ஐந்து நிமிடங்களில் பத்து வினாக்களுக்கு பதில் எழுத முடியுமா???
ஒரு நிறுவனம் ...
வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்தது...
அதன்படி நிறைய நபர்கள் நேர்காணலுக்கு வந்திருந்தார்கள்...
அனைவரையும் ஒரு அரங்கத்தில் உட்கார வைத்தார்கள்...
அனைவரிடமும் வினாத்தாள்களும்,
விடைத்தாளும் வழங்கப்பட்டது...
இப்பொழுது அந்த நிறுவன மேலாளர் பேசினார்..
இந்த வினாத்தாளில் பத்து கேள்விகள் உள்ளது.
உங்களுக்கு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கப்படும்...
அதற்க்குள் இந்த வினாக்களுக்கு நீங்கள் பதிலலிக்க வேண்டும்.
தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும் என்றார்.
ஐந்து நிமிட நேரம் ஆரம்பமானது..
நேரம் குறைவாக உள்ளது என்று அனைவரும் வேகமாக பதில் எழுதினர்.
நேரம் முடிந்த பின்...
அனைவரிடமும் விடைத்தாளை வாங்கினார் மேலாளர்..
விடைத்தாளை வாங்கும் போது ஒவ்வொருவரும் நேரம் குறைவாக கொடுத்து விட்டீர்கள்...
எங்களால் ஐந்து கேள்விகளுக்கும், ஏழு கேள்விகளுக்கும் பதில் எழுத முடிந்ததே தவிர, அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத முடியவில்லை என்றனர்.
அதில் இருவர் மட்டும் எந்த பதிலும் எழுதவில்லை என்று வெற்றுத்தாளை மேலாளரிடம் கொடுத்தனர்.
அதன்பின், அந்த நிறுவன மேலாளர் சொன்னார்.
விடைத்தாளில் பதில் எழுதாத இவர்கள் இருவர் மட்டும் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய தகுதியானவர்கள்.
மற்றவர்கள் வீட்டிற்கு செல்லலாம் என்றார்.
அனைவருக்கும் ஒரே ஆச்சரியம்,
அனைவரும் ஒரு சேர அந்த நிறுவனமேலாளரிடம் கேட்டனர்.
வினாக்களுக்கு சரியான பதிலளித்த எங்களுக்கு வேலை இல்லை என்கிறீர்கள்.
எந்த வினாக்களுக்கும் பதில் அளிக்காத அந்த இருவருக்கு மட்டும் எப்படி வேலை கொடுத்தீர்கள் என்றனர்.
(இந்த இடத்தில் நமக்குள் தோன்றும் கேள்வியும் இதுதான். பதில் அளித்தவர்கள் இருக்க, பதில் அளிக்காதவர்களுக்கு வேலையா?)
அதற்கு அந்த மேலாளர் சொன்னார்,
எல்லோரும் அந்த பத்தாவது கேள்வியை படித்துப் பாருங்கள் என்றார்..
படித்துப் பார்த்த அனைவரும் பதிலேதும் பேச முடியாமல் வீட்டிற்கு சென்றனர்.
அந்த பத்தாவது கேள்வி இது தான்..!
10) மேற்கண்ட எந்த வினாக்களுக்கும் நீங்கள் பதில் அளிக்க வேண்டாம்.? என்பதாகும்.
இது சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல.
நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்,
இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி வினாத்தாள் முழுவதையும் படித்திருந்தால் வேலை நிச்சயம் கிடைத்திருக்கும் அல்லவா?
Yes...!
பலநிலைகளில்இப்படித்தான் ஏமாறுகிறோம் பொறுமையாளர்கள் கூட புறக்கணிக்கப்படுகிறார்கள்.
மாற்றி யோசிப்போம்.
மாற்றங்களை தருவிப்போம்....
