Skip to main content

வருக புத்தாண்டே..


ஆண்டே! வருக! - மேலும்
ஆள்பவளே வருக! - எங்களுக்கு
ஆனந்தம் தருபவளே வருக!

கடந்த ஆண்டுகள் எல்லாம்
கல்லை விழுங்கியக்
கடலாய்க் கரைந்துப் போனது.

படிகாரங்கள் கற்கண்டுகளாய்
பதம் பார்த்ததுப் போல்
இதம் பாராமல் சென்றது ஆண்டுகள்.

கடல் விழுங்கியக்
கதை எல்லாம் போய்
சதை விழுங்கும் சண்டாளர்கள்
சாதனையாளர்களாய்
சாதிக்க வைத்தது அந்த ஆண்டுகள்.

இனி
இவையெல்லாம் உன் ஆண்டில்
இல்லாமல் மறைந்துப் போகட்டும்.

நீ வருவதற்கு முன் - எங்களின்
நிம்மதியையும் அரித்துவிட்டது
சென்ற ஆண்டுகள். - ஆம்

வந்தோரை வரவேற்று - தேநீர்
விருந்தளிக்கவும் தேவையான
பால் விலையும் ஏறிவிட்டது.

இருட்டில் தவித்த வீடுகளில்
இலவச மின் இணைப்பும்
உல்லாசமாக எரியாமல்
மின்வெட்டில் மழுங்கிவிட்டது.
மின் விநியோக உபயோகக்
கட்டணமும் உயர்ந்துவிட்டது.
இன்னும் நாங்கள் உயரவே இல்லை.

நீண்ட தூரப் பயணிக்கவும்
நாலுக் காசும் எங்களுக்கில்லை.
பேருந்துக் கட்டணமும்
ஏறிவிட்டது. - இன்னும் நாங்கள்
ஏற்றமிகு வாழ்க்கையில் வாழவே இல்லை.

அரசுப் பணியில் இருந்தாலும்
அரசுக்கு செலுத்தும் வரியும்
அகலவே இல்லை. - சென்ற
ஆண்டில் இரு அரசும்
அரசுப் பணியாளர்களுக்கு
அள்ளித்தந்த சம்பளமும்
போதவில்லை. - இரு அரசும்
கொடுப்பதைப் போல் கொடுத்து
கெடுப்பதற்கு திட்டம் தீட்ட
வைத்தது சென்ற ஆண்டு.

வெறும் கையாலே முழம் அளந்தாலும்
பூவாசம் வீசுமா? - சொல்லாலே
சொக்கவைத்தால்
சொர்க்கம் தான் தெரியுமா?

வெறும் கையாலே முழம் அளக்கும்
பூக்காரனைப்போல் - ஆசைகளை
சொல்லாலே சொக்கவைக்கும்
சூன்யக்காரனைப் போல்
சூன்யத்தை சூழவைத்தது
சென்ற ஆண்டு. - நீயாகிலும்
சுகமான நாட்களை
சுமந்து வா! - எங்கள்
சோகத்தை சுட்டெரிக்க வா!

ஏழைப் பாழைகளும்
ஏற்றம் காண ஏணியாக மாறி வா!
ஏளனமும், கேலியும் செய்யும்
ஏமாற்றுக்காரர்களை
எட்டி உதைக்கும் ஆண்டாக
ஏற்றமுடன் பிறந்து வா!

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Wishing all Puthagasalai friends, brothers and sisters a very happy tamil new year..

    ReplyDelete
  3. வணக்கம் தல

    ReplyDelete
  4. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. Happy Tamil Newyear mam and friends

    ReplyDelete
  6. ��இன்பங்கள் பல காண ,
    துன்பங்களை துடைத்தெறிய பிறந்தாயோ என் புத்தம் புது புத்தாண்டே....

    ��கண்ணுகே அறியா எதிரியுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் இக்கணத்தில் உன் வரவை விடியலாய் தர பிறந்தாயோ....

    ��பிறந்தது முதல் இப்படி ஒரு சூழ்நிலையை கண்டதும் இல்லை கேட்கும் இல்லை, இந்த இன்னலை இனிதே முடிக்க பிறந்தாயோ..

    ��திசை அறியா இயந்திரமாய் சுற்றிய வாழ்க்கை , சுவர் பெற்ற ஓவியமாய் ஒளிர்வதை காண வந்தாயோ .....

    ��அன்றோ எத்திசையும் பறந்தோம் கடமையை செய்ய சிறகுகள் கொண்டு, ஆனால் ரசிக்க கண்கள் இல்லை...
    ஆனால் இன்றோ கண்கள் உண்டு ,கண்டு ரசிக்க நேரம் உண்டு, ஆனால் சிறகுகள் இல்லா கிளியைப் போல அடைபட்டு இருக்கிறோம்.
    இக் கோலம் காண ஓடி வந்தாயோ..

    ��அடிமைப்படுத்திய மொழியையே அழகு பார்க்கும் நாங்கள், அன்னை மொழியாம் தமிழில் பிறக்கும் என் புத்தாண்டே உன்னை ஆராதிக்க மறவோமே...

    �� *அ* ன்பையும்,
    *ஆ* யுளையும்
    *இ* ல்லமெங்கும் *ஈ* த *உ* ன் *ஊ* ற்றென
    *எ* ங்கும்
    *ஏ* ற்றமதை
    *ஐ* யமின்றி
    ஒவ்வொருவரும்
    *ஓ* ங்கி *ஔ* டதமற்று எ *ஃ* கு
    போல் வலிமை பெற்று வாழ பிறந்தாயே என் புத்தாண்டே.... வாழ்க வாழ்த்துக....

    ��அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன்��
    ரேவதி சசிகுமார் ��

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...