சிவகங்கை: உதவித்தொகை பெறுவதற்காக துவங்கப்பட்ட மாணவர்களின் சேமிப்பு கணக்குகளில், வங்கிகள் அடிக்கடி பணத்தை பிடித்தம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு, ஊரக திறனாய்வு தேர்வு, தேசிய வருவாய் வழி படிப்புதவித் தொகை என, மூன்று விதமான உதவித்தொகை வழங்கப்படுகின்றன. தவிர ஆதி திராவிடர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கும், பிற்பட்டோர் நலத்துறை மூலம் சிறுபான்மையின மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.
உதவித்தொகை தற்போது இ.சி.எஸ்., முறையில் மாணவர்களின் வங்கி சேமிப்பு கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படுகின்றன. இதற்காக மாணவர்கள் தேசிய வங்கிகளில் ’ஜீரோ பேலன்சில்’ சேமிப்பு கணக்கு துவங்க வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ’ சேமிப்பு கணக்கு செயல்பாட்டில் இருக்க கண்டிப்பாக குறைந்தது 100 முதல் 500 ரூபாய் செலுத்த வேண்டும்,’ என கூறி, வங்கி அதிகாரிகள் ’டெபாசிட்’ பெறுகின்றனர்.
ஒரு சில மாதங்களிலேயே அந்த பணம் படிப்படியாக குறையத் துவங்கிறது. சிலருக்கு பணம் முழுவதுமே மாயமாகிறது. சிலருக்கு உதவித்தொகையில் பணம் பிடிக்கின்றனர். சிலரது கணக்குகளில் பணம் இல்லை என்று கூறி, சேமிப்பு கணக்கை முடக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு உதவித்தொகை செல்வதில் சிரமம் உள்ளது.
வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சேமிப்பு கணக்கு துவங்க மட்டுமே ’டெபாசிட்’ தேவையில்லை. வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அலைபேசி எஸ்.எம்.எஸ்.,- போன்ற பல சேவைகளை அளிக்கின்றன. அதேபோல் வெளியூர்களில் இதர வங்கிகளில் ஏ.டி.எம்., பயன்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக கட்டணம் வசூலிக்கிறோம். இதற்கான தொகை தான் பிடிக்கப்படும், என்றார்.
UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20% 👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு (NOC compulsory) 👉மாற்றுத்திறனாளிகள் 👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும். 👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி - BED + TNTET PAPER -2 Pass 👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை 👉தேர்வு - Offline - OMR BASED 👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண். ( விவரம் Notification) As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு 👉பாடவாரியாக தேர்வு உண்டு 👉150 கேள்வி - 150 மதிப்பெண் 👉 OC - 60 Mark தேர்ச்சி 👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி 👉சா...
Comments
Post a Comment