ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள்.
அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள்.
நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள்.
அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள்.
அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் .
அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள்.
மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார்.
அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள்..
அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள்.
ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள்.
அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார்.
அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள்..
அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம்.
அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் கூறுகிறார்.
அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள்.
ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள்.
இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? என்று அவள் தன் கருத்தை கூறுகிறாள்.
இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர்.
பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்கிறார்.
அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள்.
அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார்.
அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர்.
இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்?
நான் அழைத்தது அன்பை மட்டும் தானே? என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறாள்.
அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!!
அன்புதான் நம்மை அதிக சந்தோஷப்பட வைக்கும்........
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGood morning ano sis
ReplyDeleteGudnyt Revathi sis..
DeleteGood morning, sister and friends.
ReplyDeleteGudnyt brother..
DeleteGood morning Ano mam and all my friends
ReplyDeleteGudnyt Mythili mam..
Delete*MINNAL KALVISEITHI 17 GROUPS*
ReplyDelete*WHATSAPP NUMBER 6380815982*
*Ⓜ🔰🔰டி.ஆர்.பி., ஆபீசுக்கு போலீஸ் பாதுகாப்பு :தேர்வு முறைகேடு பிரச்னையால் நடவடிக்கை*
*ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மீதான, தேர்வு முறைகேடு பிரச்னைகளை தொடர்ந்து, டி.ஆர்.பி., அலுவலகத்துக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன நடவடிக்கைகளை, டி.ஆர்.பி., மேற்கொண்டு வருகிறது. ஆனால், 2014க்கு பின், டி.ஆர்.பி.,யின் தேர்வு நடவடிக்கைகள் சர்ச்சையாகி வருகின்றன*
*இதில், உச்சகட்டமாக, 2017ல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி நியமன தேர்வில், போலியாக மதிப்பெண் வழங்கியது; ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், சிலர், போலி மதிப்பெண் பெற்றது போன்ற பிரச்னைகள், டி.ஆர்.பி.,க்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது*
*இதுகுறித்து, சென்னை போலீசார் கிரிமினல் வழக்கு, பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.சமீபத்தில் நடந்த சிறப்பாசிரியர் பணி நியமன தேர்விலும் பிரச்னை ஏற்பட்டது. இந்த தேர்வுக்கு, சரியான கல்வி தகுதியை நிர்ணயிக்க தவறியதால், சான்றிதழ் சரிபார்ப்பில், பெரும் குளறுபடி ஏற்பட்டது*
*அதனால், தேர்வர்கள் நாள்தோறும், டி.ஆர்.பி., அலுவலகத்துக்கு வந்து போராட்டம் நடத்துவதும், மனு கொடுப்பதும் வாடிக்கையாகி விட்டது.இந்நிலையில், ஊழல் பிரச்னைகள் மற்றும் நியமன குற்றச்சாட்டுகளை சமாளிக்கும் வகையில், டி.ஆர்.பி., அலுவலகம் முன், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது*
*சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் நான்காம் மாடியில் இயங்கும், டி.ஆர்.பி., அலுவலக வாயிலில், 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்*
*அலுவலகத்துக்கு வரும் தேர்வர்கள் மற்றும் தேர்வு சார்ந்த மனுக்களை அளிக்க வருவோர், போலீசார் வசம் உள்ள பதிவேட்டில் எழுதி, முன் அனுமதி பெற்று இருந்தால் மட்டும், உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்*
*பெரும்பாலான தேர்வர்கள், டி.ஆர்.பி.,யின் தகவல் மையத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கே மனுக்களை பெற்று, திருப்பி அனுப்பப்படுகின்றனர்*
*SOURCE DINAMALAR WEBSITE*
*மின்னல் கல்வி செய்தி குழுவில் இணைய MKS என type செய்து 6380815982 என்ற WHATSAPP எண்ணிற்கு அனுப்பவும்.*