கோவை: அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், காலிப்பணியிட விபரங்களை, இணையதளத்தில் பதிவேற்றுவதற்கான அவகாசம், நாளை (29ம் தேதி) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு, ஆண்டுதோறும் மே மாதம் நடக்கிறது. நடப்பாண்டில், தொடக்க கல்வித்துறையும் இக்கலந்தாய்வை, ஆன்-லைன் மூலம் நடத்தியது.
மாவட்ட வாரியாக, காலிப்பணியிட விபரங்கள் பெற்று, கலந்தாய்வு நடக்கும் முன், இணையதளத்தில் பதிவேற்றுவது வழக்கம். இதற்கு பதிலாக, காலிப்பணியிட விபரங்களை, அந்தந்த பள்ளிகளில் இருந்து திரட்டும் வகையில், இயக்குனர் இளங்கோவன், புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி, அனைத்து அரசு, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளிலும், தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள், காலிப்பணியிட விபரங்களை, தலைமையாசிரியர்களே இணையதளத்தில், பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான படிவங்கள், தலைமையாசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்களால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை,www.tndse.com என்ற இணையதளத்தில் கடந்த, 26ம் தேதி வரை, பதிவேற்ற உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும், கால அவகாசம் நாளை (டிச., 29ம் தேதி) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட பயனர் எண், பாஸ்வேர்டு கொண்டு, எவ்வித பிழையும் இல்லாமல், துல்லியமாக தகவல்களை உள்ளீடு செய்ய, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!! "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்....., "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே..., " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது"....., " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...
Comments
Post a Comment