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGud mrg admin mam.my humble request,ipo list varum,apo list varum nu intha madiri comments la publish pannathinga.bcoz mana ulaviyal than varuthu.na 2013 la both paper passed.also 2017 passed.ipo athai ellam maranthu urupadiya pg trb ku padikiren mam.posting poduvanga,list varum,job confirm nu fake comments la parthal mind disturb aguthu.daily ungaloda thoughts padikiren.enaku motiva iruku mam.
DeleteSure friend.. But now I havr changed the settings due to some reasons, ot may not be possible all the time. Will try to avoid such comments.. All the best to your studies..
Delete26 list வரும் என்று யாரோ ஒருவர் last week comment போட்டாரே.????
ReplyDeleteTrt எக்ஸாம் தான் வரும்
ReplyDeleteGood morning mam... Happy Republic Day...
ReplyDeleteGudevng Murali sir..
DeleteHappy Republic day to u too..
Trt வருவது உறுதி அமைச்சர்
ReplyDeleteAmaichar sonnathu onnu kooda seiya villai
DeleteY this kola very
ReplyDeleteஇவரு சொல்றதையும் கேளுங்க...
ReplyDeletehttps://youtu.be/lpB3VlFJcvw
Bro ok but possible ah
Deleteவிவசாயிகள் போராட்டம் வெல்லுட்டும்
ReplyDelete
ReplyDeleteஇந்த வார இறுதிக்குள் அட்டவணை வெளியிடப்படும் அது பணி நியமன அட்டவணையா அல்லது ஆண்டு தேர்வுகள் பற்றிய அட்டவணையா என்பது தெரியவில்லை மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு படி காலிபணியிடம் நிரப்பப்பட்டு பிறகு தேர்வு வைக்கப்படும்
https://youtu.be/Jqmhy_BYMZ8
பின்னடைவு பணி பற்றி தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது,
ReplyDeleteGood night
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்... கடந்த வியாழன் அன்று பேட்டியில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஒரு உச்ச நீதிமன்ற வழக்கை சுட்டிக்காட்டி அதன்படி தேர்வு வைத்து பணிகள் நிரப்பப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வழக்கு நமது ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு என்று சிலரும் வேறு வழக்கு என்று சிலரும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். நாம் கடந்த வெள்ளியன்று அமைச்சர் அவர்களை சந்திக்கும் போது இந்த வழக்கு குறித்தும் அவர் விளக்கமளித்தார். இப்போது அந்த வழக்கு குறித்து பார்ப்போம்... வட இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. அதாவது ஒரு தேர்வு முடிந்து பணி பட்டியல் வெளியான பிறகு மீண்டும் புதிய காலி பணியிடங்கள் உருவாக்கப்பட்டு அந்த காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனில் மீண்டும் போட்டித்தேர்வு வைத்துதான் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது தான் அந்த தீர்ப்பு. இந்தத் தீர்ப்பையே அமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். இப்போது முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையான இரண்டாவது பட்டியல் வெளியிட வேண்டும் என்பதற்கு அரசின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். சரி இந்த வழக்கின் தீர்ப்புக்கும் நமது ஆசிரியர் தகுதித் தேர்வு பணியிடங்களை நிரப்புவதற்கு என்ன சம்பந்தம் என்றால், இதுவரை எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதுதான் பதில். போட்டித்தேர்வு வைத்தால்தான் இரண்டாவது பட்டியல் வெளியிட கூடாது. ஆனால் இதை இப்போதே