ஒரே நாளில் இரண்டு சிறப்பு ‘டெட்’ தேர்வு ஆசிரியர்கள் குழப்பம்
வரும் டிச., 20ம் தேதி, சிறப்பு ‘டெட்’ தேர்வு நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அன்றைய தினம், ‘டெட்’ முதல் தாள் தேர்வு காலையிலும், இரண்டாம் தாள் தேர்வு மாலையிலும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் நடப்பதால், இரண்டு தகுதித் தேர்வுகளையும் எழுத விரும்பும் ஆசிரியர்களுக்கு, இது பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: ஒரே நாளில் இரண்டு தேர்வை நடத்தினால், எப்படி தேர்வு எழுத முடியும். ஒரு தேர்வுக்கு ஒரு மையமும், மற்றொரு தேர்வுக்கு வேறு மையத்தையும் ஒதுக்கினால், இரண்டு தேர்வுகளை எழுத இயலாது. இதற்கு, பள்ளிக்கல்வித்துறை தீர்வு காண வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மற்ற தேர்வுகளால் சிக்கல்
ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘சிறப்பு ‘டெட்’ தேர்வை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே நடத்த வேண்டும். டிச., முதல் வாரத்தில் நடத்தினால், ஆசிரியர்களுக்கு போதிய நேரம் கிடைக்காது. இரண்டாவது வாரம், மத்திய அரசின் ‘சிடெட்’ தேர்வு நடக்கிறது. அதன்பின், டிச.,14 முதல் 19 வரை யு.ஜி.சி., நெட் தேர்வு நடக்கிறது. மாத இறுதி அரையாண்டு விடுமுறை நாள். வேறு தேதி இல்லாததால், டிச.20ல் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’ என்றனர்.
Comments
Post a Comment