Skip to main content

இன்றைய சிந்தனை..

 

என்னிடம் ஒரு கைத்துப்பாக்கியும்
மூன்று குண்டுகளும் இருந்தன...


முதல் குண்டை என் அப்பாவின் நெற்றியில் வைத்து ஒரு அழுத்து அழுத்தினேன்...


நெற்றியைத் துளைத்து மூளையைக் குடைந்து பின் மண்டையைப் பொத்தலிட்டு குருதியோடு சிதறி அவரின் கண்கள் பிதுங்க என் கண்களை உற்று நோக்கியே சரிந்தார்...


இரண்டாம் குண்டை என் அம்மாவின் நெஞ்சில் வைத்து ஒரு அழுத்து அழுத்தினேன்...


இதயத்தைத் துளைத்து முதுகின் வழியாய் பொத்தலிட்டு இதயத்தின் திசுக்களோடு ஒட்டிக் கொண்டு அவள் சரிய விரல்களால் என் கையை தடவியப்படியே சரிந்தாள்..

மூன்றாம் குண்டை என் நாவு நனைக்கும்
உமிழ்நீர் எச்சிலோடு துப்பாக்கியின் குழலை உள்ளீட்டு ஒரு அழுத்து
அழுத்தினேன்...


என்னுடைய பின் மண்டையோட்டின்
வழியாக துளைப்பதற்கு முன்
மூளையின் கடைசிப் பதிவான
" அம்மா " வென அலறியே சரிந்தேன்...


இரண்டுக் கொலையும் ஒரு தற்கொலையும் நடந்தேறியது...


நான் சுட்ட முதல் குண்டின் பெயர்
" சொல் கேளாமை"...


நான் சுட்ட இரண்டாம் குண்டின்
பெயர் " தாய்பாசம் அறியாமை" ...


நான் சுட்ட மூன்றாம் குண்டின்
பெயர்  " சுயமதிப்பை உணராமை"...


நான் வைத்திருந்த கைத்துப்பாக்கியின்
பெயர் தான் " வாழ்க்கை"...


உங்களிடமும் கைத்துப்பாக்கியும்
குண்டுகளும் இருக்கின்றன....


விரல்களால் அழுத்தப் போகிறீர்களா அல்லது உள்ளங்கைகளால் வைத்து அதை உணரப் போகிறீர்களா? நீங்களே நன்றாக சிந்தித்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்...


கதையின் நீதி :-

நாம் எதிர்பார்த்த மாதிரி வாழ்க்கை எல்லோருக்கும் அமையாது, ஆனால் நம்ம முயற்சி பண்ணினால் கண்டிப்பாக நம்ம எதிர்பார்த்த மாதிரி நம்முடைய வாழ்க்கையை மாற்ற முடியும்...

உங்களைப் பெற்றெடுத்த தாய் தந்தையைத் தவிர வேறு யாரையும் நம்பாதீர்கள். 

பெற்றவர்களின் பாசத்தில் கோபம் இருக்குமே தவிர துரோகம் இருக்காது...

இது தான் உண்மை √

Comments

  1. Wishing everyone a blessed day ahead..

    ReplyDelete
  2. Pg exam date,poly technic exam date pathi deepawali muditha pin soluvangala mam

    ReplyDelete
    Replies
    1. Sir..

      Innum application issues sari agala pola, so seekirame trb inform pannuvanga.. Very soon..

      Delete
  3. டெட் தேர்ச்சி பெற்ற நம்முடைய நிலைமை எந்த அரசுக்கும் புரியவில்லை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..