Skip to main content

TODAY'S THOUGHT..

 ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான். கோட்டைக் கதவைக் கைகளால் திறந்து தள்ள வேண்டும்.


வெற்றிபெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும். தோற்றால் தோற்றவனின் கை வெட்டப்படும். மக்கள் பலவாறாக யோசித்து, பயந்து யாரும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.


ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முன்வந்தான்.

'போட்டியில் தோற்றுவிட்டால் கைகளை வெட்டி விடுவார்கள். உன்னுடைய எதிர்காலம் என்னவாகும்?' என்றார்கள்.

அவன் சொன்னான், 'ஐயா வென்றால் நானும் ஒரு அரசன், தோற்றால் கைகள் தானே போகும். உயிரில்லையே' என்று கூறிவிட்டு கோட்டைக் கதவை இளைஞன் தள்ளினான்.


என்ன அதிசயம்! கதவு சட்டென திறந்து கொண்டது. ஏனென்றால் கோட்டைக் கதவுகளில் தாழ்ப்பாள் போடப்படவில்லை. திறந்துதான் இருந்தது. பலபேர் இப்படித்தான் இருக்கிறார்கள்.


தோற்றுவிடுவோமோ, எதையாவது இழந்து விடுவோமோ என்று எதற்கும் முயற்சிக்காமலேயே விட்டுவிடுகிறார்கள்.
அனைவரும் அறிந்த 'முயல்-ஆமை' கதையில் முயலின் தோல்விக்கு 'முயலாமையே' காரணம்.

நம்புங்கள்!! 


"முயற்சி திருவினை ஆக்கும்"..

Comments

  1. Wishing everyone a blessed day ahead..

    ReplyDelete
  2. Mam, 2013 tet pass panni certificate verification muduchurke...na new ah community certificate vangalama? online la

    ReplyDelete
    Replies
    1. Yarathu reply panuga pls

      Delete
    2. Ippo Online ceticate thaan ellathukkum kekuranga.. Palaya card la varra certificate not valid now.

      Yerkanave muditha cv kku onnum problem illa... Puthusa online la certificate vaangikolvathu nallathu

      Delete
    3. Aj sir /mam..

      Since you have completed CV it not needed, bt still for your reference apply it online and get a copy..

      Delete
    4. Tq mam and selva sir

      Delete
  3. Admin mam neenga tet ku apply panniyacha

    ReplyDelete
  4. ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை; தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்

    ReplyDelete
    Replies
    1. ஆண்டு தோறும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது தொடர்பான அரசின் விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்

      Delete
    2. நல்லா வேணும்

      Delete
    3. What will happen to them mam.

      Delete
    4. They won't be sent from govt job, increments might be kept on hold..

      Delete
  5. **TET - ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல கூட்டமைப்பு **

    நமக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி

    முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு நடைபெறும் மாபெரும் நிகழ்வு.....

    அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்....


    **நிகழ்வு இடம் அறிவிப்பு **


    **தேதி : ஏப்ரல் 8 வெள்ளிக்கிழமை **

    அனைத்து TET ஆசிரியர்கள் குழுக்களும் இணைந்து முன்னெடுக்கும் நிகழ்வானதால் கடற்கரை அருகாமையில் பல்வேறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன....

    100மீட்டர்,150 மீட்டர் இடைவெளியில்



    அதில் நமக்கு ஒதுக்கப்பட்ட இடம் : **சென்னை பல்கலைக்கழகம் ** வளாகம்.

    **Madras university **

    **Madras university ** கேட்டு வரவும்.


    நேரம் : சரியாக காலை 9.00 மணி

    அனைத்து ஆசிரியர்களும் வந்து சேர்ந்த பின் அனைத்து குழுக்களும் ஒரே இடத்தில் இணைந்த பின் நிகழ்வு ஆரம்பிக்கும்

    **முக்கிய அறிவிப்பு **

    **நினைவூட்டல் **

    1. TET சான்றிதழ், நகல்

    2. காலை, மற்றும் மதிய உணவு ( செலவு மிச்சமாகும் )

    அதிகம் இருந்தால் மற்றவர்களுக்கும் பகிர்ந்தால் நன்று.

    தானத்தில் சிறந்த தானம் **அன்னதானம் **

    மறக்காமல் 1 லிட்டர் தண்ணீர் bottle.

    3. **குடை ஓன்று ** கண்டிப்பாக கொண்டு வரவும்

    அனைவரும் குடை பிடித்தால் அதிக எண்ணிக்கை காட்டும், மற்றும் வெயிலுக்கு இதமாக இருக்கும்.


    4.குழந்தைகளை கொண்டு வரும் ஆசிரியர்கள் தின்பண்டங்கள் மற்றும் நொறுக்கு தீனிகள்

    6. Paste, Towel, one set dress, mobile charger, power Bank.

    7. மருந்து மாத்திரைகள், ஏதேனும் தேவை எனில்.....

    8. தவறாமல் மிகமுக்கியமாக தங்கள் மாவட்டத்திலிருந்து குறைந்தது 5 ஆசிரியர்களின் தொடர்பு எண்கள் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.


    9. சூழ்நிலைக்கு ஏற்ப நிகழ்வுகள் மாறலாம், whats app குழுக்களில் அறிவிக்கப்படும்

    குழுக்களில் இணைந்திருங்கள்


    இவண்.
    அல்டாஸ்
    சமூக
    ஊடகப்பிரிவு

    TET - ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்.

    ReplyDelete
  6. TRT GO 149 ஐ போராட்டத்தின் வழியே அரசை பின் வாங்க வைத்து விட்டால், தமிழகத்தின் மிக வலிமையான ஆசிரியர் சங்கமாக இந்த சங்கம் மாறும்

    ReplyDelete
    Replies
    1. கனவு காணுங்கள்

      Delete
    2. வா போட்டி தேர்வில் மோதி பார்ப்போம் paper 2 மூன்று முறையும்,paper 1ல் மூன்று முறையும் வெற்றி பெற்று, trt syllabus படிச்சி முடிச்சிட்டு wait பண்ணிட்டு இருக்கேன் வா,

      Delete
    3. நீங்கள் 3 முறை தேர்ச்சி பெற்றுள்ளீர்கள் எனில் முதல் முறை 2012 ல் தேர்ச்சி பெற்று இருந்தால் வேலைக்கு சென்றிருக்கலாம்

      Delete
  7. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் .

    ReplyDelete
  8. Hai mam,I am also preparing for TRT exam.please send the books pdf to ug trb syllabus related topics.It will be very useful for us.

    ReplyDelete
    Replies
    1. Dear Unknown frnd..

      Sure I'll post the syllabus related topics, am working on it..

      Delete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..