சென்னை, :தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், அனைத்து பொது தேர்வுகளும்
நேற்றுடன் முடிந்தன. ஒரு மாதமாக நடந்த தேர்வின், விடை தாள் திருத்தம், நேற்று துவங்கியது.தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், ௧௦ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பொது தேர்வுகள், 2018, ஜூனில் அறிவிக்கப்பட்டன. திட்டமிட்டபடி, மார்ச், 1ல் தேர்வுகள் துவங்கின.பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 1ல் துவங்கி, மார்ச், 19ல் முடிந்தன. பிளஸ் 1 தேர்வுகள், மார்ச், 6ல் துவங்கி, மார்ச், 22ல் முடிந்தன. பத்தாம் வகுப்பு தேர்வுகள், மார்ச், 14ல் துவங்கி, நேற்றுடன் முடிந்தன. ஒரு மாதம் நடத்தப்பட்ட பொது தேர்வுகள், எந்த குளறுபடியும் இன்றி, வினாத்தாள், 'லீக்' ஆகாமல், முடிந்துள்ளன.பிளஸ் 2 வினா தாள்கள் எளிதாக இருந்தன. ஆனால், பிளஸ் 1 தேர்வுகளில், கடின வினாக்களால் மாணவர்கள் திணறினர். பத்தாம் வகுப்பு தேர்வில், எப்போதும் இல்லாத அளவுக்கு, கணிதம், அறிவியல் தேர்வுகள் மிக கடினமாக இருந்தன. மற்ற பாடங்கள் எளிதாக இருந்தன.இந்த தேர்வுகளுக்கான விடை தாள் திருத்தம், படிப்படியாக துவங்க உள்ளது. முதலில், பிளஸ் 2 விடைத் தாள் திருத்தம், நேற்று துவங்கியது.தேர்வு முடிவுகள், பிளஸ் 2வுக்கு, ஏப்.,19; பிளஸ் 1க்கு, மே, 8; பத்தாம் வகுப்புக்கு, ஏப்., 29ம் தேதிகளில் வெளியாகும் என, தேர்வு துறை அறிவித்துள்ளது.
"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!! "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்....., "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே..., " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது"....., " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...
Comments
Post a Comment