Skip to main content

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஒரே நேரத்தில் அரையாண்டு தேர்வு

சேலம்: நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, ஒரே நேரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதிப்பெண்களும், ஒவ்வொரு பாடத்துக்கும், 200 லிருந்து, 100 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கு, முன்னோட்டமாக, அனைத்து பாடங்கள் உள்ளடக்கி, அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, டிசம்பர், 7 முதல், 23 வரை, அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. வழக்கமாக, பிளஸ் 1 வகுப்புக்கும், பிளஸ் 2வுக்கும், வேறு வேறு தேதிகளிலும், காலை, மாலை என மாற்றி நடத்தப்படுவது வழக்கம்.
நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2வுக்கு தேர்வு நடக்கும், அதே நாளில், அதே நேரத்தில், பிளஸ் 1க்கும் தேர்வு நடத்தப்படுகிறது, டிசம்பர், 7 - தமிழ் முதல்தாள், டிசம்பர், 8- தமிழ் இரண்டாம்தாள், டிச., 11- ஆங்கிலம் முதல்தாள், டிசம்பர் 12- ஆங்கிலம் இரண்டாம்தாள், டிச., 14- கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், டிச., 15- உயிரியல், தாவரவியல், வரலாறு, டிச., 18 - கணிதம், விலங்கியல், டிச., 19 - வணிகவியல், புவியியல், டிச., 21- வேதியியல், கணக்கு பதிவியல், டிச., 23- இயற்பியல், பொருளியல் தேர்வுகள் நடக்கின்றன.
பிளஸ் 2, பிளஸ் 1 இரு வகுப்புகளுக்கும், காலை, 10:00 மணி முதல், மதியம், 1:15 மணி வரை தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

Comments

 1. Aadhanala yenna anon mam...
  Nanga padicha dhane!!!#!

  Eppo yenna,panvinga!!!
  Eppo yenna panvinga!!!
  Eppo yenna,panvinga!!!!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிந்தனைச் சிதறல்..

மனம் ஒருமுகப்பட.. *காற்று ஒருமுகப்பட புயலாகிறது! மேகம் ஒருமுகப்பட மழையாகிறது.!  நீர் ஒருமுகப்பட நதியாகிறது!  நதி ஒருமுகப்பட கடலாகிறது!  மனம் ஒருமுகப்பட வெற்றி உருவாகிறது!  உங்களைக் கையாள மூளையைப் பயன்படுத்துங்கள்! மற்றவரைக் கையாள இதயத்தைப் பயன்படுத்துங்கள்!  இதயத்தைக் கவர்ந்துவிட்டு, எதைச் செய்தாலும், அது இணக்கமாகவே இருக்கும்.  வாயில் உதிரும் வார்த்தைகளை விட இதயத்திலிருந்து உதிரும் வார்த்தைகளால் அன்பு மலரும்! அன்பே ஆனந்தம் தரும்.*_ கோபம் ஒரு சுயதண்டனை, அடுத்தவர் செய்த தவறுக்கோ அல்லது அடுத்தவர் தவறு செய்திருக்கலாம் என்ற நிலையிலோ நமக்கு நாமே கொடுத்துக் கொள்கிற தண்டனைதான் கோபம்!  கோபத்தில் நடிப்பிருக்கலாம்! துடிப்பிருக்கக்கூடாது!*_  *உறவுகள் கூட நிலவைப் போன்று தான்..!* *"தூரத்தில்" இருக்கும் வரை* *ரசித்துக் கொண்டாடப்படும்..!!* *எதிர்பார்ப்பை* *குறைத்துக் கொள்ளுங்கள்..!* *ஏமாற்றத்தால் சோர்வடையத்* *தேவையில்லை..!!* *அன்று "வயதைப்"* *பார்த்து வந்தது..* *இன்று "வசதியைப்"* *பார்த்து தான் வருகிறது..!!* *"மரியாதை"* *செல்லும் பாதை*  *சரியானதாக இல்லாத போது..*

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல.

படித்ததில் பிடித்தது..

 கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான். ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ  நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!” என்றான். கடவுள் உடனே,  “ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார். விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது. ”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது,  மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான். மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது. அறுவடைக் காலமும் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான். அதிர்ந்தான்.. உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி