ஏன் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது?
சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் என்ன தொடர்பு? இதற்கான விடை பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ளது.
சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும், யமுனா நதியும்.. சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன்.
கண்ணபிரான் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கிய பின் அனைத்துத் தேவர்களும் யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள்.
கங்கையை விடப் புனிதமான நதியென அதைக் கொண்டாடினார்கள்.
அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து, “சகோதரியே! உன்னை மங்களமானவள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் என்னை முடவன் என்றும் அமங்களமானவன் என்றும் கூறுகிறார்களே. உன்னைப் போல நானும் மங்களகரமானவனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
அங்கே வந்த நாரதர், “சனீஸ்வரா! யமுனை கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தாள். அதனால் மங்களகரமானவளாக இருக்கிறாள். நீயும் கண்ணனின் திருவுள்ளத்தை உகப்பித்தால் மங்களமாகி விடுவாய்!” என்று கூறினார்.
“அவனை உகப்பிக்க நான் என்ன செய்ய வேண்டும்?” என்று சனீஸ்வரன் கேட்டார்.
அதற்கு நாரதர், “ஹோலிகா என்று இரணியனுக்கொரு சகோதரி இருந்தாள். அவளுக்குத் தீயால் சுடப்படாமல் இருக்கும் விசேஷத் தன்மை உண்டு. பிரகலாதனைப் பல விதமான தண்டனைகளுக்கு உள்ளாக்கியும் அவன் அவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்ட இரணியன், ஹோலிகாவிடம் பிரகலாதனை ஒப்படைத்தான்.
பிரகலாதனைத் தீயில் தள்ளிய ஹோலிகா, தானும் தீக்குள் இறங்கி அவனை வெளிவரமுடியாதபடி அழுத்தினாள். அப்போது நரசிம்மப் பெருமாள் ஹோலிகாவின் பிடியிலிருந்து பிரகலாதனைக் காத்து வெளியே அழைத்து வந்தார்.
ஹோலிகாவிடமிருந்து நரசிம்மர் பிரகலாதனைக் காத்த நாளைத்தான் ஹோலிப் பண்டிகையாக மக்கள் கொண்டாடுகின்றார்கள்.
அந்த ஹோலிகா பெண் என்பதால் நரசிம்மர் அவளைக் கொல்லாமல் விட்டுவிட்டார். இப்போது அவள் தன் சகோதரனான இரணியனைக் கொன்ற திருமாலைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறாள்.
திருமால் கண்ணனாக அவதாரம் செய்ததை அறிந்து கோகுலத்துக்கு அவள் வந்துவிட்டாள். நாளை இங்கே ஹோலிப் பண்டிகை.
தன்னிடம் இருந்து பிரகலாதனை அவன் காத்த நாளான ஹோலிப் பண்டிகையன்று கண்ணனையும் அவன் தோழர்களையும் தீக்கு இரையாக்கிப் பழிதீர்க்கத் திட்டம் தீட்டியிருக்கிறாள்.
சனீஸ்வரா! நீ அந்த ஹோலிகாவைக் கண்டறிந்து அவளை எரித்துச் சாம்பலாக்கிவிட்டால், கண்ணனை மகிழ்விக்கலாம். அவன் அருளைப் பெறலாம். நீயும் மங்களகரமாக ஆகலாம்!” என்றார்.
அடுத்தநாள் ஹோலிப் பண்டிகை. கண்ணனும் அவன் தோழர்களும் பெரிய பெரிய கொள்ளிக் கட்டைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து, நரசிம்மர் மற்றும் பிரகலாதனின் திருநாமங்களைப் பாடி, ஹோலிகாவின் கொடும்பாவியை எரித்து ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
அந்தக் கொள்ளிக் கட்டைகளுக்குள் ஹோலிகா ஒளிந்திருந்தாள். தீ மூட்டப்பட்டவுடன் கண்ணனையும் அவன் தோழர்களையும் உள்ளே இழுத்துவிட வேண்டும் என்று எண்ணிய அவள் மேல் சனீஸ்வரன் தன் பார்வையைச் செலுத்தினான். சனிபார்வை பட்டவுடனேயே ஹோலிகா தன் சக்திகள் அனைத்தையும் இழந்து விட்டாள்.
