Skip to main content

ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு அனைத்து ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்: பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை


ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வில், அனைத்து ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. 

மிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் அ.மாயவன், மாநில நிர்வாகிகள் எஸ்.பக்தவச்சலம், எஸ்.சேதுசெல்வம், சி.ஜெயகுமார், முருகேசன், ஆர்.கே.சாமி ஆகியோர் பள்ளிக்கல்வி இணை இயக்குனருக்கு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: 

நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு நடத்த இயக்குனர் அலுவலகம் திட்டமிட்டுள்ளது. பொதுக் கலந்தாய்வின்போது பொது மாறுதலில் கலந்து கொள்வதற்கு ஓர் இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற முந்தைய அரசின் நிபந்தனையை அகற்றி, ஓராண்டு பணிபுரிந்து இருந்தாலே போதும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். 

உபரி பணியிடத்தால் மாறுதல் வழங்கப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள முன்னுரிமை அளிக்க வேண்டும். ராணுவத்தில் பணியாற்றுபவர்களின் கணவன், மனைவி ஆகியோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். 

முற்றிலும் கண் பார்வையற்றவர்களுக்கு, 3 சக்கர வண்டியை பயன்படுத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, புற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள், 40 வயதை கடந்தும் திருமணம் ஆகாத முதிர் கன்னியர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோர்கள், 40 கிமீ தூரத்துக்கு மேல் பணியாற்றும் கணவன், மனைவிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பதவி உயர்வு பெற்று சென்றவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். மாநகராட்சி பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு செல்ல மாறுதல் வழங்க வேண்டும். பொது கலந்தாய்வுக்கு முன் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் மனமொத்த மாறுதல் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...