Skip to main content

ஞாயிறு போற்றுதும்..

கவிப்பேரரசு பாா்வையில் ஞாயிற்றுக் கிழமை.


ஞாயிற்றுக்  கிழமையென்பது சக்தி.


ஞாயிற்றுக் கிழமையென்பது மனசைத் தூசுதட்டி  வைக்கும் துப்புரவுநாள்.


பலருக்கு வாழ்க்கையே விடுமுறையாய் இருப்பதனால் ஞாயிற்றுக் கிழமையின் பெருமையே தெரிவதில்லை.


சனிக்கிழமை சாயங்காலத்தில் உயிரோடிருக்கிற  ஞாயிற்றுக் கிழமை பிறக்கும்போது இறந்தே பிறக்கிறது.


ஞாயிற்றுக் கிழமை என்பது ஒய்வுகளின் உன்னத மண்டபம்.


மிகை ஊதியம் கிடைத்தால் ஞாயிற்றுக் கிழமையை விற்பதற்கு நாம் தயாா்.

அதற்கு வாய்ப்பில்லாதவா்கள் மட்டுமே ஞாயிற்றுக் கிழமையைக் கட்டாயக் கல்யாணம் செய்து கொள்கிறாா்கள்.


ஞாயிற்றுக் கிழமை என்பது உறக்கமல்ல விழிப்பு.


பூமி விழிக்குமுன்பே புலன்கள் விழித்து விடவேண்டும்.


பித்தளைப் பாத்திரங்களை மாதம் ஒரு முறை புளி போட்டுத் துலக்குவது மாதிரி, புலன்களை வாரம் ஒரு முறை புடம் போட்டுத் துலக்க வேண்டும்.


ஆனால் ஞாயிற்றுக் கிழமையென்றால் பதினொரு மணிக்குப் பல் துலக்குவது என்றுதான் இங்கு பலா் இல்லற அகராதிகளில் எழுதப் பட்டிருக்கிறது.


ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இந்தியாவுக்கு பாரத் பந்த் தாகவே இருக்கிறது.


ஜன்னல்களையும் புலன்களையும் சாத்திக் கொள்வதா ஞாயிற்றுக் கிழமை?


புலன்களை வலிக்க வைக்கும் 

பொழுது போக்குச் சாதனங்களுக்குள் புதைந்து போவதா ஞாயிற்றுக் கிழமை?


இந்தியாவுக்குக் கிடைத்த சுதந்திரத்தைப் போலவே இந்தியனுக்குக் கிடைத்த ஞாயிற்றுக் கிழமையும் தப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.


வாரத்தில் ஆறு நாட்கள் வயிற்றுக்காக வாழ்ந்து விட்டோமே! 

ஒரு நாளாவது இதயத்துக்காக வாழவேண்டாமா?


வாரமெல்லாம் மனிதா்களோடு மன்றாடிக் கொண்டிருக்கிற மனிதா்களே!

ஞாயிற்றுக் கிழமையாவது தாவரங்களோடு பேசுங்கள்!


ஒரு செடிக்குப் பக்கத்தில் நாற்காலி போட்டு பூ மலரும்வரை பொறுத்திருங்கள்!


வானத்தில் வசிப்பதற்குப் பழகுங்கள்.


நாற்பது வயதிற்குப் பிறகு கால்சியத்தை கிரகித்துக் கொள்ள முடியாத மனித எலும்புகள் மாதிரி-மனிதா்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குமேல் படிப்பதை நிறுத்தி விடுகிறாா்கள்.


ஒரு வீட்டில் சமையலறையைவிட நூலகம் முக்கியம் என்று சட்டம் போட வேண்டும்.

ஞாயிற்றுக் கிழமையை நல்ல புத்தகங்களுக்கும் நமக்குமுள்ள சிநேகநாள் என்று செய்து கொள்ளவேண்டும்.


திருமணத்திற்குப் பிறகு பல இந்தியப் பெண்களுக்கு, தாலிக்குப்போட்ட முடிச்சு மாதிரியே இல்லற வாழ்க்கையும் இறுகிக் கிடப்பதனால் அவா்களில் பலா் மன நோயாளியாகவே

மாறிவிட்டாா்கள்.


நம் ரசனைகளையும் கலாசார அகலங்களையும் மனசின் பரப்பையும் விரிவு படுத்தும் வேலையைத்தான் ஞாயிற்றுக் கிழமை செய்ய வேண்டும்.


இரைப்பையை நிரப்பிக் கொள்ளத்தான் எல்லா நாட்களும்.

இதயத்தை நிரப்பிக் கொள்ள ஒரே நாள்தான்.

அதன் பெயா் ஞாயிற்றுக் கிழமை.


ஞாயிறு போற்றுதும்.


