Skip to main content

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை...

நாளும் அது புரிவதில்லை.


₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்...

ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...!


₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ...₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ....


₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,

மனஅமைதியையும் தேடுங்கள் ...

மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்,

ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை


₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ...

இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?


₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ...

15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.


₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!


₹ வேலை இல்லாதவனின் பகலும்,

நோயாளியின் இரவும் மிக நீளமானவை.


₹ வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்... அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...


₹ இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,

வாழ் நாட்கள் போதாது ....ஏனெனில் ...

இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் ...


₹ பூனையை விட சிங்கம் வலிமையானது என்று

எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.


₹ தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான்

குற்றங்களுக்கு காரணம்!


₹ சிரித்துக்_கொண்டே உன்னோடிருந்து

 உனை_சீரழிக்கும் துரோகியை_விட ...

 முறைத்துக்_கொண்டே - உன் முன்னிருக்கும்

எதிரி_மேலானவன் !.....
₹ நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை

விட நம் காதுகளை மூடிக்கொள்வது

மிகச் சிறந்தது......


£ வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..


£ புன்னகை பிரச்சினைகள் "வருவதை தள்ளி போடும்..!!

 மெளனம் "பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!

 எல்லா "பிரச்சினைகளுக் கும் இந்த வாய் காரணம்..!!!


£ அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.

உணர்ச்சி உள்ள மனிதனையும்,,அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது.....


£ வாழ்வோடு போராடிச் சாவதிலும்

சாவோடு போராடி வாழ்வதிலுமே...

வாழ்க்கை முடிந்துவிடுகிறது...!!

Comments

 1. Welcome back mam are you fine now ☺️

  ReplyDelete
 2. சென்னை நுங்கம்பாக்கத்தில் 5 நாட்களாக தொடர்ந்த ஆசிரியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது.
  அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டம் இன்று 5ஆவது நாளை எட்டியது.

  இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சரின் இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, சட்டச்சிக்கலை நீக்குவது தொடர்பாக உறுதியளித்துள்ளோம் என்றார். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களுக்கு சீமான், அண்ணாமலை, தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  ReplyDelete
 3. சென்னை நுங்கம்பாக்கத்தில் 5 நாட்களாக தொடர்ந்த ஆசிரியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது.
  அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டம் இன்று 5ஆவது நாளை எட்டியது.

  இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சரின் இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, சட்டச்சிக்கலை நீக்குவது தொடர்பாக உறுதியளித்துள்ளோம் என்றார். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களுக்கு சீமான், அண்ணாமலை, தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  ReplyDelete
 4. BEO Exam ku B.litt T.P.T eligible ah?
  Please reply mam....

  ReplyDelete
 5. Welcome mam,we are waiting for your daily thoughts mam

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனை!

  வரும் 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை காணொலியில் நடைபெற உள்ள கூட்டத்தில் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்கள் பங்கேற்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் வரும் 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் காணொளி வாயிலாக ஆலோசனை