கண்ணன் தீ மூட்டினான். அத்தீயில் ஹோலிகா எரிந்து சாம்பலானாள்.நாரதர் சனீச்வரனைக் கண்ணனிடம் அழைத்துச்சென்று நடந்தவற்றை விவரித்தார்.
அப்போது சனீஸ்வரனது தொண்டுக்கு மனமுகந்த கண்ணன், “சனீஸ்வரா! நீ இனிமேல் மங்களமானவனாகத் திகழ்வாய்.
உன் கிழமையான சனிக்கிழமையின் விடியற்காலை வேளை மிகவும் மங்களமானதாகக் கருதப்படும். அந்நாளின் திதியோ, நட்சத்திரமோ எதுவாக இருந்தாலும், சனிக்கிழமையின் விடியற்காலைப் பொழுது மங்களமானதாகவே கருதப்படும்.
28-வது கலியுகத்தில் நான் திருமலையில் மலையப்பனாக வந்து தோன்றுவேன். சனிக்கிழமைகளில் என்னை வந்து தரிசிக்கும் அடியார்கள் வேண்டும் வரங்கள் அனைத்தையும் அருளுவேன்!” என்று வரமளித்தான்.
அதனால்தான் ‘சனி உஷஸ்’ எனப்படும் சனிக்கிழமையின் விடியற்காலை வேளை மங்களமானதாகவும், அனைத்து சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு உகந்த நாட்களாகவும் விளங்குகின்றன.
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGud mng ano mam and frnds
ReplyDeleteHappy Morning Fathima mam..
DeleteArmaiyana thagaval madam..thangal sevai thodaratum!!!!!!!
ReplyDeleteThanks mam.. Welcome to Puthagasalai.. Keep in touch..
Deleteano mam one doubt ipo elamey new books ah change akuthu tet ku new book la varuma old book la varuma
ReplyDeleteNew syllabus dha padikkanum sir, venumnae adhula irundhu dha keppanga
Deletethank u mam....tet ku padika interest ah varala irunthalium keten...
DeletePadikkathinga sir.. :)
DeleteGood morning Ano Mam
ReplyDeleteGudnoon Mythili mam..
DeleteGood morning Anon mam.
ReplyDeletePG syllabus and TRT Syllabus are same or different
Gudnoon Sir..
DeletePG la ug and pg rendum mingle agum sir, but TRT la ug ku dha neriya importance kudupanga..
K mam.UG Syllabus kidaikuma mam
ReplyDeleteano mam my major is maths please suggest important topics
DeleteReal analysis, Complex analysis, statistics, first concentrate panlam..
DeleteAlready govt published or not
ReplyDeleteSir என்னும் trt syllabus govt publish பண்ணல. .......
DeleteTRT syllabus ini dha varum sir, but unga major ku ug la important topics ungaluku theirnjurukkum adha Neenga revise panradhu naladhu..
DeleteMaths ah irundha naa topic name suggest panuven.. Unga major la edhu romba important nu analyse panitu padikka start panunga..
Good afternoon ano sis
ReplyDeleteGudevng Revathi sis..
Delete45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது - TRB அறிவிப்பு.
