மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டாலும் கூட மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் மொத்த பாதிப்பில் 74% இந்த இரண்டு மாநிலங்களில் இருக்கின்றன.
தொடர்ந்து ஒரு வாரமாக கொரோனா தொற்று தினமும் அதிகமாக பதிவாகி வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய கடைகளை தவிர மற்றவை இரவு 10 மணிக்குள் மூட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புனேவில் பள்ளி - கல்லூரிகளுக்கு வரும் 28 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . ஆனால் முழு பொதுமுடக்கம் கொண்டு வரும் திட்டம் இல்லை என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது .
எனவே கொரோனா நம்மை விட்டு சென்றுவிட்டது என்று எண்ணாமல் முன்பு இருந்தது போன்று எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் .
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment