தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு உள்ளப்பூர்வ நன்றிகள் - நீண்ட நாட்களுக்குப் பின் நிம்மதி அடைந்துள்ள 1500 TET நிபந்தனை ஆசிரியர் குடும்பங்கள்
நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அளித்த பேட்டியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் TET நிபந்தனை ஆசிரியர்கள் சுமார் 1500 பேருக்கும் பாதகமான சூழல் ஏற்படாமல் தமிழக அரசு கருணை உள்ளத்துடன் பாதுகாப்பு தரும் என்றார்.
இந்த அறிவிப்பு மூலமாக கடந்த ஒன்பது வருடங்களுக்கும் மேலாக நிம்மதி இல்லாமல் மன உளைச்சலுடன் இருந்த 1500 ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். மேலும் மனமுவந்து நன்றிகளையும், மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சருக்கும் தெரிவித்து வருகின்றனர்.
RTE விதிப்படி 23/08/2010 க்குப் பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவருக்கும் TET தேர்ச்சி என்பது அவசியம்.
தமிழகத்தில் அரசாணை எண் 181 பிறப்பித்து இருந்தாலும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு TET கட்டாயம் என்ற செயல்முறைகள் தமிழக பள்ளிக்கல்வி இயக்ககம் மூலம் 16/11/2012 ல் தான் தெரிவிக்கப்பட்டது.
ஆக 23/08/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு TET பற்றிய நிபந்தனைகளை தமிழக அரசு முழுமையாக தெரிவிக்காமல் ஒப்புதல் அளித்தது.
இதை தமிழக அரசு உதவிபெறும் பள்ளிகள் செயலாளர்கள் சங்கம் கடந்த வாரம் உறுதிப்படுத்தினர்.
இந்த சிக்கலான சூழலில் TET லிருந்து முழுவதும் விலக்கு கேட்டு பல்வேறு வழக்குகள் இன்றும் நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழுவதும் விலக்கு அளித்தது போல 1500 அரசு உதவிபெறும் ஆசிரியர்களுக்கும் எதிர்வரும் காலாண்டு தேர்வு விடுமுறையில் பணியிடை/ புத்தாக்கப் பயிற்சி தந்து ஆசிரியர்களை தகுதிப்படுத்தும் விதமாக பயிற்சி தர வேண்டும் எனவும், அதற்கு தமிழக அரசு கொள்கை முடிவில் மாற்றம் செய்து இந்த பாதிக்கப்பட்ட 1500 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் வாழ்வாதாரம் காக்கும்படி TET லிருந்து முழுவதும் விலக்கு வேண்டும் என TET நிபந்தனை ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.
இது பற்றி பிரபல கல்வியியலாளர் திரு.சிவபதி அவர்கள் கூறுகையில்,
"பாதிக்கப்பட்ட ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் TET - 150 கேள்விகள் மூலமாக தகுதியை நிர்ணயம் செய்வது சரியான தீர்வு அல்ல எனவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆசிரியர்கள் தங்களை புதுப்பிக்கும் விதமாக பல்வேறு கல்விக் கூட்டங்களில், Seminars, Paper presentation உள்ளிட்ட விசயங்களில் தமிழக அரசானது கண்காணிப்பு செய்ய ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் தரலாம். அதற்கான பயிற்சிகள் மற்றும் கல்வி நுட்பங்கள் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தரலாம்.
1500 ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழுவதும் விலக்கு அளிக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தாலே TET தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.
காலாண்டுத் தேர்வு விடுமுறையில் TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு பணியிடை/புத்தாக்க பயிற்சி அளித்து TET லிருந்து முழுவதும் விலக்கு தர தமிழக அரசு முன்வந்தால் சுமார் 1500 ஆசிரியர்கள் குடும்பங்கள் காக்கப்படும். தமிழக அரசுக்கு எதிராக இவர்கள் வழக்கு தொடுக்கவில்லை. வாழ்வாதாரம் போய் விடுமோ என்ற அச்சத்தில் தான் தொடுத்து உள்ளனர். தமிழக அரசு கருணை காட்டும் பட்சத்தில் வழக்குகள் அனைத்தும் முழுவதும் தானாகவே ஒன்றும் இல்லாமல் போய்விடும்" என்றார்.
மேலும்
காலாண்டுத் தேர்வு விடுமுறையில் TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு பணியிடை/புத்தாக்க பயிற்சி அளித்து TET லிருந்து விலக்கு தர தமிழக அரசை வலியுறுத்தும் 1500 ஆசிரியர்கள் தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அளித்த உறுதியால் சற்றே ஆறுதலும் மன நிம்மதியும் அடைந்து உள்ளனர்.
Good evening mam
ReplyDeleteஅப்படியே பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து விட்டு நபர்களுக்கும் புத்தாக்க பயிற்சியை கொடுத்து படித்த தகுதி உள்ள ஆசிரியர்களின் கனவில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடவும்....
ReplyDeleteWhy no post from past days man
ReplyDeleteதேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு கருணையாம்.... தேர்ச்சி பெற்று தகுதியுடன் இருப்பவர் வாயில் மண் ணாம். நல்ல அரசு. நீடுழி வாழ்க நின் புகழ்
ReplyDelete