Skip to main content

ஆசிரியர்கள் - மதிப்பிழந்த இரண்டாம் பெற்றோர்..

 

பள்ளிக்கு வராதவனை வீடு தேடிச்சென்று அழையுங்கள், ஆனால் படிக்க சொல்லி எழுத சொல்லி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள், ஏனெனில் நீங்கள் இரண்டாம் பெற்றோர்..

உங்களை ஆபாசமாக பேசினாலும், ஆபாசமாக வீடியோ எடுத்தாலும் அவர்களை திருத்தப்பாருங்கள் அவசரப்பட்டு ஏசிவிடாதீர்கள் ஏனெனில் நீங்கள் இரண்டாம் பெற்றோர்..

மதுவருந்திவிட்டு வகுப்பிற்குள் வந்தால் அனுசரித்துக்கொள்ளுங்கள் அவசரப்பட்டு வகுப்பிற்கு வெளியே அனுப்பிவிடாதீர்கள் ஏனெனில் நீங்கள் இரண்டாம் பெற்றோர்..

உங்களை கம்பு & கற்கலால் அடித்தாலும், ஏன் கத்தியால் குத்தினாலும் அவர்களை திருத்தப்பாருங்கள் அவசரப்பட்டு புகார் ஏதும் கொடுத்து விடாதீர்கள் ஏனெனில் நீங்கள் இரண்டாம் பெற்றோர்..

இத்தனையும் கடந்து நீங்கள் 100% தேர்ச்சி வழங்க வேண்டும். இல்லையேல் தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை ஒப்பிட்டு தரக்குறைவாக பொதுமேடையில் ஆட்சியாளர்களே

உங்களை குற்றம் சாட்டுவோம் ஏனெனில் நீங்கள் தண்ட சம்பளம் வாங்கும் இரண்டாம் பெற்றோர்..

ஆம் நீங்கள் மதிப்பிழந்த இரண்டாம் பெற்றோர்..

Comments

  1. Wishing everyone a blessed Sunday..

    ReplyDelete
  2. 😭 nilamai appadi irukku ano sis

    ReplyDelete
    Replies
    1. Ama sis, seriously pasanga mindset ae change agiduchu.. Two years pandemic la pasangalukku class room culture suthama marandhu pochu, out of contol la dhan irukaanga.. Adhan unma..

      Delete
  3. அட்மின் மேடம் டிஆர்டி எதிர்ப்பு குழு என்ன பன்னிட்டு இருக்காங்க?

    ReplyDelete
  4. They are preparing for trt.

