''பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு விவகாரத்தில், நான்கு நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கலாகும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,058 விரிவுரையாளர்களை நியமிக்க, 2017
செப்டம்பரில் எழுத்துத் தேர்வு நடந்தது. ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நடத்திய, இந்தத் தேர்வின் முடிவுகள், நவம்பரில் வெளியிடப்பட்டன. அப்போது, தேர்வு முடிவில், 200 பேர் தில்லுமுல்லு செய்து, அதிக மதிப்பெண் பெற்றதாக புகார் எழுந்தது. உடன், டி.ஆர்.பி., அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முறைகேடு நடந்தது உறுதியானது. இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார், மோசடி வழக்கு பதிந்து, ஐந்து பேரை கைது செய்துள்ளனர். இந்த பிரச்னையால், பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டன. ஏற்கனவே நடந்த சிறப்பு ஆசிரியர் பதவிக்கான தேர்வு முடிவுகளும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், கல்லுாரி பேராசிரியர் பணி, வேளாண் பயிற்றுனர் பணி, மாவட்ட கல்வி அதிகாரிகள் பணிக்கான, தேர்வு அறிவிப்புகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் நேற்று கூறுகையில், ''பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு விவகாரத்தில், நான்கு நாட்களில், விசாரணை அறிக்கை தாக்கலாகும். அதை தொடர்ந்து, நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் துவங்கும்; புதிய தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகும்,'' என்றார்.
"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!! "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்....., "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே..., " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது"....., " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...
Comments
Post a Comment