#உழைப்பு...
#உண்மை...
வேர்க்கடலைய ட்ரைசைக்கிள்ள தள்ளிட்டு போற தாத்தா
கீரைகட்டு வித்துட்டுப் போற பாட்டி
செருப்பு தைக்க உக்காந்திருக்கும் அண்ணன்
மகனுடன் வெள்ளரிக்கா கூறுபோட்டு விக்கும் அக்கா
டிவிஎஸ் ஃபிப்டியில் எழனி வித்துட்டு போகும் அண்ணன்
இவர்கள் எல்லாம்
என்ன அத்தியாவசியப்பொருளா விக்குறாங்க? என்று நமக்குத் தோன்றுகிறது.
"அண்ணே..
அக்கா.. வீட்டுல இருக்கலாம்ல..ஏன் இப்டி இந்த நோய் பரவுற காலத்துல சுத்திட்ருக்கீங்க?" என்று கேட்கத்தோன்றும்
ஆனால்
அவர்கள் வீட்டுக்குத் தேவையான
அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு அவர்கள் கையில் வைத்திருப்பதை கொஞ்சமாவது விற்றால் தான் முடியும் என்ற உண்மை தெரியும் போது
அவர்கள் பக்கம் இருக்கும் நியாயம்
பாலை நில வெயில் போல் முகத்தில் உறைக்கிறது.
ஆம்..
ஏழைகள் அனைவரின் வீட்டிற்குள்ளும் கொரோனா செல்லும் என்று கூறமுடியாது
ஆனால்
தினமும் மூன்று வேளையும் தவறாமல் அவர்கள் வீடுகளுக்குள் பசிப்பிணி சென்று வருகிறது .
நம் அன்றாடம் சந்திக்கும் இதுபோன்ற சின்னஞ்சிறு வியாபாரிகள் நலன் கருதி அவர்களிடமும் ஏதேனும் பொருட்கள் வாங்க வேண்டும்.
காரணம் அவர்கள் பொருட்கள் வாங்காமல் கொடுக்கும் சிறு பணத்தைக்கூட வாங்க மாட்டார்கள்
இவர்களுக்காக மனம் இறங்குவோம்
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteHi sis . I am Revathi . Network problem sis athan sariya wish panna mudiyala. Hope all of you safe. Have a wonderful good Friday
ReplyDeleteAm fine sis, hope you are also fine, take care of papa too..
Delete