முற்காலத்தில் பஞ்சாங்கத்தை வைத்துத்தான், மழை, நீர் வளம், விவசாயம், கோடை இவற்றை கணித்தார்கள். அது ஓரளவு துல்லியமாக அமையும் என்றாலும் சில நேரம் பொய்த்துவிடும். ஆனால், பஞ்சாங்கத் தகவல்களும், கணிப்புகள் பெரும்பாலும் சரியாகவே நடந்து வருவதாக நம்ப்படுகிறது.
2017-ஆம் ஆண்டு இறுதியில் ஒக்கி புயல் தமிழகத்தின் தென் தமிழகத்தை குறிப்பாக குமரி மாவட்டத்தை சூறையாடியது. மீனவர்களின் வாழ்வில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டது. நெல்லை, குமரி மாவட்ட அணைகள் நிரம்பியுள்ளன. சென்னையில் பருவமழை தாண்டவமாடியது. புறநகரில் வெள்ளம் சூழ்ந்தது. இது முன்பே பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டிருந்தது. அதே போல வரும் 2018-ஆம் ஆண்டு புயல், மழை எப்படி இருக்கும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.
ஹெவிளம்பி வருஷத்திய ஆற்காடு பஞ்சாங்கத்தில், 2018ஆம் ஆண்டு ஆடி 5-ஆம் தேதி சனிக்கிழமை வருவதால் உலகம் சுபீட்ஷம் அடையும். காலத்தில் மழை பொழியும். தங்க நகை சரிவு ஏற்படும்.
கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 2018-இல் 9 காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி 5 காற்றழுத்த மண்டலம் பலகீனம் அடையும், 4 காற்றழுத்த தாழ்வு மண்டலம் பலமடைந்து புயலாக மாறும். தமிழகம் முழுவதும் நல்ல மழை பொழியும். மாலை மற்றும் இரவில் மழை பொழியும்.
காய்கறிகள் விலை வீழ்ச்சி: இந்த ஆண்டு தேங்காய் விலை விண்ணை எட்டியுள்ளது. ஒரு தேங்காய் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் வரும் 2018ஆம் ஆண்டில் தென்ன, மா, பலா, வாழைப்பழம் விளைச்சல் நன்றாக இருக்கும். இதனால் காய்கறிகள் விலை வீழ்ச்சியடையும். தேங்காய் விலை வீழ்ச்சியடையும். பசுக்களால் நல் பால் உற்பத்தி அதிரிக்கும். மடாதிபதிகளுக்கு புதிய சட்டதிட்டங்கள் ஏற்படுத்தப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நிலையில்லா அரசு: மாநில அரசு நிலையில்லாத அரசாக ஆட்சி நடத்திட நேரிடும். பூமியில் அரசாங்கத்திற்கு பல கோடி கணக்கில் புராதன புதையல் கிடைக்க வாய்ப்பு உண்டு.
நல்ல மழையும் பாதிப்பும்: ஆடி முதல் கார்த்திகை மாதம் வரை நல்ல மழை பெய்யும், வடக்கே காசி, கயா, அயோத்தியிலும், தெற்கே ராமேஸ்வரம், திருநெல்வேலி, திருச்சி, மதுரையிலும் நில நடுக்கம் ஏற்படும். தமிழக நதிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும், அணைகள் நிரம்பி வழியும்.
தென்மேற்கு பருமழை காலமான ஆடி, ஆவணி மாதத்தில் பகல், இரவில் எல்லா இடங்களிலும் மழைபொழியும் விமானம், ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும். பம்பாய், கொல்கத்தா அதிகம் பாதிப்பு ஏற்படும். தமிழகத்தில் மழை பிரதேசங்களில் நல்ல மழை பெய்யும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.
வங்கிகளில் மாற்றம்: மத்தியில் பல புதிய வரி திட்டங்கள் அமுல்படுத்த நேரிடும்.வங்கிகளில் பல புதிய மாற்றங்கள் ஏற்படும் புதிய ரக ரூபாய் நோட்டுகள் அச்சிட நேரும்.
விலை ஏற்றம்: தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம் பாதரசம் போன்ற திராவகம் போன்றவைகளின் விலைகள் அதிகரிக்கும்.
உயிருக்கு ஆபத்து: மூத்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும். கொசுக்களால் ஒரு புதிய நோய் உருவாகும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.
பெரும்பாலான தகவல்கள் பல நேரங்களில் பொய்த்துப் போயிருக்கின்றன. இருந்தாலும்... பஞ்சாங்கம் பலவற்றை முன்னாலேயே கணிக்க வைத்து சொல்லியிருப்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது.
Comments
Post a Comment