Skip to main content

மூடிய ஆட்டோவுக்குள் கைவிடப்பட்டுக் கதறிய பிஞ்சு; காப்பாற்றி காப்பகத்தில் சேர்த்த ஈரமுள்ள நெஞ்சு!

மும்பை இளைஞர் 26 வயது அமான், வழக்கம் போல இரவு சாப்பாட்டுக்குப் பின் குட்டியாய் ஒரு வாக்கிங் சென்று வந்த பிறகே தூங்கச் செல்வது வழக்கம். அன்றும் அப்படித்தான் தனது வீட்டில், இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு வாக்கிங் செல்லத் தெருவில் இறங்கினார், சற்று தூரத்தில் தெரு முக்கு தாண்டும் போது எங்கிருந்தோ ஒரு மெல்லிய ஓலம் போன்ற பரிதாபச் சிணுங்கல் காதில் விழவே முதலில் அதை ஏதோ பூனை அழுகிறது போலும் என்று புறம் தள்ளியவர் மீண்டும் தனது வாக்கிங்கைத் தொடரப் போனார். ஆனால் அவரால் அந்த ஓலத்தை அலட்சியப்படுத்த முடியவில்லை. பூனையாகவே இருந்தாலும் கூட ‘தானொரு விலங்குகள் நேசன் என்பதால்... ஏதாவது பூனைக்கு அடிபட்டு, காயம் காரணமாக வலி தாங்க முடியாமல் அது அழுகிறது போலும் என்றெண்ணி சத்தம் வந்த திசை நோக்கி நடந்தார். கிட்டெ நெருங்க, நெருங்க அந்த ஓசை இன்னும் அதிகரிக்கவே அருகில் சென்றார். அங்கே தெருமுனையில் மாநகராட்சி குப்பைத்தொட்டிக்கு அருகில் ஒரு மூடப்பட்ட ஆட்டோ நிறுத்தப்பட்டிருந்தது. அதற்குள் இருந்து தான் சத்தம் வருகிறது என்றுணர்ந்து அமான் அதைத் திறக்க முயற்சித்தார். சற்று சிரமப்பட்டேனும் ஆட்டோவைத் திறந்து உள்ளே பூனையைத் தேடினால், அதுவரை தீனமான குரலில் அழுது கொண்டிருந்தது பூனை அல்ல பிறந்து ஓரிரு நாட்களே ஆகியிருந்த ஒரு சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தை! என்று தெரிய வந்ததும் அமான் முதலில் திகிலடைந்து விட்டார்.

அவரால் அந்தக் குழந்தையை அப்படியே விட்டுச் செல்லவும் முடியவில்லை. பிறந்த சிசுவை கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்றும் தெரியவில்லை. சில நொடிகள் திக் பிரமை பிடித்தது போல் நின்று விட்டு குழந்தையைப் புகைப்படமெடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்... வாக்கிங் செல்கையில் குழந்தை கிடைத்த செய்தியை தனது நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து என்ன செய்வது என்று புரியவில்லை. நண்பர்களே எனக்கு உதவுங்கள் நான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என வழிகாட்டுங்கள் எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.


இந்த இடத்தில் தான் நாம் அமானின் செயலைப் பாராட்ட வேண்டும். நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் நம்மில் எத்தனை பேர் இப்படியான ஒரு சூழலை எதிர்கொள்ள நேர்ந்திருந்தால் இமான் போலவே அந்தக் குழந்தையின் பொறுப்பை நமதாக ஏற்றுக் கொண்டவர்களாக இருப்போம்?! என யோசியுங்கள்.
பெரும்பாலானோரால் நிச்சயமாக அமானைப் போல குழந்தைக்கு பாதுகாப்பான ஒரு ஏற்பாட்டைச் செய்யும் வரை தங்களது அன்றாட வேலைகளை ஒத்திப் போட்டு விட்டு காத்திருந்திருக்க முடியுமா? அல்லது காத்திருக்கும் எண்ணமாவது பலருக்கு வந்திருக்குமா? என்பதே பெருத்த ஐயத்திற்குரிய விஷயமே! ஆனால் அமான் அந்தக் குழந்தையை கை விடவில்லை. இத்தனைக்கும் இம்மாதிரியான வாய்ப்புகளை எல்லாம் பெரும்பாலும் நம்மில் பலர் திரைப்படங்களில் தான் கண்டிருப்போம். ஆனால் அது இப்படி கண் முன்னே நிகழும் போது எல்லோரையும் போல அமானுக்கும் என்ன செய்வதென்று தெரியாத ஒருவிதக் குழப்பமே மிஞ்சியிருக்கிறது. கையில் குழந்தையுடன் அமான் தெருவில் நின்று கொண்டு அடுத்து என்ன செய்வதெனப் புரியாமல் திகைத்த போது அவரைக் கடந்து சென்ற நம்மைப் போன மக்கள் அனைவருமே கூட ஆச்சர்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு கடந்து சென்றார்களே தவிர பெரும்பாலானோர் அமானுக்கு உதவ முன்வரவில்லையாம். முடிவில் அமான், தனக்கு தகவல் தந்து  உதவிய ஒரு சில நல்ல உள்ளங்களின் உதவியுடன் தானாகவே குழந்தையின் பாதுகாப்புக்கு ஒரு உரிய வழியைக் கண்டறிந்தார். ஆம், கடைசியில் மும்பை காவல்துறையின் உதவியை நாடினார் அமான்.
காவல்துறையின் உடனடி நடவடிக்கையை அடுத்து, இப்போது அந்தப் பிஞ்சு சிசு பாதுகாப்பாக ஒரு அரசுக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு விட்டது. குழந்தைக்கு கடுமையான சளி பாதிப்பு இருப்பதால் மருத்துவமனை சிகிச்சைக்கு தற்போது உட்படுத்தப்பட்டிருக்கிறது. நாளை அதற்கொரு நல்ல பெற்றோர் கிடைக்கலாம்.

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...