Skip to main content

இன்றைய சிந்தனை..

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்., 


அவன் அதை உணரும் போது, 
கையில் ஒரு பெட்டியுடன் 
கடவுள் அவன் அருகில் வந்தார்..

#கடவுள் : "வா மகனே.... 
நாம் கிளம்புவதற்கான 
நேரம் வந்து விட்டது.."

#மனிதன் : "இப்பவேவா? 
இவ்வளவு சீக்கிரமாகவா?
என்னுடைய திட்டங்கள் 
என்ன ஆவது?" 

#கடவுள் : "மன்னித்துவிடு மகனே....
உன்னைக் கொண்டு 
செல்வதற்கான நேரம் இது.."

#மனிதன் : "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"

#கடவுள் : "உன்னுடைய உடைமைகள்....."

#மனிதன் : "என்னுடைய உடைமைகளா!!!
என்னுடைய பொருட்கள், 
உடைகள், பணம்,....
எல்லாமே இதில் தான்
இருக்கின்றனவா?"

#கடவுள் : "நீ கூறியவை அனைத்தும் 
உன்னுடையது அல்ல.. 
அவைகள் பூமியில் 
நீ வாழ்வதற்கு தேவையானது.."

#மனிதன் : அப்படியானால், 
"என்னுடைய நினைவுகளா?"

#கடவுள் : "அவை காலத்தின் கோலம்...."

#மனிதன் : "என்னுடைய திறமைகளா?"

#கடவுள் : "அவை உன் சூழ்நிலைகளுடன் 
சம்பந்தப்பட்டது...."

#மனிதன் : "அப்படியென்றால் என்னுடைய 
குடும்பமும் நண்பர்களுமா?"

#கடவுள் : "மன்னிக்கவும்.......
குடும்பமும் நண்பர்களும் 
நீ வாழ்வதற்கான வழிகள்...."

#மனிதன் : "அப்படி என்றால் 
என் மனைவி மற்றும் மக்களா?"

#கடவுள் : "உன் மனைவியும் மக்களும் 
உனக்கு சொந்தமானவர்கள் அல்ல, 
அவர்கள் உன் இதயத்துடன் 
சம்பந்தப்பட்டவர்கள்...."

#மனிதன் : "என் உடலா?"

#கடவுள் : "அதுவும் உனக்கு சொந்தமானதல்ல....
உடலும் குப்பையும் ஒன்று...."

#மனிதன் : "என் ஆன்மா?"

#கடவுள் : "அதுவும் உன்னுடையது அல்ல...,  அது என்னுடையது......."

●மிகுந்த பயத்துடன் 
கடவுளிடமிருந்து 
அந்தப் பெட்டியை வாங்கி 
திறந்தவன், 

காலி பெட்டியைக் கண்டு
அதிர்ச்சியடைகிறான்..

கண்ணில் நீர் வழிய 
கடவுளிடம், 

"என்னுடையது என்று 
எதுவும் இல்லையா?" 
எனக் கேட்க,

#கடவுள் சொல்கிறார்,
"அதுதான் உண்மை.. 
நீ வாழும் 
ஒவ்வொரு நொடி மட்டுமே 
உன்னுடையது..

வாழ்க்கை என்பது 
நீ கடக்கும் ஒரு நொடிதான்..

ஒவ்வொரு நொடியையும் 
சந்தோஷமாக வாழ்

எல்லாமே உன்னுடையது என்று 
நினைக்காதே........"

-- ஒவ்வொரு நொடியும் வாழ்

-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்

-- மகிழ்ச்சியாக வாழ்
அது மட்டுமே நிரந்தரம்..

-- உன் இறுதிக் காலத்தில் 
நீ எதையும் உன்னுடன் 
கொண்டு போக முடியாது
வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்.

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Good morning sister ☺

    ReplyDelete
  3. Replies
    1. நல்ல எண்ணங்களே வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும்... தீய எண்ணங்கள் நம்மை அழிப்பதொடு நம்மை சார்ந்தவர்களையும் சேர்த்து அழித்து விடும்...

      Delete
    2. அட்மின் மேடம் முரளி சார் சொல்லி இருக்கும் தீய எண்ணங்கள் நம்மை அளிப்பதோடு நம்மை சார்ந்து இருப்பர்களையும் சேர்த்து அழிக்கும். இந்த கருத்து கண்டிப்பாக உங்களுக்கு 100% பொறுத்தமாக இருக்கிறது....

      Delete
    3. அட்மின் மேடம் முரளி சார் சொல்லி இருக்கும் தீய எண்ணங்கள் நம்மை அழிப்பதோடு நம்மை சார்ந்து இருப்பர்களையும் சேர்த்து அழிக்கும். இந்த கருத்து கண்டிப்பாக உங்களுக்கு 100% பொறுத்தமாக இருக்கிறது....

      Delete
    4. Why Mr. Unknown, Admin Madam vungalukku enna Theengu Seithaargal, ethukkaga ippadi pesureenga, Avanga ellorukkum Nallathu mattumey Seiraanga...Please next neenga PGT aaga poreenga, 1000 of students vungala Kadavula paakkanuma veynama neengaley mudivu pannikonga...

      Delete
    5. SK நீங்க இந்த மாதிரி அட்மின் மேடம் பத்தி பேசறதை விட்டுட்டு படிக்கிற வேலைய பாருங்க

      Delete
    6. அறிவீலி Unknown அவர்களே அட்மின் மேடம் இருக்காதால தான் உங்கள போல தீயது எல்லாம் ஓடுது இல்லனா எங்க நிலைமை எல்லாம் மோசம் தான்

      Delete
    7. அன்நோன் நண்பரே நாவடக்கம் தேவை.

      Delete
    8. முரளி நீங்கள் கூறியது ௮ட்மினுக்கு பொருந்தும்

      Delete
    9. ஆம் தீய எண்ணம் கொண்ட உங்களை போன்றவர்களை ஒதுக்கி நல்ல எண்ணங்களை வலிமை பெற செய்வதால் அட்மினுக்கு முரளி நண்பர் கூறியது நிச்சயமாக பொருந்தும்

      Delete
    10. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

      Delete
    11. படிக்கற வழிய பாக்காம எப்ப பாத்தாலும் பொம்பள பிள்ளையை குத்தம் சொல்றதெல்லாம் ஒரு பொழப்பா

      Delete
    12. Murali sir, Saravanan sir and Unknown frnds..

      Don't react to them, they can only talk like this..

      Barking dogs seldom bite..

      Delete
    13. 👌👌👌👌👌👌

      Delete
    14. 👌👌👌👌👌👌

      Delete
    15. Saravana sir your words were very true..these peoole fit for criticizing women only

      Delete
  4. Madam age extend panuvangala matangala???

    ReplyDelete
  5. Replies
    1. Extend panna dhan possibilities adhigam frnd..

      Delete
  6. Apdiye extern panni 100 age akkattum yen na tamilnadu la youngsters ye illaye yenna panna nanna state la strength kammi pola

    ReplyDelete
  7. Trt info varuma mam Feb முடிய போகுதே

    ReplyDelete
    Replies
    1. Tet notification varumnu sonnanga sir.. Lets wait and see..

      Delete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..