பிப்ரவரி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகள் தொடங்குமா? என்பதை தமிழக முதல்வர் தான் முடிவு செய்வார் என ஈரோட்டில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது என்பதும் சமீபத்தில்தான் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் பிப்ரவரி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதனடிப்படையில் பிப்ரவரி முதல் 9, 11ஆம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது
இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தபோது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பிப்ரவரி முதல் 9 11ஆம் வகுப்பு சிறப்பு குறித்து முதல்வர் தான் முடிவு எடுப்பார் என்றும் விரைவில் அவர் நல்ல முடிவை எடுப்பார் என்றும் கூறியுள்ளார்
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் பணி கிடைக்க இருக்கும் அன்பர்கள் அனைவருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துக்கள். கவலை வேண்டாம். பகவான் உங்களுடன். _சாமி தேனி
ReplyDeleteவிரைவில் என்ற வார்த்தையை சொல்வதற்காகவே விரைவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்.திரு
ReplyDelete