ஏளனப் பார்வை என்னைப் பார்த்து ஏன் வீசுகிறாய்?
ஆசானாக இல்லாமல் அருவம் போல் காட்சியளிக்கிறேனா?
அடிமை சாசனம் புகுத்தப்பட்ட ஆசிரியர் நான் என்பதை அறிந்து கொண்டாயா???
ஓங்கி அறைந்த உன் கைகளுக்கு பூமாலையும் அதை தடுக்க முற்பட்ட என் கைகளுக்கு கைவிலங்கும் தரப்பட்ட
நீதியை
நிமிடத்திற்கு ஒரு முறை
அதிரடி செய்திகளாக
அரங்கேற்றும் அண்ணன்மார்களை அறிந்து வைத்திருப்பதாலோ???
கால்களை என்னை பார்த்தவுடன் மடக்கி விடுவாய் என நினைத்தேன்
நீட்டிய கால்களை என் கண் முன்னே நீ ஆட்டிடும் பொழுது நான்
ஆடித்தான் போகிறேன் கல்வி போதிக்கும் பிச்சைக்காரனாக
உணர்கிறேன்!!!!
புத்தகத்தை எடு
தொலைத்து பல மாதங்கள் ஆகிவிட்டது
எழுதி போடுவதை எழுது
Note லாம் எடுத்துவரும் பழக்கமே இல்லை
பாடம் நடத்த வேண்டும்
அமைதி காத்திடு
முடியாது என்று நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா??
இப்பதில்களுக்கான என் அழுகை ஆற்றாமையின் வெளிப்பாடாக
ஆதரவின்றி தவிக்கும் அனாதையாக அல்லல்படுகிறேன்!!!!
நீ அட்டையாக மாறி விட்டாய்
என் சக்தியை ரத்தமாய்
உறிஞ்சுகிறாய்
ஓரறிவு உள்ள உயிரனமாய் உணர்வுகளை
கையாளத் தெரியாத ஒழுக்கத்தின் கதவுகளை உடைத்தெறிந்த
முதுகெலும்பு நொறுக்கப்பட்ட
வலுவற்ற சமுதாயத்தின்
பிரதிநிதியாய் இன்று நீ உருவாகிவிட்டாய்!!!!
என் பயம் ஒன்றே ஒன்று தான்
நாளை என்ற ஒன்று உனக்கு இருக்குமா????
எதிர்காலம் என்பது நிலைக்குமா?
---- கீதாஞ்சலி மஞ்சன்.
Wishing everyone a blessed day ahead..
ReplyDeleteகாலை வணக்கம் அட்மின் சகோதரி...
ReplyDelete