Skip to main content

இன்றைய சிந்தனை..

ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் .

அடிக்கடி கோவிலுக்கு போவார்.

கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார்
.
விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார் .

ஓரளவுக்கு வருமானம் வந்தது .

அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார் .

ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார் .

அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை .
எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. !

அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு..
அதை இவர் பார்த்தார் ..

அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம்

"இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்

இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது..

அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டார் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சார்

அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ...

அதை சாப்பிட்டது ...

சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது...

புலி போனப்பின் கால் இல்லாத அந்த நரி மெதுவா நகர்ந்து கிட்ட வந்தது ...

மிச்சமிருந்ததை சாப்பிட்டது ..

திருப்தியா போய்ட்டது !

இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு நம்ம   ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கார்

இப்ப அவர் யோசிக்க ஆரம்பிச்சார்

" ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான் . அப்படி இருக்கறப்போ...

தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம்.. 

நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும் மழைலயும் கஷ்டபடனும் ..?

எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...?

இப்படி யோசிச்சார் .

அதுக்கப்பறம் அவர் காட்டுக்கே போறதில்லை .

கோடலியை தூக்கி எறிஞ்சிட்டாரு........

பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டார் .

அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவார்
" கடவுள் நம்மை காப்பாத்துவார் ...அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "- அப்படின்னு நம்பினார்..,

கண்ணை முடிகிட்டு . கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டார் .

ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு ...

சாப்பாடு வந்த பாடில்லே.. !

இவர் பசியால வாடி போனார் . உடம்பு துரும்பா
இளைச்சு போய்டுச்சு . எலும்பும் தோலுமா ஆயிட்டார் .
ஒரு நாள் ராத்திரி நேரம் . கோயில்ல யாருமே இல்லை. இவர் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தார் ...
" ஆண்டவா ... என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....?" நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ?  காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே..! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?"..- ன்னாரு

இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்.....
..
" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே.. !  புலி கிட்ட இருந்து ..!
அப்படின்னாராம்..... . புலி போல் உழைத்து சாப்பிட்டு மீதியை இயலாதவர்களுக்கு  தானமா  கொடுன்னாராம்....

நாம் யாரிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள போகிறோம் என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும்

Comments

 1. Wishing everyone a blessed morning..

  ReplyDelete
 2. ஒன்று தமிழில் கருத்துக்களை கூறவும் அல்லது ஆங்கிலத்தில் கருத்துக்களை கூறவும் தங்கிலீஷில் கருத்துக்களைக் கூறினால் கடுப்பாகி விடுவேன் .
  எழுத்தாணி விசைப்பலகையை பதிவிறக்கம் செய்யவும்.
  கைபேசியில் அந்த வாய்ப்பு இல்லாதவர்கள் மட்டும் இங்கு கூறவும்.
  தங்கிலீஷில் பதிவிடும் கருத்துக்களை படிப்பதற்கு வெகு நேரம் ஆகிறது 😏😏😏😏😏😏

  ReplyDelete
  Replies
  1. சார் அதெல்லாம் அவங்கவங்க விருப்பம்.

   Delete
  2. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

   Delete
  3. அவனுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சனை. உங்களுக்கு இந்த பிரச்சினை இங்க கமெண்ட் படிக்கிறத விட்டுட்டு வேற ஏதாவது வேலை இருந்தா போய் பாருங்க . இத படிச்சு என்னத்த செய்ய போறீங்க.

   Delete
  4. நீங்க கடுப்பான எங்களுக்கு என்ன கடுப்பாகலனா எங்களுக்கு என்ன... 😂😂😂

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. Trb question paper yarukaka ready panraga

  ReplyDelete
 5. TRT தேர்வுக்கு

  ReplyDelete
  Replies
  1. Trt ku syllabus sollama eppadi questions Mattum ready pannuvanga is it possible

   Delete
 6. Pgtrb தேர்வுக்கு

  ReplyDelete
  Replies
  1. ௨தவி பேராசிரியர் 2வ௫டங்களாக நிலுவையில் உள்ளது ௮தற்காக மட்டுமே வாய்ப்பு உள்ளது

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. Senthil sir indha madhiri dhan solladhinganu neriya time sollitaen, second list varadhunu sonna kovam varudhu la?? Exam ku vaaipu illanu edhuku solringa?? Don't demotivate others. Hope you wil understand.

   Delete
  4. அவரும் எத்தன கெட்டப்ல தான் வருவாரு நீங்க கண்டுபிடிச்சிடுரிங்க

   Delete
  5. சாரி மேடம்....

   Delete
 7. https://youtu.be/kgXPGb-d3K4

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

படித்ததில் பிடித்தது..

                 சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது! வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது. நாய்கள் ஓட ஆரம்பித்தன. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள். அதற்க்கு அவர் சொன்ன விடை - “சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”. சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும்.  அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை. ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.  தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..

TODAY'S THOUGHT..

 இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன.. ஒன்றில் எப்பவுமே ரயில் வராது.... மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்... ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது. அத்தருணத்தில் ரயில் வருகிறது.... தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..... உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது.... நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....? இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்... ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்..... உண்மையாக நாம் என்ன செய்வோம்...? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்.. ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்.... உண்மை தான் என்றோம்... இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது. ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அ

வட்டம்..

 _*ஒரு வட்டம் போட்டு*_ _*அதற்குள்ளேயே*_ _*வாழ்வதில்*_ _*தவறில்லை.*_ _*ஆனால், அந்த வட்டம்தான் .*_ _*வாழ்க்கை என்று...*_ _*நீ நினைத்துக் கொள்வதும் தவறு...*_ _*அதற்குள்ளேயே வாழ்ந்து முடிப்பதும் தவறு...*_ _*இந்த உலகம் மிகப்பரந்து விரிந்தது...*_ _*உன்னை ஏன் சுருக்கிக் கொள்கிறாய்...?*_ _*எல்லையில்லாதவனை... உணரும் வரைதான்...*_ _*எல்லைக்குள் நாம் வாழும்*_ _*வாழ்வென்பது..."*_ _*அதுவரை...*_ _*சுவற்றில் எறியப்பட்ட பந்தாக,* _*வினைகள்*_ - _*எதிர்வினைகளாக திரும்பி*_ _*வந்து கொண்டே*_ _*இருக்கும்..."*_ _*நிம்மதி எப்போதும்...*_ _*உங்கள் உள்ளங்கைக்*_ _*கனியாகவே*_ _*இருக்கிறது...*_ _*தேவையற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...*_ _*நீங்கள்தான் அதை எட்டாக்கனி ஆக்கி கொண்டு ஏங்கி துன்பப்படுகிறீர்கள்...*_ _*உன் குழப்பத்திற்கு காரணமே...*_ _*உன் மனதின் எல்லை... குறுகியதாக இருப்பதுதான்...*_ _*உன் மனதை விசாலமாக்கு...*_ _*நிம்மதி -- தியானம்...*_ _*ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்...*_ _*நீ நிம்மதியாக இருந்தால்...*_ _*தியானத்தில் இருப்பாய்...*_ _*நீ தியானத்தில் இருந்தால்...*_ _*நிம்மதியாக இருப்பாய்...*_