Skip to main content

SUNDAY'S THOUGHT..

 ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான்...!!அதிகாலையில் எழுந்தவுடன்

"சூரிய உதயத்தைப் பார்ப்பது" ,
அவனது வழக்கம்....!!

ஒரு நாள் காலையில் சூரியோதயத்துக்கு பதில், ஒரு பிச்சைக்காரன் முகத்தில் விழித்து விட்டார்.

அதனால் கோபத்தோடு கீழே இறங்க திரும்பிய போது, தலையில் அடிபட்டு இரத்தம் வந்துவிட்டது....!!

கோபம் கொண்ட அரசர்,
பிச்சைக்காரனை அரண்மனைக்கு இழுத்து வர செய்து, தூக்கிலிடும்படி கட்டளை பிறப்பித்தார்.....!!

பிச்சைகாரன் சிறிதும் கலங்கவில்லை.....!!
கல கலவென சிரிக்கத் தொடங்கினான்....!!
அரசருக்கு அவன் சிரிப்பதை பார்த்ததும் கோபம் வந்துவிட்டது ...!!

மற்றவர்களுக்கு திகைப்பு...!!

அரசன் பிச்சைக்காரனை      "ஏன் சிரிக்கிறாய்?" என்று கோபமாக கேட்க,
பிச்சைக்காரன்,
     "என் முகத்தில் நீங்கள் விழித்தால் ,
   உங்களுக்கு சிறு காயம் மட்டுமே  அரசே....!!
  ஆனால்,
     உங்கள் முகத்தில் நான் விழித்ததால்,......
   " என் உயிரே போக போகிறதே" ,...!!
இப்போது மக்களுக்கு மிக நன்றாக புரிந்து விடும்....

  மன்னன் முகத்தில் எவன் விழித்தாலும் மரணம் நிச்சயம் என்று...!!

  அரசனின் முகம் அவ்வளவு "ராசியான முகம்" ,
          என நாடே சிரிக்கும் அரசே...என்றான்..!!
   அதை எண்ணி சிரித்தேன்" என்றான்,
அரசனுக்கு இப்போது தான் தான் செய்ய இருந்த தவறு உறைத்தது...!!
தன் தவறை உணர்ந்து தலை குனிந்தான்.
தண்டனை ரத்து செய்யப் பட்டது....!!
தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர்....!!

அது இல்லையென்றால்,
    சமயத்தில் தன் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.
 எதை இழந்தாலும்,
தன்னம்பிக்கையை இழக்காதீர்கள்....!!

Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. PS shanmugam 9398504751.

    ReplyDelete
  3. Tet apply date extend panuvangala sis

    ReplyDelete
  4. Ano mam tet ne syllabus grade 1 to 5 மட்டும் கொடுத்து இருக்காங்க 1to 5 alone படித்தால் போதுமா

    ReplyDelete
    Replies
    1. Avanga apdi dhan soluvanga apuram difficulty level nu 8th varaikkum questions kepanga, so 8th vara padichukradhu naladhu..

      Delete
  5. Psychology any changes in paper-1

    ReplyDelete
  6. Some changes have in paper2

    ReplyDelete
  7. சூப்பர் ஸ்டோரி மேடம்

    ReplyDelete
  8. Mam BTpost approximately evlo irukkum?

    ReplyDelete
  9. Replies
    1. Thanks for your reply mam, somebody told vacancy is too low, that's why I'm asking...

      Delete
    2. What we are expecting is also low only, lets hope for the best..

      Delete
    3. Thanks for your reply mam

      Delete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..