Skip to main content

இயல்பு..

 நீங்கள் இயல்பிலேயே மகிழ்ச்சியானவர். உங்களைச் சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புகிறீர்கள் ..


அப்படியானால்,'' சோதனை வந்தால் ஏன் பதற்றம் அடைய வேண்டும்.? ஏன் உங்கள் இயல்பை மற்றவர்களுக்காக மாற்றிக் கொள்ள வேண்டும்.?

இதைப் பொறுத்தவரையில், தத்துவ ரீதியாக சிந்தனையாளர் கூறும்போது,

 *“எப்போதும் நீங்கள் நீங்களாகவே இருங்கள்; மற்றவர்களாக மாற விரும்பாதீர்கள். உங்கள் தனித் தன்மைதான் உங்களை என்றென்றும் மற்றவர்களிடம் இருந்து வேறு படுத்திக் காட்டும்*.

அதை மறந்தால் மானித சமுதாயத்தில் நீங்கள் சரியான ஓர் உறுப்பினராக இருக்கவே முடியாது” என்கிறார்!

பல பேர் பிறரைப் பார்த்து காப்பி அடித்து’ அதுபோல் தாங்கள் இருந்தால் சிறப்புக் கூடும் என்கிறார்கள். ஆனால், ஆழ்ந்து சிந்தித்தால் இது சரியான கருத்தல்ல என்று புரியும்!

ஒரு மீன் தொட்டிக்கு அருகே ஒரு புத்த பிக்குவும் அவரது சீடரும் நின்று கொண்டிருந்தனர்.. அந்த தொட்டியின் விளிம்பிலிருந்த ஒரு தேள் தவறி தொட்டிக்குள் விழுந்தது.

உடனே அந்த புத்த பிக்கு தண்ணீருக்குள் கையை விட்டு தேளை எடுத்து வெளியே விட்டார். அப்போது அவரது கையில் தேள் கொட்டியது. மீண்டும் அந்த தேள் திரும்பி தொட்டிக்குள் விழுந்தது.

உடனே சற்று தாமதிக்காமல் கையை தொட்டிக்குள் விட்டு தேளை எடுத்து வெளியே விட்டார். இந்த முறையும் தேள் கொட்டாமல் இல்லை  மறுபடியும் தேள் தொட்டிக்குள் விழ ,புத்தபிக்கு காப்பாற்றுகிறார்

அப்போதும் தேள் கொட்டுகிறது..பொறுக்க முடியாமல் புத்த பிக்குவின் சீடர் கேட்கிறார்,அதுதான் உங்களை கொட்டுகிறதே அதை ஏன் காப்பாற்று கிறீர்கள்?

அதற்கு புத்த பிக்கு,

'' கொட்டுவது என்பது தேளின் இயல்பு அதைக் காப்பாற்றுவது என்னுடைய இயல்பு. ஏன் என்னுடைய இயல்பை மாற்றிக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்.

எந்த சோதனையும், துன்பங்கள் வந்தாலும் உங்களின் இயல்பையும் மாற்றிக் கொள்ளக் கூடாது என்பதுதான் இந்தக் கதையில் சொல்லப்படும் நீதி.


*மற்றவர்கள் உங்களை புரிந்து கொள்ளாவிட்டாலும்.*
*நீங்கள் நீங்களாகவே இருங்கள்*.. *மனிதர்களை திருப்திப் படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு...*

இந்த மனிதர்களிடம் ,  *எட்ட முடியாததை விட்டு விடுங்கள்..  நீங்கள் அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்..

Comments

  1. Wishing everyone a blessed day ahead..

    ReplyDelete
  2. Math graduates who are preparing for TRT can check out the following link..

    http://mathworld.wolfram.com

    ReplyDelete
    Replies
    1. TNPSC போல TRB லும் தமிழ் வழி இட ஒதுக்கீடு வழங்கப்படுமா?

      Delete
  3. Gud evening admin mam
    This is my first comment mam
    Mam government aided schools la coming academic year posting poda possibility Iruka mam......
    Waiting for ur reply mam

    ReplyDelete
    Replies
    1. Subramanian Sir..

      Welcome to Puthagasalai..
      Kandippa possibility iruku sir.. Upcoming year nichayama process pannuvanga..

      Delete
    2. Sorry for the late reply sir, keep in touch..

      Delete
    3. Gud morning admin mam...... it's ok mam.....thank you for your reply ...aided schools posting pathi news therinja share pannunga mam...

      Delete
  4. உறுதியாக வாய்ப்புகள் உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளி புதிய பணி நியமனம். இது தொடர்பான தகவல் தெரிந்து கொள்ள sekar reporter யூட்யூப் சேனல் போய் பாருங்கள் நண்பா. தங்களுக்கான முழு தகவல் கிடைக்கும். . ( supreme court la may 11 இறுதி விசாரணை வர உள்ளது. Judgement வெகுவிரைவில். . ) என்றும் அன்புடன் ....

    ReplyDelete
  5. சு.ரா. அவர்களுக்கு...
    தகவலுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  6. Admin mam, pg vacancy increase aguma mam, maths evalo vacancy increase aga chance iruku mam

    ReplyDelete
    Replies
    1. Increase aga chances iruku.. Exact number guess panna mudiyathu because it depends on vacancies based on counselling but chances iruku..

      Delete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...