மேலும், ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 878 பேரும், தாள் 2-க்கு 4லட்சத்து ஆயிரத்து 886 பேரும் மொத்தம் 6 லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 மற்றும் தாள் 2-க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு, சில தொழில்நுட்ப காரணங்களால் திருத்தம் மேற்கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால், ஜூலை 27 ம் தேதி வரை திருத்தம் செய்யஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுஉள்ளது. விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள அளிக்கும் விண்ணப்பங்கள் மீது ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதுஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுநியமன தேர்வு ரத்து செய்யப்படும்🤩
ReplyDeleteவிரைவில்..
#TET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு மறு நியமன தேர்வான அரசாணை 149 ரத்து செய்து தமிழக முதல்வர் அறிவிப்பார்..
எதிர்கட்சியாக இருந்த போது சொன்னதை முதல்வர் நிச்சயம் நிறைவேற்றுவார்.
25/07/2022 பத்திரிக்கையாளர் சந்திப்பு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
#tetprotest #ChiefMinisterMKStalin #DMKITWING #kalvipaarvai #ChiefMinisterOfTamilnadu #TRBRajaa #MKStalinGovernment #தற்காலிகஆசிரியர்பணியிடம் #AnbilMaheshPoyyamozhi #jeevatoday