கவிப்பேரரசு வைரமுத்து

Comments

  1. அனைவருக்கும் வணக்கம் .நமது நோக்கத்திற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியிலோ அல்லது தலைமையிலோ போராடி இருக்கிறார்கள் உண்மைதான் ஆனால் இன்றைய நிலையில் நான் பலமுறை கூறிவந்துள்ளேன். அவரவரை நம்பி இருக்கிற அவரவரின் சங்கத்தின் உடைய உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் அவரின் தலைமையின் மீது நம்பிக்கை வைத்து போராட்டத்திற்கு வரட்டும் அவ்வாறு இருக்கும் 4 அல்லது 5 சங்கங்களோ அல்லது தலைமைகளோ அவரின் அவரின் அடையாளத்துடன் ஒரே முடிவுக்காய் 149 அரசாணை நீக்கம் என்பதன் ஒற்றுமைக்காய் ஓரணியில் திரண்டு போராட்டத்தை கையில் எடுத்தால் என்ன என்பதுதான் இப்போது உள்ள பிரச்சனை ஒருவரின் தலைமை மீது ஒருவருக்கு விமர்சனம் இருக்கலாம் ஆனாலும் விமர்சனம் இருப்பின் கூட அதற்காக அந்த தலைமையை நாம் தவிர்க்க நினைத்தால் அது 149 அரசாணை நீக்கத்திற்கு அதுவும் ஒரு தடையாய் இருக்கும் என்பதை எண்ணித்தான் இந்த முடிவிற்காக நாம் விட்டுக்கொடுத்தாக வேண்டும் மற்றவர்கள் சொல்லாத தத்துவத்தை ஒற்றுமைக்காக நான் ஒன்னும் சொல்ல வேண்டியது இல்லை அனைவருக்கும் தெரியும் ஆனாலும் மீண்டும் சொல்கிறேன் இங்கு விமர்சனங்களை கடந்து தலைமை என்ற பதவியைக் கடந்து பொது நோக்கம் என்ற ஒற்றை நோக்கத்திற்காக அனைவரும் சகோதரர்களாய்! ஆசிரியர்களாய் !நண்பர்களாய்! உறவுகளாய்! இணைந்தால் மட்டுமே நம் நோக்கத்தை வெற்றி அடைய செய்ய முடியும் இதில் *நல்லவன் கெட்டவன்* என்பதை தாண்டி ஆசிரியர் என்ற கூட்டம் ஒரணியில் திரண்டால் மட்டுமே ஒர் முடிவு கிடைக்கும். இல்லையெனில் குறுகிய காலமே உள்ள இந்த இடைப்பட்ட காலத்தை அரசு முனைப்பு காட்டி வரும் நியமன தேர்வுக்கு அனைவரும் நன்கு தயார் செய்து கொண்டு படித்து தேர்ச்சி பெற வாழ்த்துகிறேன். அதை விடுத்து வெறுமனே குழுக்களை ஆரம்பித்துக் கொண்டு சண்டை இட்டுக்கொண்டு விமர்சனம் வைத்துக் கொண்டு நெட் pack காலி பண்ணிக் கொண்டு எரிச்சலூட்டும் செயல்களை செய்து கொண்டு இருந்தோமானால் நம் வாழ்க்கையும் பாடுபடும் நம் நோக்கமும் சீர்கெடும். *149 அரசாணை நீக்கம் என்ற அம்பலத்தில் ஆடும் கூத்துக்கு என் கூத்தே சிறந்த கூத்து என ஒவ்வொரு தலைமையும் நினைத்து தனித்தனியாக ஆட நினைத்தால் அங்கு கூத்து வேணூமானால் நடக்கலாம் ஆனால் அதை அங்கீகரிக்கிற கூட்டம் வராது . ஆக அம்பலத்தில் கூத்தும் நன்றாக இருக்க வேண்டும் கூட்டமும் நன்றாக வர வேண்டும்* அதற்கு நாம் அனைவரும் *2013.2014.2017.2019* *என பேதம் இல்லாமல் ஆசிரியர் என்ற ஒற்றுமை யுணர்வோடு களமாடினால்தான் அது நல்ல கூத்தாக அமையும். அதற்கு ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம் கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு *பாய்ல தானூம் படுக்க மாட்டான். தள்ளியும் படுக்க மாட்டான்*. என்பதைப் போல போராடவும் செய்யாமல் போராட்டம் செய்பவர்களையும் விடாமல் விதண்டாவாதம் பேசினால் எதையும் சாதிக்க முடியாது ஆகவே இக்குழுவில் அனைத்து தலைமைகளையும் ஒருங்கிணைக்க நினைப்பவர்கள் விரும்புவார்கள் எண்ணத்தைக் கருத்தில் கொண்டு அவர்களின் பெயர் அலைபேசி எண்ணை பதிவிடுகிறோம் தொடர்பு கொண்டு பேசிப் பாருங்கள் தீர்வு கிடைத்தால் நல்லது.

    ReplyDelete
  2. ஆசிரியர் தகுதி முதல் தாள் தேர்வு செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கணினி வழியில் நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம்

    * ஆகஸ்டு 25ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்வு தேதிகள் மாற்றம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...