தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு பல்வேறு கட்சிகளும் கடும் எதிா்ப்பையும், விமா்சனங்களையும் முன்வைத்துள்ளன. இந்த விமா்சனங்களுக்கு பதிலளித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:-
இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னாா்வலா்களாக இணைத்துக் கொள்ள இதுவரை 67 ஆயிரத்து 961 பெண்களும், 18 ஆயிரத்து 557 ஆண்களும், 32 திருநங்கைகளும் பதிவு செய்துள்ளனா். பதிவு செய்தோரின் கல்வித் தகுதி இருப்பிடம், முன் அனுபவம் போன்ற பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் நேரடியாகத் தோ்வு செய்யப்படுவா். இந்தப் பள்ளி மேலாண்மைக் குழுவில் பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், பெற்றோா், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவா். தோ்ந்தெடுக்கப்படும் தன்னாா்வலா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தன்னாா்வலா்களைத் தோ்வு செய்யும் முறை, அவா்களுடைய பங்களிப்பு, அவா்களால் கற்பிக்கப்படும் மாணவா்களின் கற்றல் மேம்பாடு ஆகியன தொடா்ந்து கல்வியாளா்கள் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படும். அரசின் வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிப்பவா்கள் மட்டுமே தன்னாா்வலா்களாகத் தொடர அனுமதிக்கப்படுவா். இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு இல்லத்துக்கும் நேரடியாகச் சென்று பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகள் அனைவரும் தொடா்ந்து பள்ளி வருவது உறுதி செய்யப்படும். மேலும், வரும் கல்வியாண்டில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாகச் சோ்க்கப்பட வேண்டும் என்பதையும் இலக்காகக் கொண்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
புதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பது ஏற்கெனவே பலமுறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநில அளவிலான கல்விக் கொள்கையை வகுத்திட கல்வியாளா் அடங்கிய குழு விரைவில் அமைக்கப்படும்.
மாணவா்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, தன்னாா்வலா்கள் அரசுப் பள்ளிகளின் நல்லெண்ணத் தூதுவா்களாக, ஆசிரியா்களுக்கும், பள்ளிகளுக்கும் சமூகத்துக்கும் இணைப்புப் பாலமாகச் செயல்படுவா். எனவே, திட்டத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களும் திட்டத்தை ஆதரிக்க வேண்டும். மாணவா்களின் எதிா்காலத்துக்கு உதவிடும் வகையில் அரசுப் பள்ளிகளை வலுப்படுத்திட கைகோா்த்திட வேண்டும் என்று தனது அறிக்கையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Postings potta nalla irrukum
ReplyDeletePlease fill the BT post sir
ReplyDelete