ReplyDeleteபல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் TET தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பரிதவிப்பு. கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர் பணி நியமனத்திற்கு TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதன்படி 2012 முதல் இதுவரை தமிழ்கத்தில் 4 முறை TET தேர்வு நடைபெற்றுள்ளது. இதுவரையிலான TET தேர்வுகளில் B.Ed ., தேர்ச்சி பெற்ற அனைவருமே எழுத அனுமதிக்கப்பட்டனர். அதற்கென UG மற்றும் B.Ed ஆகியவற்றில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்நிலையில் 2019 ம் ஆண்டுக்கான TET தேர்வு அறிவிக்கப்பட்டு ONLINE வழியாக விண்ணப்பப் பதிவு நடைபெறுகிறது. ஆனால் இம்முறை TET தேர்வில் Paper 2 க்கு விண்ணப்பிக்க UGல் OC பிரிவினர் 50% மும் , இதர இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்கள் ( BC /MBC / SC / ST ) அனைவரும் 45% முன் பெற்றிருக்க வேண்டும் என TRB புதிய விதிமுறை வகுத்துள்ளது. TRBன் இந்த புதிய விதிமுறையால் B.Ed பட்டம் பெற்று TET தேர்வு எழுதக் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பாக சில நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கிறோம். கோரிக்கைகள்
1. தமிழகத்தில் B.ED பட்டம் பெற UGல் குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி UG பட்டப் படிப்பில் OC பிரிவினர் 50% மும் , BC பிரிவினர் 45 % மும் , MBC பிரிவினர் 43% மும் , SC / ST பிரிவினர் 40% மும் பெற்றிருந்தால் மட்டுமே B.ED படிப்பில் சேர முடியும். இவ்வாறு தகுதி பெற்ற மாணவர்களே B.ED தேர்ச்சி பெற்று TET தேர்வை எழுதுகின்றனர். இந்நிலையில் TET தேர்வுக்கென தனியாக UG பட்டப் படிப்பில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் வைப்பது சரியானதல்ல. TRBன் இந்த முடிவு சமூக நீதிக்கு எதிரானது.
2. TRBன் இம்முடிவால் UG பட்டப் படிப்பில் 43 - 44% மதிப்பெண்கள் வரை பெற்று B.Ed பட்டம் பெற்ற M. BC மாணவர்களும்; 40-44 % மதிப்பெண்கள் வரை பெற்று BEd பட்டம் பெற்ற SC / ST மாணவர்களும் TET தேர்வு எழுத முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களில் B.ED பட்டப் படிப்பு கேள்விக்குள்ளாகி உள்ளது.
3. தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் B.ED., பட்டப் படிப்பில் சேர UG ல் குறைந்தபட்ச ம் 40 % மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதால் 40% க்கும் கீழ் பெற்ற தமிழக மாணவர்கள் பலர் UG தேர்வில் தேர்ச்சி பெற்றாலே B.Ed பட்டப் படிப்பிற்கு அனுமதிக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், கலசலிங்கம் பல்கலைக் கழகம் உள்ளிட்ட சில தமிழகப் பல்கலைக் கழகங்களிலும் ; புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட கல்வியியில் கல்லூரிகளிலும் பயின்று B.Ed பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தகு மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் ஆகும். கடந்த TET தேர்வுகளில் இம்மாணவர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு, அவர்களில் சிலர் தேர்ச்சி பெற்றுப் பணி நியமனமும் பெற்றுள்ளனர். 4. தற்போதையக் கல்வி ஆண்டில் கூட B.Ed பட்டப் படிப்பில் UGல் 45% க்குக் கீழ் பெற்ற மாணவர்கள் பயின்று வருகின்றனர். TET தேர்வை UGல் 45% க்குக் கீழ் பெற்ற மாணவர்கள் எழுத முடியாதெனில் அவர்களை B.ED பட்டப் படிப்பில் சேர்ப்பது முரணானது இல்லையா? எனவே தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் B.ED பயின்று பட்டம் பெற்ற தமிழக மாணவர்கள் அனைவரையும் TET தேர்வு எழுத அனுமதிப்பதே சரியான முடிவாகும். இல்லையெனில் UGல் 45% மதிப்பெண்களுக்கும் கீழ் பெற்று B.ED பட்டம் பெற்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் நிலை கேள்விக்குறி ஆகும். எனவே தயவு செய்து தமிழக அரசும் , ஆசிரியர் தேர்வு வாரியமும் B.ED பட்டம் பெற்ற அனைவரையும் TET தேர்வு எழுத அனுமதித்து உடனடியாக அரசாணை வெளியிடும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
TET தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுள் ஒருவர்.
Ithu veraya..intha TRB rompa panrainka..
DeleteEluthi onum ava porathu ila..poi polapa parunka..
DeleteHi ano mam any idea about our cs instructor exam date?
ReplyDeleteHi Fathima mam..
DeleteJune la expect panlam mam.. Exact ah solanumna may end or june kulla..
Ok mam thank u. If u get any info pls do share.
DeleteSure mam, gudnyt..
Delete