Skip to main content

பணியிட மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்டவற்றுக்கு சிபாரிசு கிடையாது - தமிழக அரசு சுற்றறிக்கை!!

 

பணியிட மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்டவற்றுக்கு சிபாரிசு கிடையாது - தமிழக அரசு சுற்றறிக்கை



அரசுப் பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு நேரடியாக மனுக்களை அளிக்கக் கூடாது



அரசுப் பணியாளர்கள் தங்களின் பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் இதர தனிப்பட்ட கோரிக்கைகளுக்காக, உரிய நிர்வாக வழியைப் பின்பற்ற வேண்டும் என சுற்றறிக்கை



அரசியல் செல்வாக்கையோ அல்லது அதிகாரப்பூர்வமற்ற வழிமுறைகள் மூலம் கொண்டுவரவோ அல்லது முயற்சிக்கவோ கூடாது



அந்தந்த துறை சார்ந்த தலைமை வழியாக உரிய விதிகளை பின்பற்றி மனு அளிக்க வேண்டும்


சுற்றுக் குறிப்பாணை


பொருள்:


பணியமைப்பு - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை - பயிற்சிப்பிரிவு - இத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் - சேவை மற்றும் தனிப்பட்ட கோரிக்கைகளுக்காக அலுவலகத் தலைவர் / துறைத் தலைவரின் முன்அனுமதியின்றி மாண்புமிகு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) மற்றும் முதலமைச்சரின் முகவரி (CM Cell) மனுக்கள் பயன்படுத்துதல் - அறிவுறுத்துதல் - தொடர்பாக,


வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் பல்வேறு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் சில அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தங்களின் பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் இதர தனிப்பட்ட கோரிக்கைகளுக்காக, உரிய நிர்வாக வழியைப் (Proper Official Channel) பின்பற்றாமல் மாண்புமிகு அமைச்சர்களின் அலுவலகங்கள், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) மற்றும் முதலமைச்சரின் முகவரிப் பிரிவு (CM Cell) ஆகியோரிடம் நேரடியாக விண்ணப்பித்து வருகின்றனர்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் நடத்தை விதிகள், 1973(Tamil Nadu Government Servants' Conduct Rules, 1973) விதி 18ன் படி (Rule 18 Canvassing of non-official or other outside influence):


18. Canvassing of non-official or other outside influence No Government servant shall bring or attempt to bring any political or other outside influence to bear upon any superior authority to further his interests in respect of matters pertaining to his service under the Government.


"எந்தவொரு அரசுப் பணியாளரும், தங்களின் சேவை தொடர்பான விஷயங்களில் (Service matters) தங்களுக்குச் சாதகமான ஆணைகளைப் பெறுவதற்காகவோ அல்லது சலுகைகளைப் பெறுவதற்காகவோ, எவ்வித வெளிச் செல்வாக்கையோ (outside influence) அரசியல் செல்வாக்கையோ அல்லது அதிகாரப்பூர்வமற்ற வழிமுறைகளையோ கொண்டுவரவோ அல்லது கொண்டுவர முயற்சிக்கவோ கூடாது."


மேலும், தமிழ்நாடு அரசுபணியாளர் நடத்தை விதிகள் 1973இன் விதி 20ன் படி, "அரசு பணியாளர்கள் தங்கள் குறைகளை மேலதிகாரிகளிடம் தெரிவிக்கும்போது, உரிய அதிகார்ப்பூர்வ வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் . மேலும், அரசின் நற்பெயர், கண்ணியம் அல்லது நலனுக்கு பாதகமாக இருக்கும் எந்த அறிக்கையையும் அல்லது தொடர்பையும் வழங்கக் கூடாது."


மேற்கண்ட விதிகளை மீறிச் செயல்படுவது நடத்தை விதிமீறலாகக் (Breach of Conduct Rules) கருதப்பட்டு அப்பணியாளர், அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


எனவே, இதன் மூலம் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் பின்வருமாறு அறிவுறுத்தப்படுகிறது


1. இனிவரும் காலங்களில், அலுவலர்கள்/பணியாளர்கள் தங்களது பணி தொடர்பான எந்தவொரு கோரிக்கை அல்லது குறைகளுக்கும் தங்களது அலுவலகத் தலைவர் /துறைத் தலைமை வழியாக உரிய நிர்வாக நடைமுறையைப் பின்பற்றி மட்டுமே (Through Proper Official Channel) விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.


2. துறைத் தலைவரின் முன் அனுமதியின்றி அல்லது உரிய வழியைப் பின்பற்றாமல் நேரடியாக மாண்புமிகு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது முதலமைச்சரின் முகவரி போன்ற உயர் அமைப்புகளுக்கு மனு அனுப்புவதோ அல்லது வெளிச் செல்வாக்குகளைப் பயன்படுத்த முயற்சிப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.


3. இந்த அறிவுறுத்தலையும் தாண்டி, எவரேனும் இவ்வாறு அலுவலகத் தலைவர் /துறைத்தலைவர் வழியாக அல்லாமல் நேரடியாக மனுக்கள் சமர்ப்பிப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்/பணியாளர் நடத்தை விதி 18-ஐ மீறியதாகக் கருதப்பட்டு அவர் மீது தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் கீழ் (TNCS (D&A) Rules) உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


அனைத்து அலுவலகத் தலைவர்களும் இச்சுற்றறிக்கையினைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்துப் பிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி அதற்கான ஒப்புதலினைப் பெற்றுப் பராமரிக்குமாறு மண்டல பயிற்சி இணை இயக்குநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



பணியிட மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்டவற்றுக்கு சிபாரிசு கிடையாது - தமிழக அரசு சுற்றறிக்கை - Circular Memorandum - Pdf 👇👇👇

Comments

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...