Skip to main content

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்..

 அவன் மாபெரும் செல்வந்தன். சந்தோஷம்தான் இல்லை. தேடிக்கொண்டு வெவ்வேறு 

நாடுகளுக்குப் போய்ப் பார்த்தான். சந்தோஷம் கிடைக்கவில்லை. 

மது, மங்கையர், போதைப் பொருள் என்று எல்லாவற்றின் பின்னாலும் அலைந்து பார்த்தான். மனம் மகிழ்ச்சியே அடையவில்லை.

துறவறத்தில் இறங்கினால் சந்தோஷம் கிடைக்கும்‘ என்று யாரோ சொல்ல, அதையும் அவன் முயற்சி செய்து பார்க்க முடிவெடுத்தான். 

தனது வீட்டிலிருந்த தங்கம், வைரம், வைடூரியம்என்று எல்லாவற்றையும் எடுத்து ஒரு மூட்டையாகக் கட்டிக்கொண்டு போய் ஒரு யோகியின் காலடியில் வைத்துவிட்டு,

ஸ்வாமி  இதோ என் அத்தனை சொத்துக்களையும் உங்கள் காலடியில் வைத்திருக்கிறேன்.  இனி இதில் எதுவுமே எனக்குத் தேவையில்லை.  நான் நாடிவந்திருப்பது அமைதியையும் மன சந்தோஷத்தையும் மட்டுமே“ என்று யோகியிடம் சரணடைந்தான்.

அந்த யோகியோ அந்த செல்வந்தன் சொன்னதைக் காதில் வாங்கிய மாதிரியே தெரியவில்லை. அவன் கொண்டுவந்த மூட்டையை மட்டும் அவசரமாகப் பிரித்துப் பார்த்தார். 

கண்ணைக் கூசவைக்கும் ஒளியுடன் ஜொலித்த தங்கத்தையும், வைரக்கற்களையும் பார்த்த யோகி, மூட்டையைச் சுருட்டி எடுத்துத் தன் தலையில் வைத்துக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓட ஆரம்பித்தார்.


செல்வந்தனுக்குப் பெரும் அதிர்ச்சி  ‘அடடா  இருந்திருந்து ஒரு போலிச் சாமியாரிடம் போய் நம் செல்வத்தை ஏமாந்து கோட்டை விட்டு விட்டோமே’ என்ற துக்கம்,ஆத்திரமாக மாற, அந்தச் செல்வந்தன் யோகியை துரத்த ஆரம்பித்தான்.


யோகியின் ஓட்டத்துக்குச் செல்வந்தனால் ஈடுகொடுக்க முடியவில்லை. சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து புகுந்து ஓடிய யோகி, கடைசியில் தான் புறப்பட்ட அதே மரத்தடிக்கு வந்து நின்றார். 

மூச்சு இரைக்க இரைக்க அவரைத் துரத்திக்கொண்டு வந்த செல்வந்தனிடம் யோகி,

என்ன பயந்துவிட்டாயா ? இந்தா உன் செல்வம். நீயே வைத்துக்கொள் “ என்று மூட்டையைத் திருப்பிக் கொடுத்தார்.

கைவிட்டுப் போன தங்கமும் வைரமும் திரும்பக் கிடைத்துவிட்டது என்பதில் செல்வந்தனுக்குப் பிடிபடாத சந்தோஷம்.

அப்போது அந்த யோகி, செல்வந்தனைப் பார்த்துச் சொன்னார்.

இங்கே வருவதற்கு முன்னால்கூட இந்தத் தங்கமும் வைரமும் உன்னிடம்தான் இருந்தன.ஆனால், அப்போது உனக்குச் சந்தோஷம் இல்லை. 

இப்போது உன்னிடம் இருப்பதும் அதே தங்கமும் வைரமும்தான். ஆனால் உன் மனதில் இப்போது சந்தோஷம் இருக்கிறது." என்று சிரித்தார்.


இதிலிருந்து புலப்படும் உண்மை ஒன்றுதான்.


சந்தோஷம் என்பது நமக்கு வெளியே இல்லை;  மனதில்தான் இருக்கிறது.


இந்த உண்மை, செல்வத்தை மூட்டை கட்டிக்கொண்டு திரிந்த செல்வந்தனைப் போலவே நம்மில் பலருக்கும்கூடத் தெரியவில்லை. 


அதனால்தான் நாம் பல சமயங்களில் 

நமது சந்தோஷத்துக்காகப் பிறரைச் 

சார்ந்து இருக்கிறோம்.


யோசித்தால் அமைதியும், 

சந்தோஷமும் நமக்குள்தான்


இருக்கும் இடத்தை விட்டு

இல்லாத இடம் தேடி

எங்கெங்கோ அலைகின்றார்.

ஞானத்தங்கமே.

அவர் ஏதுமறியாரடி

ஞானத்தங்கமே.

கண்ணதாசனின் வைர வரிகள் முற்றிலும் உண்மை...

நாமே நமது மகிழ்ச்சிக்கு காரணம் மற்றவர் அல்ல..


Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
 2. Good morning have a nice day friends

  ReplyDelete
 3. Kalviseithi ,kalvi kural ,pada salai ,kalvi solai ,kalvi kalanjiyam how many website are there but no one publish right news for tet

  ReplyDelete
  Replies
  1. கல்விச்செய்தி பூரா பொய் தான்.

   Delete
 4. That is why I will see only Puthagasalai. Admin madam will clarify with all news related to TET.

  ReplyDelete
 5. காலை வணக்கம் அட்மின் மேம்

  ReplyDelete
 6. டெட்க்கு எடுத்த எல்லா முயற்சியும் வீண் தான்

  ReplyDelete
 7. Replies
  1. Mam, just now I meet ADW JD Mr.Jagadeesh he tells, Process are going wait for some days, and don't go anywhere about this issue,it's clear very soon...

   Delete
  2. புரியல சார்

   Delete
  3. Super Murali sir, I told you know don't worry. Everything will be fine soon..

   Delete
  4. Unknown sir we talking about welfare department postings

   Delete
  5. Murali i have one doubt u have admin mobile number .bcos itha phone panni pesalam intha news ah website la pathiduvathin purpose .enaku some times ithula undated panra ellaru mulaiyum doubt varuthu including admin .ithana la enaku onnum aga porathu illa etho website vilamparamonu thonuthu .don't mistake me

   Delete
 8. தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி, மே 21ஆம் தேதி முடிவடைகிறது

  - பள்ளிக்கல்வித்துறை

  ReplyDelete
 9. Indha attavanaiya dhan solitu irundharu pola sengal..

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் நம்ம நேரம் சகோதரி

   Delete
 10. Nammalku nalla kallam eppo varumnu theriyala

  ReplyDelete
 11. Feb last week election date soliduvangal, Tet athoda dead aagirum Tet pass panni 8yearum lifeum Veena ponnathu

  ReplyDelete
 12. 9years waste sir tnpsc pass panni poi iruntha promotion la high posting poi irukalam

  ReplyDelete
 13. Amam en veetu near la oru paiyan 68 k vanguran

  ReplyDelete
 14. Arts and science college professor interview list published

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.

  தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.   தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு   தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . 06.07.2022 பத்திரிகை செய்தியின்படி ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- I ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினிவழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது நிர்வாக காரணங்களினால் , தாள்- I ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்படவுள்ளது . மேற்படி கணினிவழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சித் தேர்வு ( Practice Test ) மேற்கொள்ளவிரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு , தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் . இது குறித்த அறிவிக்கை , தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் .

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.