Skip to main content

இன்றைய சிந்தனை..

நம்மை பற்றி நாமே தாழ்வாக நினைப்பது நமது திறமைகளை வீணடித்து விடும். நம்மைப் பற்றி நாம் எப்பொழுதும் உயர்வாகவே நினைத்துக் கொண்டு இருக்க வேண்டும்...


அப்பொழுதுதான் நாம் எடுத்த செயலை வெற்றியடைய வைக்கமுடியும் பல முன்னேற்றங்களைப் பெறலாம். அதற்கு முதலில் நம்மை நாமே நம்ப வேண்டும். அது நமக்கு மாபெரும் வெற்றிகள் கிடைப்பதோடு, நமது எதிரிகள் கூட நம்மை வாழ்த்துவதற்கு முன் வருவார்கள்...


இந்த எண்ணம்தான் நம்மை உயர்த்திக் கொண்டே போகும்!, உயர உயரப் பறந்து செல்லும் பறவைகளைப் போல, நாமும் வாழ்க்கை என்ற வான்வெளியில் உயர்ந்து கொண்டே செல்லலாம்...


மாவீரன் நெப்போலியனுக்கு, அவருடைய தளபதிகள் விருந்து கொடுத்தார்கள். பழரசக் கோப்பைகளைத் தட்டி இசை எழுப்பி, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைச் கூறிக்கொண்டு இருந்தார்கள்...


அதனைத் தொடர்ந்து நெப்போலியனுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் குண்டு வெடிக்க வேண்டும். இந்த ஏற்பாடுகளை தளபதிகள் செய்திருந்தார்கள். நெப்போலியனுக்கு இந்த விபரம் தெரியாது...


அனைவரும் வாழ்த்துக்களை பகிர்ந்த பின்பு, குண்டு வெடித்தது. தளபதிகளின் கைகளிலிருந்த பழரசக் கிண்ணங்கள் அதிர்ச்சியில் கீழே விழுந்து நொறுங்கிவிட்டன...


ஆனால்!, நெப்போலியன் கை மட்டும் சிறிதும் நடுங்கவில்லை. அவர் கையிலிருந்த கிண்ணத்தில் பழரசம்கூட ததும்பவில்லை...


இதைப் பார்த்த தளபதிகள் நெப்போலியனிடம் கேட்டார்கள்...


“பிரபுவே! இது நாங்கள் செய்த ஏற்பாடுதான்!, இருந்தும் கூட நாங்கள் ஏமாந்து பழரசக் கிண்ணங்களை தவற விட்டுவிட்டோம். ஆனால்!, உங்களுடைய கை சற்றும் நடுங்கவில்லை. எவ்வளவு விழிப்புணர்வோடு இருக்கிறீர்கள்!” என்று வியந்து பாராட்டினார்கள்...


உடனே நெப்போலியன் சொன்னார். “அதனால்தான் நான் சக்கரவர்த்தியாக இருக்கிறேன். நீங்கள் தளபதியாக இருக்கின்றீர்கள்” என்றார்...


உண்மைதான்!, நெப்போலியனுக்கு தன்னம்பிக்கையும், மன உறுதியும் இருந்தது. அத்துடன் எதிலும் ஏமாந்து போகாத விழிப்புணர்வு அதிகமாக இருந்தது...


நெப்போலியனின் மாபெரும் வெற்றிகளுக்கு இவைகள்தான் காரணம், ஒவ்வொரு கணமும் நெப்போலியன் தன்னை மிகவும் நம்பினார்...


*ஆம் நண்பர்களே...!*


🔴 *தன்னம்பிக்கை என்பது தன்னை நம்புதலாகும், கடின உழைப்பு, விடா முயற்சி, திட்டமிடல் என்றெல்லாம் கூறுகிறோம், இவைகளையெல்லாம் வெறுமனே பின்பற்ற முடியாது...!*


⚫ *தன்னம்பிக்கை இருந்தால்தான் அவையெல்லாம் கைகூடும். எனவே!, எல்லாவற்றுக்கும் அடிப்படை தன்னை நம்புதலாகும். நம்புங்கள் நம்மால் முடியும்...!!*


Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
 2. Today or before feb 24 second list
  Is expected.
  God save us
  😷😷😷😷😷😷😷😷😷

  ReplyDelete
  Replies
  1. நாங்க சோகமா இருக்கும் போது நீ வந்து சிரிப்பு காற்றியே யாரு சாமி நீ...

   Delete
  2. ne elam teachera pona students nilamai pavamtha..

   Delete
 3. Trt தேர்வு வருவது உறுதி

  ReplyDelete
 4. Trt தேர்வு வருவது உறுதி

  ReplyDelete
 5. Trb pending subjects list,beo result pathi ethavathu information kidaithatha mam pls reply

  ReplyDelete
  Replies
  1. Pending subjects seekirama varum sasi sir, beo and polytechnic pathi ipodhaiku endha info vum ila bt proceed panna chances iruku..

