♦ கொரோனா வைரஸின் முதல் நோயாளி குறித்து அறிவிப்புகள் வெளியாகி இன்றோடு நூறு நாட்கள் ஆனது.
♦கேரளாவில் தான் முதன்முறையாக கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
♦ஆரம்பம் முதலே வெளிப்படைத் தன்மையுடன் அம்மாநில நடந்து கொண்டது தான் மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு தீவிரமாக சென்றடைய காரணமாக அமைந்தது.
♦மேலும் கொரோனா நோய் தொற்று குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் முதல்வர் பினராயி விஜயனே நேரில் அறிவிக்கிறார்.
♦மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கேட்டறிந்து அதனை செயல்படுத்துவதிலும் அதிக முனைப்பு காட்டுகிறது அம்மாநில அரசு.
♦பொதுமக்களின் தேவையை உணர்ந்து முதலில் பாதுகாப்பான முறையில், சிறையில் மாஸ்க்குகள் செய்யும் பணியை தீவிரப்படுத்தியது கேரளா.
♦அனைவரும் N95 மாஸ்க்குகள் தான் உதவும்.
♦இது தேவைக்கு ஆகாது என்று பலரும் அப்போது கேலி செய்தனர்.
♦ஆனால் தற்போதையை இந்திய அரசின் சுகாதாரத்துறை “வீட்டிலேயே மாஸ்க்குகளை தயாரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
♦ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பருத்தி ஆடையையும் கூட 5நிமிடங்களுக்கு உப்பு போட்ட நீரில் கொதிக்க வைத்து பின்னர் முக கவசம் தயாரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று அறிவித்திருந்தது.
♦அமெரிக்காவின் சி.டி.சி (Centers for Disease Control and Prevention)-ம் கூட பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் டி-சர்ட் அல்லது பாந்தனாவில் முக கவசங்களை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
♦ரேப்பிட் டெஸ்ட்டுகள் கொண்டுவரப்பட்டு, மக்களுக்கு தொடர்ந்து பரிசோதனை செய்து வருகிறது அம்மாநிலம்.
♦எபோலா போன்ற தொற்றுநோயை கண்ட அம்மாநிலம், அதன் மூலம் கிடைத்த அனுபவத்தை இங்கே பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
♦இன்றைய நிலை
இன்றைய நிலவரத்தின்படி (10/04/2020) கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 258.
♦97 நபர்கள் இதுவரை இந்நோயில் இருந்து பிழைந்த்துள்ளனர்.
♦(90 வயது, 88 வயது நோயாளிகளும் உயிருடன் வீடு திரும்பியுள்ளனர்).
♦மொத்தமாக இந்நோயின் தாக்குதலுக்கு ஆளானவர்கள் 357.
♦இதுவரையில் 12710 நபர்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
♦1251 கம்யூனிட்டி கிச்சன்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு தேவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
♦ஒரு வேளை இந்நிலை மேலும் மோசமாகும் பட்சத்தில் கூட மக்களை பாதுகாக்க திட்டங்களுடன் இயங்கி வருகிறது கேரள அரசு.
♦1.73 லட்சம் படுக்கை வசதிகளை அடையாளம் கண்டுள்ளது.
♦அதில் 1.1 லட்சம் படிக்கை வசதிகள் இப்போது தயார் நிலையில் உள்ளது.
♦பரிசோதனைகளில் மாற்றம்♦
♦ஏப்ரல் 2ம் தேதி வரை, கொரோனா நோயின் மூன்றுக்கும் மேற்பட்ட,
♦ அல்லது அளவுக்கு அதிகமான நோய் அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை என்ற நிலையை வைத்திருந்தது.
♦ஆனால் ஏப்ரல் 3ம் தேதிக்கு பிறகு, இரண்டு நோய் அறிகுறிகள் இருந்தாலே சோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
♦கஞ்சிக்கோட்டில் ரெஸ்பிரேட்டர்கள், வெண்டிலேட்டர்கள், என்95 மாஸ்க்குகளை தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
♦மூன்று பேரிடர்கள்♦
♦கடவுளின் நாடு என்று அழைக்கப்படும் கேரளாவின் முக்கிய வருமானம் சுற்றுலாத்துறையில் இருந்து வருவது தான்.
♦லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் கேரளாவின் அழகை கண்டு ரசிக்க வெளிநாடுகளில் இருந்து படையெடுப்பது வழக்கம்.
♦2018ம் ஆண்டு பெருவெள்ளம்,
♦2019ம் ஆண்டு பெருவெள்ளம் என அனைத்திலும் சிக்கித் தவித்த மாநிலத்தின் சுற்றுலாத்துறை
♦கொஞ்சம் கொஞ்சமாக இப்போது தான் வளர்ச்சி அடைய துவங்கியது.
♦ஆனாலும் கொரோனாவால் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
♦மத்திய அரசின் நிவாரண நிதி உதவியாக வெறும் 157 கோடியை மட்டுமே கொடுத்துள்ளது.
♦இருந்தாலும், அம்மக்களின் ஒற்றுமை, கடந்த கால இயற்கை பேரிடர்களில் கற்றுக் கொண்ட பாடம், சகோதரத்துவம் தான் கொரோனாவிற்கு எதிராக தொடர்ந்து 100 நாட்கள் விடாமுயற்சியுடன் போராட உத்வேகம் அளித்துள்ளது.
♦கொரோனா இன, மத பேதம் பார்ப்பதில்லை♦
♦ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று 232 வெளிநாட்டினரை பத்திரமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தது அம்மாநிலம்.
♦வெளிநாட்டில் இருந்து வந்து தங்கியவர்கள் மீது தாக்குதல் நடைபெற, தாக்குதலுக்கு ஆளானவர்களை அணைத்துக் கொள்ளும் பொருட்டு,
♦உலகமே கொரோனாவால் அழிந்து கொண்டு உள்ளது.
♦இதில் துவேஷம் பார்க்க ஒன்றும் இல்லை.
♦ நம் மண்ணை நம்பி வந்தவர்களுக்கு நாம் தரும் வரவேற்பு இது தானா என்ற கேள்வியையும் முன் வைத்தார் பினராயி விஜயன்.
♦கொரோனாவுக்கு இனம், மதம், மொழி பாகுபாடு ஏதும் இல்லை என்பதை அவர் மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியில் அவர் கூறி வருகிறார்.
♦புலம்பெயர் ஊழியர்கள்
தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போன்றே, கேரளாவிலும் புலம்பெயர் ஊழியர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள்.
♦தங்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்வது முடியவே முடியாத காரியம் என்பதால்,
♦அவர்களின் பிரச்சனைகளை கருத்தில் கொள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
♦வேலை மற்றும் வருமானம் இல்லாமல் இருப்பதால் அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்க கம்யூனிட்டி கிச்சன்கள் தயாரானது.
♦மேலும் இந்த கம்யூனிட்டி கிச்சன்களில் பணியாற்ற இந்தி தெரிந்த கேரள ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
♦மொழி புரியாமல் இரண்டு பக்கங்களிலும் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க இந்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteReavthi Sasikumar Mam..
ReplyDeleteYour new year wish was wonderful mam, keep it up..
*Revathi
ReplyDeleteவணக்கம் தல
ReplyDeleteவணக்கம் அட்மின் அவர்களே
ReplyDelete