேர்வு ( Practice Test ) மேற்கொள்ளவிரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு , தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் . இது குறித்த அறிவிக்கை , தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் .

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.