சம்பந்தப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்றால்... இப்போது நமது கோரிக்கை படி வெய்ட்டேஜால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணி வழங்க அரசு முடிவெடுக்கப்பட்டு பட்டியலும் வெளியிடுகிறது என்று வைத்துக்கொள்வோம்... மற்றவர்கள் என்ன செய்வார்கள்..? நீதிமன்றத்தை நாடுவார்கள் அப்படி நீதிமன்றத்தை நாடும் போது உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை காட்டி அந்த வழக்கை சமாளிக்கலாம் என்பது அவர்கள் எண்ணம். அதுமட்டுமல்ல 82 ஆயிரம் பேருக்கும் பணி வழங்க வேண்டும் என்பது அரசால் இயலாத காரியம். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணி வழங்கியே தீரவேண்டும் என்பது அமைச்சரின் எண்ணம். அதனால்தான் அவர் பேட்டியில் தெளிவாக "எவ்வளவு காலிப்பணியிடங்கள் இருக்கிறதோ அவ்வளவு பணியிடங்கள் தான் நிரப்ப முடியும். காலிப்பணியிடங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும் தேவைப்பட்டால் மீண்டும் நிரப்பப்படும். மேலும் தேவைப்பட்டால் தேர்வு வைத்துத்தான் எடுக்கப்படும்" என்று தெளிவாக கூறிவிட்டார். இதிலிருந்து நமக்குத் தெரியவரும் முடிவு என்னவென்றால் வெய்ட்டேஜால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு பட்டியல் வெளியாகும். போட்டித் தேர்வு அறிவிப்பும் வெளியாகும். இதில் போட்டித்தேர்வுக்கான அட்டவணை என மூன்றும் வெளியாகும். இதில் எது முதலில் வெளியாகும் இதில் இரண்டாவது மூன்றாவது வெளியாகும் என்பதே குழப்பம். ஆனால் மூன்றில் ஒன்று இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் நிச்சயம் வெளியாகிவிடும். இதை அமைச்சரும் பலமுறை உறுதிபடக் கூறியுள்ளார். அந்த உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி இரண்டாவது பட்டியல் வெளியிட கூடாது என்றால் நமக்கு மட்டும் எப்படி வெளியிடுவார்கள் என்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்திருக்க வேண்டும். என்னோட கணிப்பு படி அந்த தீர்ப்புக்கு முந்தைய காலிப்பணியிடங்களை கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரப்பலாம் என்று அரசு நினைத்திருக்கலாம். புதிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தலைப்பு வைக்க எண்ணி இருக்கிறது. எல்லாம் இறைவன் கையில்.... நல்லதே நடக்கும். நன்றி..
ReplyDeleteவணக்கம் சகோதரி, இது என்னுடைய பதிவு இதில் எனது பெயரை மட்டும் நீக்கிவிட்டு நீங்கள் பதிவிட்டு உள்ளீர்கள். வாழ்த்துக்கள்... முடிந்தளவு அந்த பதிவை நீக்கி விடுங்கள்... நன்றி..! மு.இராஜபாண்டி, அருப்புக்கோட்டை.
Delete௮ரசின்கொள்கைமுடிவில் ௭ந்த நீதிமன்றமும் தலையிட முடியாது. பின்னடைவு பணியிடங்களை புதிய பணியுடங்களுடன் சேர்ந்து நிரப்ப முடியாது
Deleteடேய் பிராடு செந்தில்குமார்
Delete௮டுத்தவர்களின் பதிவை தி௫டி போடுவது வழக்கம்தான் இது ௭ன்ன புதிதா?
Deleteஉச்சநீதிமன்றத்தில் பின்னடைவு பணி நிரப்பதல் தொடர்பான வழக்கு மட்டும் தான் உள்ளது
ReplyDeleteஉச்சநீதிமன்றம் 50% இட ஒதுக்கீடு மட்டுமே படிப்பு மற்றும் அரசு பணி நியமனங்களில் பயன்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது ஆனால் தமிழ் நாட்டில் 69% இட ஒதுக்கீடு பயன்படுத்த படுகிறது அது மட்டும் இல்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி பிறவினர்க்கு 10% இட ஒதுக்கீடு வழங்க பட்டு உள்ளது so உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசும் மீறி இருக்கு, மாநில அரசும் மீறி உள்ளது, அமைச்சர் உச்ச நீதிமன்றதை வைத்து நம்மை ஏமாற்ற நினைக்கிறார்
ReplyDelete