குமாரபாளையம், மேற்கு காலனி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மன்ற, கிளை துவக்க விழா நடந்தது.
மாவட்ட செயலாளர் முருக செல்வராசன் தலைமை வகித்தார். பள்ளிபாளையம் ஒன்றிய கிளை தலைவராக கண்ணன், செயலாளராக இளையராஜா,பொருளாளராக ரவிக்குமார், ஒன்றிய கொள்கை விளக்கம், மகளிரணி அமைப்பாளர், இலக்கிய அணி அமைப்பாளராக தலைமை ஆசிரியைகள் கோமதி, பாரதி, கவுசல்யாமணி ஆகியோர் உள்பட பலர் பொறுப்பேற்றனர்.
முரண்பாடுகளை களைந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு. தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.
Comments
Post a Comment