Skip to main content

எதுவும் செய்யாமல் இருப்பது தீர்வு அல்ல..


*நமது தொழிலிலோ அல்லது தனிப்பட்ட வாழ்விலோ ஏதாவது பிரச்சனை வந்தால் ஒதுங்கிக்கொள்வது நல்லது என்றே நினைப்போம்..*


*நெருக்கமானவர்களிடம்பிரச்சனை வந்தால் ஏதும் பேசினால் சண்டை வந்துவிடும் என்று பேசாமல் இருந்து விடுவோம்.* *ஆனால் இது பிரச்சனைக்கான தீர்வல்ல. எந்த பிரச்சனை என்றாலும் முறையாக பேசி அதற்கு ஒரு தீர்வு கண்டுபிடியுங்கள்.*


*ஏன் வம்பு என்று ஒதுங்கினால், பின்னர் அந்த பிரச்சனையே பெரிதாகிவிடும்...*


*பசியின் கொடூரம் உணருங்கள்...!*

*தோல்வியைத் தழுவிக் கொள்ளுங்கள்...!*

*துரோங்களைக் கடந்து செல்லுங்கள்...!*

*எதற்காகவாது கதறி அழுங்கள்...!*

*எவரையாவது கை தூக்கி விடுங்கள்...!*

*விரும்புபவர்களுக்கு விட்டுக் கொடுங்கள்...!*

*உயிர் உருகக் காதலியுங்கள்...!*

*இழப்பின் வலியுணருங்கள்...!*

*இவையனைத்தையும் செய்யுங்கள்...!*

*இவ்வாழ்வில் ஒருமுறையேனும்....*


*சோதனைகள் மனிதனின் மனவளம் கூட்டும்..!வெற்றிகள் அவனது தலைக்கனம் கூட்டும்..!தோல்விகள்.. அவனை அடையாளம் காட்டும்..!சிந்தனைகள்.. அவனுக்கு நல்வழி காட்டும்..!!*


*வெறுங்கையாகும் அளவிற்கு தர்மம் செய்யாதீர்கள்..*


*முகம் சிவக்கும் அளவிற்கு கோபம் கொள்ளாதீர்கள்..*


*குறுக்கு வழிக்குப் போகுமளவிற்கு பொறாமையை வளர்க்காதீர்கள்..*


*மனம் வலிக்குமளவிற்கு வார்த்தையை விடாதீர்கள்..*


*அடிமையாகும் அளவிற்கு அன்பை செலுத்தாதீர்கள்...*


*சண்டை உண்டாகுமளவிற்கு தேடல் விவாதத்தை தொடராதீர்கள்...*


*அமைதியை கெடுக்குமளவிற்கு ஆசையை சேர்க்காதீர்கள்...*


*பலிவாங்கும் அளவிற்குப் பகையை வளர்க்காதீர்கள்...*


*மனம் வெறுக்கும் அளவிற்கு செயல்கள் செய்யாதீர்கள்...*


*கண்ணீர் வடியுமளவிற்கு கவலைப்படாதீர்கள்....*


*நீங்கள் அடைவதெல்லாம் இறைவன் தந்த பரிசு..* 


*நீங்கள் இழப்பதெல்லாம் மற்றவருக்கு தரும் வாய்ப்பு....*


*நேரங்கள் நேர்மையானவை..*

*அதனால் தான் அவை யாருக்கும் காத்திருப்பதில்லை*

Comments

  1. Wishing everyone a blessed Sunday ahead..

    ReplyDelete
  2. mam Tamil major 101.81job kiddaikuma mam please reply

    ReplyDelete
    Replies
    1. 100+ so chances iruku, it also depends on ur community..

      Delete
  3. விரைவில் டிஆர்டி

    ReplyDelete
  4. போராட்டம் செஞ்சு டிஆர்டி ஐ உறுதி செய்தமைக்கு நன்றி

    ReplyDelete
  5. BC community female mam

    ReplyDelete
    Replies
    1. Bc konjam kastam dhan bt still women's quota la possibility iruku, stay confident. All the best mam..

      Delete
  6. பாலிடெக்னிக் விரிவுரையாளர் சான்றிதழ் சரிபாரிப்பு: 100க்கும் மேற்பட்ட பிற மாநிலத்தவர்கள் பங்கேற்பு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..