Skip to main content

இலக்குகள் அடைவதற்கு..

உங்கள் இலக்குகளின் மீது முழுதாக நம்பிக்கை வையுங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து கிடைக்கும் உற்சாக வார்த்தைகளுக்கு மேல் உங்களுக்குள் இருக்கும் ஆழமான நம்பிக்கை தான் அடுத்தடுத்த தளங்களுக்கு நகர்த்திச் செல்லும்


அதே நேரத்தில் இலக்கு குறித்தத் தெளிவும் வேண்டும். 

இலக்குகள் இல்லாத யாரும் சாதனையாளர்களாக மாறிய வரலாறு இல்லை என்பதை அழுத்திச் சொல்லலாம். 


இலக்குகளைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ளும் அதேநேரம், அதை அடைவதற்கான முயற்சிகளை சோர்வில்லாமல் முன்னெடுக்க வேண்டும்..


இரண்டு பேர் ஒரு பெரிய மலை முகட்டின் முன் நின்று கொண்டு இருக்கிறார்கள். இருவரில் முதலில் மலையின் உச்சியைத் தொடுபவருக்கு மிகப் பெரிய தொகை பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. 


இரண்டு பேருக்குமே மலையேற்றம் குறித்து அனுபவம் துளியும் கிடையாது. ஆனால் கண் முன்னே பணமுடிப்பு மின்ன, உற்சாகம் பொங்கி வழிகிறது.


'இருவரில் ஒருவர் வேகவேகமாக ஓடி மலையில் ஏறத் தொடங்குகிறார். இன்னொருவரோ அமைதியாக அவர் மலை ஏறுவதை கவனித்துக் கொண்டு இருக்கிறார். 


சுற்றியிருக்கும் கூட்டம் ஆர்ப்பரித்துக் கத்துகிறது. அதுவோ பாறைகள் நிறைந்த செங்குத்தான மலை முகடு. சில அடிகள் வேகமாக முன்னேறுகிறார். 


தடுமாறிக் கீழே விழ, சுற்றி இருப்பவர்கள் அவரை ஆசுவாசப் படுத்துகிறார்கள். போட்டியில் கலந்து கொண்ட இன்னொருவரைக் காணவில்லை. 


அவரோ, நிதானமாக ஒரு கயிறும், சில ஆணிகளும் எடுத்துக் கொண்டு வந்து பாதுகாப்பாக மலையை ஏற ஆரம்பிக்கிறார்.


அப்புறமென்ன வெற்றி அவருக்குத் தான். இருவருக்கும் சமமான ஒரே களம் தான். கயிறுகளையோ, பாதுகாப்பு உபகரணங்களையோ, பயன்படுத்தக் கூடாது என யாரும் சொல்லவில்லை. 


ஆனால் அவ்வளவு பெரிய மலையை ஏறுவதற்கு அவை மட்டும் போதுமா என்ன? முதலில் அந்த மலையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?. 


அதோடு பாதுகாப்பாக உச்சியை அடையத் தேவையான முன்னேற்பாடுகளைக் கவனிக்கவும் வேண்டும். இதைத்தான் செய்தார் அந்த இரண்டாம் நபர்.


*ஆம்.*


மலை ஏறும் பந்தயத்தைப் போலத் தான் நம் வாழ்வும் அதில் இணைந்திருக்கும் செய்வதைத் துணிந்து செய்யுங்கள். 


நீங்கள் செய்யும் செயலில் முழுமையான நம்பிக்கை உங்களுக்கே இல்லாத பொழுது அது எந்தத் தருணத்திலும் வெற்றியைத் தந்து விடாது.


வெற்றி தான் இலக்கு. அதை நோக்கித் தான் இந்த ஒட்டு மொத்தப் பயணமும்


எந்த வேலையைத் தொடங்கும் போதும் வெற்றி பெறுவதற்காகத் தான் செய்கிறோம் என்பதை ஆழமாக நம்புங்கள். 


சின்னத் தோல்விகளில் புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள முடியுமா எனப் பாருங்கள். 


தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்ளும் பாடத்தை மீறி யாருடைய வெற்றிக் கதையும் அந்த அனுபவத்தைத் தந்து விடாது...


Comments

  1. Wishing everyone a blessed day ahead..

    ReplyDelete
  2. ரொம்ப நாளா காணோமே. TET Posting news Update பண்ணுங்க.

    ReplyDelete
    Replies
    1. Vanakkam sir..

      Tet porutha vara neriya groups case potu, porattam panni TRT varama panidalanu pakranga, but TRT dhan varum.. Indha year TRT conduct pani posting poduvanga..

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  4. Padikka start panniten mam.... Nambikaiyoda padippom....

    ReplyDelete
  5. Trt examku speed ah prepare pannunga dec first week exam ....rompa speed ah appointment irukum this time....

    ReplyDelete
    Replies
    1. Good evening sir ... Thank you for your valuable information

      Delete
  6. Na education department la Oru sir kitta ketten gazette la syllabus vitta piragu change panna vaippu illa nu sonnaruuu.... athum entha govt.than gazette publish panni irukanga...

    ReplyDelete
  7. Syllabus change akuma sir

    ReplyDelete
  8. Paper 1 Ku syllabus enna mam

    ReplyDelete
    Replies
    1. Its there in that GO sir, u can download it by searching in google

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..