Skip to main content

ஆன்லைன் கிளாஸில் கல்லா கட்டும் தனியார் பள்ளிகள்!




கொரோனா தொற்று அதிகமான மார்ச் மாதம்தான் 11 மற்றும் 12 - ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியது . 12 - ம் வகுப்புத் தேர்வுகள் முடிந்த நிலையில் , 11 - ம் வகுப்புத் தேர்வில் ஒன்று மட்டும் மீதமிருக்க , நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் , அதுவும் ரத்து செய்யப்பட்டுவிட்டது .பள்ளி மாணவர்கள் எல்லாம் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள் .ஏற்கனவே , ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் பைஜூஸ் , வேதாந்தா , அப்கிரேட் , அக்காடமி போன்ற பல தனியார் நிறுவனங்கள் , இந்த நேரத்தைப் பயன்படுத்தி கல்லா கட்டி வருகின்றன . அதே பாணியில் 10 மற்றும் 11 - ம் வகுப்பு மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதாகத் தெரிகிறது.
இதுகுறித்து 10 - ம் வகுப்பு படிக்கும் தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் விசாரித்தபோது ,
10 - ம் வகுப்பு தேர்வுக்காக நாங்கள் கடுமையாக தயாராகிக் கொண்டிருந்தோம் இந் நிலையில்தான் , கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாகப் பரவத் தொடங்கியது .பிரதமர் ஊரடங்கை அமல்படுத்தியபோதுகூட தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என்று காத்திருந்தோம் . ஆனால் , மார்ச் 25 - ம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டதால் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன .
விட்டாச்சு லீவு என்று நாங்களும் புத்தகத்தை வைத்துவிட்டு குடும்பத்தோடு விளையாடிக் கொண்டிருந்தோம் . திடீரென அத்தனை மாணவர்களுக்கும் அவரவர் பள்ளிகளில் இருந்து தகவல் வந்தது . அதில் , 1 முதல் 9 - ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என அறிவித்த தமிழக அரசு , 10 - ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து என அறிவிக்கவில்லை .
அதனால் காலதாமதமாக நடைபெறும் வாய்ப்புள்ளது .எனவே ஆசிரியர்கள் வீட்டிலிருந்தபடியே வீடியோவில் பாடத்தை நடத்தி வாட்ஸ் ஆப்பில் அனுப்புவார்கள் . அதனை நீங்களும் வீட்டிலிருந்தபடியே பார்த்துப் படித்து , சந்தேகங்கள் இருந்தால் வாட்ஸ் ஆப்பிலேயே கேட்டுக்கொள்ளலாம் என்றும் , ' வாட்ஸ் ஆப்பிலேயே மாதிரித்தேர்வும் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது .
இந்த கொரோனாவிலும் நாங்கள் பள்ளிக்குப் போகாமலே பாடம் படிக்கிறோம் . இப்படியெல்லாம் பாடம் நடத்தினால்தான் அடுத்த வருடத்துக்கான ஃபீஸை இப்போதே வசூல் செய்ய முடியும் , இப்படி தனியே நடத்தும் ஆன்லைன் வகுப்புக்கும் ஃபீஸ் வாங்கமுடியு

Comments

Popular posts from this blog

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...