Skip to main content

பிரேக்குகள்!!

 ஒருமுறை இயற்பியல் ஆசிரியர்  ஒருவர் தனது மாணவர்களிடம்


 “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?” என்று கேட்டார்.



பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன.

"நிறுத்துவதற்கு"

“வேகத்தைக் குறைப்பதற்கு"

“மோதலைத் தவிர்ப்பதற்கு "

"மெதுவாக செல்வதற்கு"

"சராசரி வேகத்தில் செல்வதற்கு"

என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது.

“வேகமாக ஓட்டுவதற்கு * என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர்.

அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது.

ஆம் பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன.

உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்? நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது.

பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது.

இதுபோலத் தான்  தடைகள். தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம்.

தடைகள் எரிச்சலூட்டுவது போலவும் நமது நம்பிக்கைகளை சிதைப்பது போலவும் நினைத்துக் கொள்கிறோம்.

தடைகளை தாண்டிச் செல்லும் சிலரைத் தான் சாதனையாளர்களாக ஆங்காங்கே ஒளிர்கிறார்கள்.

ஆயுர்வேதத்தில் விஷ மூலிகைகளை நானோ துகள்களாக உடைத்து அதனை உயிர்காக்கும் மருந்தாக செய்யும் முறை இருக்கிறது.

தடைகளை சிறு துகள்களாக உடைக்கும் போது அவைகள் உங்களை வேகப்படுத்தும்.

உங்கள் வாழ்க்கையில் வரும் “பிரேக்குகள்” உங்கள் வேகத்தை குறைப்பதற்கு அல்ல. வேகமாகச் செல்வதற்கு தான்.

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. என்ன இன்னைக்கு ஒரு சண்டையும் இல்லையா

    ReplyDelete
    Replies
    1. Inga nadappathu sandai alla just argument bro

      Delete
    2. Abimanyu sir you are right..it was argument only..actually we all are hurt😔

      Delete
  3. நம்பி வந்தேன் ஏமாத்திட்டாங்களே? ????

    ReplyDelete
  4. Sanda poda yarukkum energy illa boss yematram mattume anaivarukkum gift a kidaikkuthu
    Government nalla play pandranga

    ReplyDelete
  5. நம்மளும் எவ்ளோவோ அடிச்சுகிட்டோம் ஆனா ஒரு பிரோயோஜனம் இல்லை

    ReplyDelete
  6. Mothama evlo students senthurukkanga ne ivaru olaruraru
    5 day'munnadi 3.5 lakhs innaikku
    2.4 lakhs enna solla varraru ne therila
    Eppo pathalum government teachers ku ethavathu training tharratha pathi than pesurangale thavirthu evlavo talent ana tet passed candidates a job la podanum nu konjam kuda thona mattuthu intha government kum

    ReplyDelete
  7. Mothalla job la irukkura teachers kum yearly once exam vaikkanum athula pass mark vanguna than avangalukku increment promotion ellam allow pannanum 3 times ku mela thodarnthu fail ana job a vittu thookanum appo than fake teachers lam V2 ku anuppittu talent teachers mattum work la continue pannalam
    Yaru exam la first 5 rank vangurangalo avangala avanga sontha oruke transfer panni job kodukkalam
    Ana intha government onnum seiyya mattanga pola

    ReplyDelete
  8. Vanniyar special quata 10.5 arasanai velidu

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...