பருவத் தேர்வு முடிவுகளை மாணவர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் அனுப்பும் முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி உமா கூறியதாவது: பல்கலைக்கழகத்தின் சார்பில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட 3, 5, 7 ஆகிய பருவத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளை www.annauniv.edu, coe1.annauniv.edu, coe2.annauniv.edu, aucoe.annauniv.edu ஆகிய இணையதளங்கள் மூலம் பார்த்துக் கொள்ளலாம். மேலும், பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முறையாக தமிழகம் முழுவதும் உள்ள 550 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் செல்லிடப்பேசிகளுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன என்றார்.
தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு. தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.
Comments
Post a Comment