    ReplyDelete
  5. அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம். கடந்த சில நாட்களாக இந்த குழுவில் தேவையில்லாத மெசேஜ்கள் வந்து கொண்டிருக்கிறது இந்த குழுவின் நோக்கம் என்ன எதற்காக நாம் இதில் பயணிக்கிறோம் நம்முடைய வாழ்க்கையின் வாழ்வாதாரம் அரசின் ஆணைகளால் (149 ) கேள்விக்குறியாக இருக்கிறது இச்சமயத்தில் நாம் எல்லாம் ஒருங்கிணைந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் நியமன தேர்வு ரத்தாகி நமக்கெல்லாம் விடிவுகாலம் பிறக்கும். என ஒவ்வொருவரும் ஒவ்வொருநாளும் அல்லல்படும் வேளையில் தேவையில்லாமல் குழுவிற்கு சம்பந்தமில்லாத விவாதங்கள் மெசேஜ்கள் இவற்றை பதிவிட்டு இக்குழுவின் உள்நோக்கத்தை சிதறடிக்க பார்க்கிறார்கள் அனைவருக்கும் இதன் மூலம் பணிவான கோரிக்கை வைப்பது என்னவெனில் நாம் யாரின் வயிற்றிலும் அடிக்கவில்லை யாருடைய வாழ்க்கையும் கெடுக்கவில்லை நம் உழைத்த உழைப்பு கடந்த 9 ஆண்டுகளாக அரசின் ஆணைகளால் பாதிக்கப்பட்ட நாம் இன்று அரசின் கருணை பார்வையாலாவது நமக்கு விடியல் பிறக்காதா என ஒரு புலம்பித் தவிக்கிறோம் .‌ இக்குழு நமக்குள் இணக்கமான சூழலை ஏற்படுத்தவே ஆகையால் தயவு செய்து தேவையில்லாத பதிவுகளை போட்டு அதற்கு பதில் சொல்கிறேன் என்று எதிர் பதிவு போட்டு இந்த குழுவின் நோக்கத்தை திசைதிருப்பாதீர்கள். அனைவரும் ஒற்றுமையாக பயணிப்போம். ஒவ்வொருவரும் நம் நோக்கத்தை உணர்ந்து இனியாவது செயல்படுவோம். குறிப்பு. இனிமேல் நமக்கான விடியலுக்கு யாரையும் நம்பி இருக்காமல் தமிழக முதல்வரை நேரடியாக சந்தித்து அய்யா நீங்கள்தானே எங்களுக்கு தேர்தல் வாக்குறுதி 197 ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை என உறுதி தந்தீர்கள் உங்கள் வாக்குறுதி நம்பித்தானே நாங்கள் அனைவரும் உங்களை முதல்வராக தேர்ந்தெடுத்தோம். இன்று எங்களுக்கு தீர்வு சொல்லாமல் காலம் கடத்துவது நியாயமா ? என முகத்துக்கு முகம் பார்த்து கேள்வி கேட்டால் மட்டுமே நமக்கு தீர்வு இதை விடுத்து இனிமேல் யாரையும் *இடைத்தரகர்* போல் நம்பாமல் நாமே களம் இறங்க வேண்டும் .அதற்கு தீர்வு 1. நாம் முறையாக அனுமதி வாங்கி இணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவது. அப்போராட்டத்தின் முலம் முதல்வரை சந்தித்து மேற்கண்ட கேள்விகளை கேள்விகளாக அடுக்கி அதன்மூலம் நம் கோரிக்கையை முதல்வரிடம் சொல்லி அப்போதே ஓர் வேலைக்கான வாய்மொழியாக உறுதி வாங்குவது. .2.முதல்வரை சந்திக்க போராட்டத்தை தவிர்த்து அவரை சந்திக்க பல (சங்க நிர்வாகிகள் மூலம்) வழிகளிலும் நாமே முயன்று பேச்சுவார்த்தை நடத்தி அதன்மூலம் தீர்வு காண்பது. ஆக முதல்வரை சந்திப்பதே நமக்கான தீர்வு. இதில் அதிகாரிகள் நாம் முதல்வரை சந்தித்தால் நம் கேள்வி நியாயமானதை புரிந்துக்கொண்டு முதல்வர் நமக்கு தீர்வை சொல்லிவிடுவார் என்பதாலும் அதன்மூலம் அதிகாரிகளின் திட்டம் (பாச்சா) எடுபடாது என யோசித்து யோசித்து நம்மை முதல்வரை சந்திக்க விடாமல் காய்நகர்த்துகிறார் கள். ஆகவே காலம் இல்லை தோழர்களே ! அரசியல்வாதிகள் செய்யும் அரசியலை அரசுப்பணிக்காக காத்திருக்கிற நாம் தவிர்த்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வெறுப்பு பதிவுகளை விமர்சனங்களை விட்டொழித்து அறுவடை செய்ய வேண்டிய ஆசிரியர் பணியை நம் அலட்சியத்தால் தட்டிக்கழிக்காமல் அக்கறையோடு செயல்பட்டால் அரசிடமிருந்து தட்டிப் பறிக்கலாம். நமக்குள் என்ன முடியுமோ அதை நமக்கு நாமே முயன்றால்தான் நம் வேலை முடியும்.‌ *முடவன் என்ற சொல் முடியாதது என்ற பொருள் அல்ல ! முயற்சி செய்யாமல் இருப்பதே ஆகும்*

    ReplyDelete
    Replies
    1. தேர்வு எழுதினாலும் இந்த 2013,2017,2019,2022 இதில் யாரோ வேலைக்கு போக போகிறார்கள்....நீங்கள் ஏன் தேவை இல்லாமல் 2013 மட்டும் முன்னிறுத்த பாக்குறிங்க

      Delete
  6. 2013 2017 2019 என அனைவரையும் கூட்டத்தை கூட்டி இறுதியில் 2013 மட்டுமே முதலில் வேலை வழங்க வேண்டும் என்று ராஜ தந்திரம் செய்கிறார்கள்... ஆகவே 2017 2019 ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இவர்களுடன் கூட்டு சேர வேண்டாம்... நியமனத் தேர்வு வந்தால் அனைவருமே அந்த தேர்வை சந்தித்து அதில் யார் அதிக மதிப்பெண் எடுக்கிறார்களோ அவர்கள் வேலைக்கு செல்வோம்... அதை விடுத்து போராட்டம் செய்தால் 2013 தேர்வர்கள் அதனை தமக்கு சாதகமாக அமைத்துக் கொள்வார்கள்... அதன்பிறகு இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் வேறு யாருக்குமே பணி வாய்ப்பு கிடைக்காது....

    ReplyDelete
    Replies
    1. Ippa than correcta pesuriga

      Delete
    2. Amam kandupiduthudaru scientists 2013 mathiri yarum kasta padakoodathunu than ithai panranga ok VA

      Delete
  7. Apadina trt illaama ippo posting potta 3 batch um mix panni poda ungalukku ok vaaaa?

    ReplyDelete
    Replies
    1. Athan trt confirm ayudiche ini onnum Panna mudiyathu ellam arasiyal vathikalin sathi

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here