   Delete
 6. Trt நியமன தேர்வு or போட்டிதேர்வு என்று news paper-(21-1-2021) இல் வர வில்லையே

  ReplyDelete
 7. Friends don't feel tet exam ke answer illa so trt vara vaipu kuraivu but vanthalum onnum solla mudiyathu so be prepare

  ReplyDelete
 8. அட்மின் சகோதரி டெட் மற்றும் பிஜி நிலவரம் தான் என்ன?? தயவு செய்து கூறவும்.

  ReplyDelete
  Replies
  1. Saravanan Brother..

   Tet porutha vara, recent ah thanna paaka vandha 2013, 2017 batch kitta ellam yaarum ini varadhinga exam vachu dhan posting poda mudiyumnu education minister sonnadhaga thagaval..

   Pgtrb porutha vara exam dhan varum, second list venumnu 1:2 Secretariat ponapo kuda apdi GO irundha kaatunganu kettangalam, apdiyum again chennai poirukanga but adhu nadakkathu..

   So pg ku padinga.. Trt porutha vara first tet varanum, so time neriya edukkum..

   Delete
  2. மிக்க நன்றிகள் அட்மின் சகோதரி

   Delete
 9. தங்களுக்கு தெரிந்த தகவலை கூறவும்

  ReplyDelete
 10. Sir my cousin trb la work panranga avanga sonna thagaval tet process going on but three method discussed but enna method nu avar sollala.onnu mattum sonnar school la corona athigamanal and election date announced na no posting.bt ku 8k to 9k vacant irukam including retired aga poraanga vacancy

  ReplyDelete
  Replies
  1. Unknown friend pg trb exam pathi ethum sollaliya unga cousin

   Delete
  2. நன்றிகள் அன்நோன் நண்பரே

   Delete
 11. நம்பிக்கை என்னும் தோனியில் எங்கள் பயணம் வருடக்கணக்கில் நகர்ந்து கொண்டு இருக்கிறது
  என்னுடன் பயணிக்கும் சிலர் இதோ கரை! அதோ கரை! என்கின்றர்......
  நாங்கள் பயணிப்பது கடல் என்று நம்புகிறோம் அது கானல் நீர் என ஆகாமல் இருந்து நாங்கள் அடைய வேண்டிய இலக்கை சேர வேண்டிய கரையை அடைந்தால் முடிவிலாவது மகிழ்ச்சி இறை சித்தம்

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் சார் நம்மளும் வெயிட் பண்றோம் ஒன்னும் நடக்கற மாதிரி இல்ல

   Delete
  2. கார்த்திக் நண்பரே மிக அருமையாக கூறினீர்கள்

   Delete

Post a Comment

Popular posts from this blog

சிந்தனைச் சிதறல்..

மனம் ஒருமுகப்பட.. *காற்று ஒருமுகப்பட புயலாகிறது! மேகம் ஒருமுகப்பட மழையாகிறது.!  நீர் ஒருமுகப்பட நதியாகிறது!  நதி ஒருமுகப்பட கடலாகிறது!  மனம் ஒருமுகப்பட வெற்றி உருவாகிறது!  உங்களைக் கையாள மூளையைப் பயன்படுத்துங்கள்! மற்றவரைக் கையாள இதயத்தைப் பயன்படுத்துங்கள்!  இதயத்தைக் கவர்ந்துவிட்டு, எதைச் செய்தாலும், அது இணக்கமாகவே இருக்கும்.  வாயில் உதிரும் வார்த்தைகளை விட இதயத்திலிருந்து உதிரும் வார்த்தைகளால் அன்பு மலரும்! அன்பே ஆனந்தம் தரும்.*_ கோபம் ஒரு சுயதண்டனை, அடுத்தவர் செய்த தவறுக்கோ அல்லது அடுத்தவர் தவறு செய்திருக்கலாம் என்ற நிலையிலோ நமக்கு நாமே கொடுத்துக் கொள்கிற தண்டனைதான் கோபம்!  கோபத்தில் நடிப்பிருக்கலாம்! துடிப்பிருக்கக்கூடாது!*_  *உறவுகள் கூட நிலவைப் போன்று தான்..!* *"தூரத்தில்" இருக்கும் வரை* *ரசித்துக் கொண்டாடப்படும்..!!* *எதிர்பார்ப்பை* *குறைத்துக் கொள்ளுங்கள்..!* *ஏமாற்றத்தால் சோர்வடையத்* *தேவையில்லை..!!* *அன்று "வயதைப்"* *பார்த்து வந்தது..* *இன்று "வசதியைப்"* *பார்த்து தான் வருகிறது..!!* *"மரியாதை"* *செல்லும் பாதை*  *சரியானதாக இல்லாத போது..*

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல.

படித்ததில் பிடித்தது..

 கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான். ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ  நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!” என்றான். கடவுள் உடனே,  “ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார். விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது. ”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது,  மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான். மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது. அறுவடைக் காலமும் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான். அதிர்ந்தான்.. உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி