Skip to main content

ஒரே ஒரு முறை வாழப்போகிறோம்..

  *உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்*.

"உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்."


*மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள்*.

"இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது."


*ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம்*.

"இங்கே புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான்."


*அரசியல்வாதியின் கல்லறையில்*,

"தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள், இவன் எழுந்து விடக்கூடாது."


*ஒரு விலை மகளின் கல்லறை வாசகம்.*

"இங்கு தான் இவள் தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு செய்யாதீர்கள், பாவம் இனி வர முடியாது இவளால்."


இவ்வளவு தானா வாழ்க்கை❓

ஆம் அதிலென்ன சந்தேகம்.


ஆனானப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல். உலகையே நடுங்க வைத்த *ஹிட்லர்* தன் சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப்போனான்.


அவனோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட *முசோலினி* இறந்த போது ரஷ்ய தலை நகரில் முசோலினியின் பிணத்தை தலைகீழாக தொங்க விட்டு ஒரு வாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செறுப்பால் அந்தப் பிணத்தை அடித்து தங்கள் மனக்குமுறலை தீர்த்துக் கொண்டார்கள். 


இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை.


நாம் *எதை* ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம்❓

நமது *பதவியா?* 

நாம் சேர்த்த சொத்து சுகங்களா?

நமது *படிப்பா?*

நமது *வீடா?*

நம் முன்னோர்களின் *ஆஸ்தியா?* 

நமது *அறிவா?* 

நமது *பிள்ளைகளா?* 

எது நம்மைக் காப்பாற்றப் போகிறது?


*ரத்தம் சுருங்கி, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மை காப்பாற்றப் போவதில்லை*.


*பசித்தவனுக்கு உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து, எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள்.*


கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.


*ஒரே முறை வாழப்போகிறோம்*, எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம்.


நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம். அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிர மடங்காக..

Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
  Replies
  1. காலை வணக்கம் அட்மின் மேம்

   Delete
 2. Goodmor admin mam..wonderful and meaningful thought mam

  ReplyDelete
 3. Mam so the other minister said about exam planner only know mam..not about selection list

  ReplyDelete
  Replies
  1. Second list not published yesterday. So sad.

   Before feb 24 second list will be expected. Confirm.
   God save us.
   😡😡😡😡😡😡

   Delete
  2. பாஸ், சண்டே கூட எங்களுக்கு லீவே விடமாட்டீங்களா...

   Delete
  3. Yes swetha mam he said about exam planner..

   Delete
 4. Second list not published yesterday. So sad.

  Before feb 24 second list will be expected. Confirm.
  God save us.

  ReplyDelete
  Replies
  1. Feb 29 , 2021


   Second list confirma vandhidum bro/sis

   😂😂😂😂😂😂😂😂😂😂😂

   Delete
  2. 😁😁😁😁😁😁

   Delete
  3. Feb 24 list confirm... That will be ADMK CANDIDATES list...
   இவங்கள (govt)
   நம்பாதீங்க...

   Delete
  4. 😡😡😡😡😡😡😡😡

   Delete
 5. #BREAKING | தமிழக சட்டமன்ற தேர்தலை மே.5ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்; தமிழ்நாடு தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப்.20 அல்லது 21-ல் தேர்தல் ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது

  ReplyDelete
 6. Election finished analum tet ku oru mudivu kidaiyathu ithu sathiyam y na DMK vanthalum panam vangitu pass pannatha van ellam velaiku poduvanga

  ReplyDelete
 7. Suppose ADMK vantha poduren poduren nu solliye time ottituvanunga

  ReplyDelete
 8. Admk vandhalum Dmk vandhalum Trt dhan varum.. But Tet vachutu dhan Trt varum. And PG sure ah varum.. Wait and see..

  ReplyDelete
 9. 1:2 solra madhiri second list varumnu yaarum nenaikka venam, nethu pona 1:2candidates kitta kuda apdi endha utharavaadhamum kudukkapadala.. So those who were preparing, study well..

  ReplyDelete
  Replies
  1. 2013 குரூப் மாதிரி கிளம்பிட்டாங்க போல

   Delete
  2. ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா

   Delete
 10. Mam,commerce material link potta madhiri Maths kum podungae mam.its my humble request.

  ReplyDelete
 11. வாக்களிப்பீர் நாம் தமிழர்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.

  தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.   தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு   தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . 06.07.2022 பத்திரிகை செய்தியின்படி ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- I ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினிவழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது நிர்வாக காரணங்களினால் , தாள்- I ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்படவுள்ளது . மேற்படி கணினிவழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சித் தேர்வு ( Practice Test ) மேற்கொள்ளவிரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு , தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் . இது குறித்த அறிவிக்கை , தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் .

படித்ததில் பிடித்தது..

                 சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது! வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது. நாய்கள் ஓட ஆரம்பித்தன. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள். அதற்க்கு அவர் சொன்ன விடை - “சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”. சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும்.  அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை. ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.  தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..