சென்னை மழை: தற்போது உள்ள சூழ்நிலையில் சென்னையில் கனமழை இல்லை, மிதமான மழை இருக்கும் என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன், விரைவில் மலேசிய கடலிலிருந்து காற்றழுத்த தாழ்வு ஒன்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் முக நூல் பதிவு:
“சென்னையில் இன்று இரவு அல்லது நாளை காலையில் இருந்து டிசம்பர் 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புண்டு. கனமழை இருக்க வாய்ப்பில்லை. இன்று இரவு மழை இல்லாவிட்டாலும், நாளை காலையில் இருந்து மழை இருக்கும். கவலைப்படும் அளவுக்குமழை இருக்காது.
மலேசிய கடலில் இருந்து காற்றழுத்த தாழ்வு ஒன்று உருவாகி அந்தமான் வழியாக வருகிறது. இது புயலாக மாற அனைத்து சாத்தியங்களும் உள்ளன. அதன் அழுத்தம் குறைவாக இருப்பதால், புயலாக வேகமாக மாறும். இது குறித்த சிறப்பு பதிவை நான் பின்னர் பதிவிடுகிறேன். அடுத்த வாரத்தில் மழை தொடர்பாக நான் பிஸியாகிவிடுவேன்.
முதலில் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யட்டும். அதன்பின் மற்றவற்றை பார்க்கலாம். நமக்கு அதிகநேரம் இருப்பதால், இப்போதே புயல் குறித்து பதிவு தேவையில்லை. ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அடுத்து நான் பதிவிடுகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment