Skip to main content

முயற்சி பயிற்சி..


*ஒரு பெரிய கோபுரத்தில் பல பல்லிகள் வசித்து வந்தன. ஒரு நாள் அவை ஒரு பந்தயம் நடத்தின.*


*யார் முதலில் கோபுரத்தின் உச்சியை அடைவது என்று போட்டி.*


*நூற்றுக்கணக்கான பல்லிகள் மடமடவென்று ஏறத் தொடங்கின.*


*கொஞ்ச தூரம் போனதுமே பல்லிகளுக்கு தெரிந்துவிட்டது. இது தங்கள் சக்திக்கு இயலாத காரியமென்று.*


*“முடியாது. முடியவே முடியாது” பல்லிகளில் ஒரு கூட்டம் பந்தயம் தொடங்கி சில நிமிடங்களுக்கு உள்ளாகவே விலகிக் கொண்டது.*


*இன்னும் கொஞ்ச தூரம் போனதும் மீதியிருந்த பல்லிகளில் கணிசமானவை விலகிக் கொண்டன. “உயரத்தை அடையும்போது நமக்கு உயிர் இருக்காது” என்று கத்தின.*


*ஒரே ஒரு பல்லி மட்டும் மூச்சைப் பிடித்துக் கொண்டு முன்னேறிக் கொண்டே இருந்தது.*


*கீழே இருந்த பல்லிகள் எல்லாம் பெருங்குரல் எடுத்து கத்தின.*


*“தற்கொலை முயற்சிடா / வேண்டாம்டா தருதலை!”* *என முட்டுக்கட்டையாய் கத்தின.* 


*எந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் மேலும் சில நிமிடங்களில் உச்சியை அடைந்தது அந்த குட்டிப் பல்லி.*


*எல்லாப் பல்லிகளுக்கும் ஆச்சரியம். எப்படி இவனால் மட்டும் ஜெயிக்க முடிந்தது.*


*அந்த குட்டிப் பல்லியின் அண்ணன் ரகசியத்தை போட்டு உடைத்தது.*


*அவனுக்கு காது கேட்காது”.*


*நாமும் சில நேரங்களில் இப்படி தான் இருக்க வேண்டும்.*


*வெற்றியை எட்ட நினைப்பவர்கள் எதையும் காதில் போட்டுக் கொள்ளக் கூடாது.*


*நம்மை சிதைக்க எப்பேர்ப்பட்ட மோசமான கருத்துக்கள் கூறப்பட்டாலும் நாம் எதையும் பொருட்படுத்தக் கூடாது.*


*முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.*


 *தோல்விகள் சூழ்ந்தாலும்.* *இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை.*

Comments

 1. Wishing everyone a blessed morning ahead..

  ReplyDelete
 2. Unknown10/26/2021 3:25 am
  Mam trb office ku nerla pona response panuvangala anga yara
  Poi pakanam phone pana eduka matingranga

  Unknown frnd..

  Enna vishayama paaka poringa, romba thavirkka mudiyaatha issue ah irundha nerla ponga, 90% response slow ah dhan irukum..

  ReplyDelete
 3. Pg discontinue nala 3 years duration katuthu athu eligible ilanu solranga intha exam kaga
  2years padichuruken athan mam bayama iruku

  ReplyDelete
  Replies
  1. Yaar solradhu eligible illanu??? Apdi ellam onnum ila frnd.. Ithellam eligible illana 70% govt teachers continue pannave mudiyathu.. Exam ku munaadi idhellam nenachu discourage pannikadhinga.. Enoda frnd oruthavnga first year pg ku apuram 8years kalichu dhan second year pananga, correspondence course la ithellam sagajam. Ellathukum proper documents irundha endha problem yum illa.. Neenga demotivate agama padinga..

   Delete
 4. Second yr university laie correspondence la padichen mam Jan 2015 join pani Feb 2016 varai padicha mathiri tc kuduthurukanga
  ana exam may 2015 laie mudinguruchu pass certificate may 2015 nu iruku ena panrathu mam marksheet provision convocation elame iruku ethavathu plm varuma mam

  ReplyDelete
  Replies
  1. Oru problem yum varadhu.. Course completed and after clearing exams adhuku related degree certificate ellam irundha onnum problem illa..

   Delete
 5. Certificate matum thana mam kepanga Tc paka matanga thana mam periyar university la than padichen

  ReplyDelete
  Replies
  1. Degree certificate irukumbothu tc edhuku?? Athaellam onnum illa, u prepare well.. All the best..

   Delete
 6. Replies
  1. நண்பரே உங்களுக்காக தான் இந்த பல்லி கதை. வீணாக மனதை கொழப்பி கொள்ளாமல் நன்றாக படிக்கவும்

   Delete
 7. எல்லா எக்ஸாமும் தள்ளி போறத பாத்தா ஏதோ நடக்கப்போகுது போல

  ReplyDelete
  Replies
  1. அடுத்தவனுக்கு மார்க் அதிகம் போடலாம்.. ஆனால் நம்ம மார்க் ஐ குறைக்க முடியாது.. so, aim for high mark No one will stop u from getting job..

   Delete
 8. ஆமா சந்தேகமா தான் இருக்கு

  ReplyDelete
 9. Please tellme. Detail. About eelam theydee kalvi.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.

  தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.   தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு   தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . 06.07.2022 பத்திரிகை செய்தியின்படி ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- I ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினிவழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது நிர்வாக காரணங்களினால் , தாள்- I ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்படவுள்ளது . மேற்படி கணினிவழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சித் தேர்வு ( Practice Test ) மேற்கொள்ளவிரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு , தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் . இது குறித்த அறிவிக்கை , தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் .

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.